Advertisement
ஸ்வீட்ஸ்

வாயில் வைத்தவுடன் கரையும் சுவையில் கேரட் அல்வா மிஸ் பண்ணாம இப்படி செய்து பாருங்க!

Advertisement

அல்வா என்றதுமே பலருக்கும் ஞாபகத்திற்கு வருவது திருநெல்வேலி அல்வா தான். திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா என்றால் தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். அதே போல் தான் காரட் வைத்து செய்யும் இந்த காரட் அல்வாவும் இதன் சுவை பிரமாதமாக இருக்கும். அது மட்டும் இன்றி மற்ற அல்வாக்களை போல் இல்லாமல், இதை செய்வது மிக மிக சுலபம் செலவும் மிகக் குறைவு, நேரமும் குறைவு .

காரட் மட்டும் சேர்த்து சமைத்து பெரும்பாலும் யாரும் சாப்பிடுவதில்லை! காரட் அடிக்கடி சாப்பிட்டால் இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும். காரட் அல்வா வீட்டிலேயே எப்படி எளிமையான முறையில்  அல்வா தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். நாவில் வைத்ததும் கரைந்து போகும் சுவையான காரட் அல்வா எப்படி செய்வது? இனி பார்ப்போம்.

Advertisement

காரட் அல்வா | Carrot Halwa Recipe In Tamil

Print Recipe
அல்வா என்றதுமே பலருக்கும் ஞாபகத்திற்கு வருவது திருநெல்வேலி அல்வா தான். திருநெல்வேலி இருட்டுக் கடைஅல்வா என்றால் தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். அதே போல் தான் காரட் வைத்து செய்யும்இந்த காரட் அல்வாவும்இதன்
Advertisement
சுவை பிரமாதமாக இருக்கும். அது மட்டும் இன்றி மற்ற அல்வாக்களை போல் இல்லாமல்,இதை செய்வது மிக மிக சுலபம் செலவும் மிகக் குறைவு, நேரமும் குறைவு காரட் அல்வா வீட்டிலேயே எப்படி எளிமையான முறையில்  அல்வா தயாரிப்பது? என்பதை தான் இந்தபதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். நாவில் வைத்ததும் கரைந்து போகும் சுவையானகாரட் அல்வா எப்படி செய்வது? இனி பார்ப்போம்.
Advertisement
.
Course Dessert
Cuisine tamilnadu
Keyword Carrot Halwa
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/2 கிலோ காரட்
  • 1 கப் சர்க்கரை
  • 25 கிராம் பால் பவுடர்
  • 1/2 கப் நெய்
  • 10 முந்திரிபருப்பு
  • 10 பாதாம்
  • 5 ஏலக்காய்

Instructions

  • காரட்டை துருவி ஒரு தேக்கரண்டி நெய்யில் வதக்கி பாலும், தண்ணீரும் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
  • ஆறவிட்டு மிக்ஸியில் நைசாக அரைக்கவும். வாணலியில்அரைத்த விழுதைப் போட்டுக் கிளறவும்.
  • சர்க்கரை,பால் பவுடரை நன்கு கலந்து வைக்கவும். கிளறும் விழுது சற்று கெட்டியானதும் சர்க்கரைக் கலவை சேர்த்து கைவிடாமல் கிளறவும். கேஸை சிம்மில் வைக்கவும்.
  • நன்குசேர்ந்து கொண்டதும், நெய்யைச் சிறிது சிறிதாக விடவும். 7. ஹல்வா பதம் வந்ததும் ஏலப்பொடி, நெய்யில்வறுத்த முந்திரி, பாதாம் சேர்த்து இறக்கவும்.

Notes

சூடாகவோ, குளிர வைத்தோ சாப்பிடலாம். எளிதில் செய்யக்கூடிய சுவையான அல்வா இது.

Nutrition

Carbohydrates: 0.9g | Protein: 0.1g | Fat: 0.4g | Sodium: 2.3mg | Potassium: 11mg | Fiber: 0.3g | Vitamin A: 122IU | Vitamin C: 0.4mg | Calcium: 5.3mg | Iron: 0.1mg
Advertisement
Prem Kumar

Recent Posts

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

3 நிமிடங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

59 நிமிடங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

5 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

5 மணி நேரங்கள் ago

கடன் பிரச்சனைகள் தீர செவ்வாய்க்கிழமை முருகனை வேண்டி இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

அனைவரும் ஏதோ ஒரு வகையில் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதாரண மனிதர்கள் வரை, ஞானியர்கள் வரை அனைவரும் கடன்…

5 மணி நேரங்கள் ago

ருசியான குடைமிளகாய் ஈரல் பெப்பர் வறுவல் இப்படி செய்து பாருங்கள், வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள்!

மட்டன் சிக்கன் பிடித்தவர்களுக்கு பெரும்பாலும் ஈரல் பிடிக்காது. ஆனால் ஈரல் பிடித்தவர்களுக்கு ஈரல் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று தோன்றும்…

6 மணி நேரங்கள் ago