நமது கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் நமக்கு சர்க்கரை நோய் ஏற்படும். பெரும்பாலும் சர்க்கரை நோய் வருவதற்கான காரணம் மரபு ரீதியாக தான் வரும் ஆம் உங்களது முந்தைய தலைமுறைகள் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, போன்ற ரத்தம் சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கு சர்க்கரை நோய் பிரச்சினைகள் இருந்தால் உங்களுக்கும் பிற்காலத்தில் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும். இந்த உலகத்தில் சர்க்கரை நோயின் மையம் என்று எடுத்துக் கொண்டால் அது நம் இந்தியா தான்.
ஏனென்றால் 35 நபர்கள் தாண்டிய பெரும்பாலன மக்களுக்கு சக்கரை நோயின் தாக்கம் உள்ளது என உலக சுகாதார மையம் அமைப்பு தெரிவித்துள்ளது. சர்க்கரை நோய் ஏற்பட்டால் நாம் உடலில் தலைப்பகுதியில் இருந்து கால் பகுதி வரை அனைத்து உடல் உறுப்புகளையும் பாதிக்கும் தன்மை சர்க்கரை நோய்க்கு உண்டு. இதனால் நம் உடம்பில் உள்ள ரத்த நாளங்களை சேதப்படுத்தி நமக்கு வலிப்பு, மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் வருவதற்கா வழி வகுக்கிறது. ஆம் ஆகையால் இன்று சர்க்கரை நோய் இருந்தால் நம் உடம்பில் என்னென்ன அறிகுறிகள் தென்படும் என்பதை பற்றி இந்த உடல் நலம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்.
அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க.
சக்கரையின் அளவு
நீங்கள் தினசரி உணவு சாப்பிட்டு இரண்டு மணி நேரங்கள் கழித்து உங்கள் உடலில் உள்ள சர்க்கரை அளவு 180 இருந்தாலோ அல்லது உணவு சாப்பிடுவதற்கு முன்னதாக 8 மணி நேரம் சாப்பிடாமல் இருந்தால். அந்நேரம் நம்ம உடம்பில் உள்ள ரத்தத்தின் சர்க்கரை அளவு 100-ல் இருந்து 125 என்று இருந்தால் உங்கள் உடம்பில் உள்ள ரத்ததின் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது.
தாகம்
உங்களுக்கு அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது என்றால் இதுவும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.
சிறுநீர்
உங்களுக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும் பிரச்சனை இருந்தால் உங்கள் உடலில் அடிக்கடி சக்தி இல்லாம போவதுமாக இருந்தால் உங்கள் உடலில் உள்ள ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது என்ற ஒரு அர்த்தம்.
உடல் எடை
உங்கள் உடம்பில் உள்ள ரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் பட்சத்தில் திடீரென்று உங்கள் உடல் எடை குறைந்து மெலிந்த தோற்றம் அடைந்து காணப்படுவீர்கள்.
கண் குறைபாடு
மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அது நமது கண்களையும் பாதிக்கும். நம் கண் நரம்புகளை பாதித்து விரைவில் பார்வை குறைபாடு வந்துவிடும்.
கால் பகுதி
நம்ம உடம்பில் சர்க்கரை நோய் இருந்தால் கால் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு நம் கால்பகுதியில் உணர்வுகள் இல்லாமல் போகு கூச்ச உணர்வுகள் ஏற்படுவது இதுவும் ஒரு அறிகுறி தான்.