Advertisement
ஸ்நாக்ஸ்

சுட சுட சூப்பரான முட்டை பணியாரம், உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!

Advertisement

முட்டையில் பணியாரமா என்று யோசிக்கிறீர்களா? நாம் கார பணியாரம் இனிப்பு பணியாரம் கருப்பட்டி பணியாரம் என பணியாரங்கள் சாப்பிட்டு இருப்போம். ஆனால் முட்டை பணியாரம் நம்மில் பல பேர் சாப்பிட்டு இருக்க மாட்டோம். இந்த முட்டை பணியாரம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்குமே மிகவும் பிடித்த வகையில் இருக்கும். அசைவ சமையல் செய்யும் பொழுது எப்பொழுதும் போல் அவிழ்த்த முட்டை அல்லது ஆம்லெட் வைக்காமல் இந்த முட்டை பணியாரத்தை செய்து வைத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

யாருக்காவது உங்கள் வீட்டில் விருந்து வைத்தால் கூட இந்த முட்டை பணியாரத்தை முயற்சி செய்து பார்க்கலாம் வீட்டிற்கு வருகிற விருந்தாளிகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த முட்டை பணியாரம் செய்வதற்கு நீண்ட நேரம் எதுவும் ஆகாது சட்டென செய்து முடித்து விடலாம். ஒரு ஆம்லெட் போடுகின்ற நேரத்தில் நாம் ஏழு எட்டு முட்டை பணியாரங்கள் செய்து முடித்துவிடலாம் அந்த அளவிற்கு சட்டை என்று சுலபமான முறையில் செய்யக்கூடிய ஒன்றுதான் இந்த முட்டை பணியாரம். நாம் பிரெட் ஆம்லேட் சாப்பிட்டு இருப்போம். ஆனால் சில குழந்தைகளுக்கு மைதா மாவில் செய்த பிரெட்டை வைத்து கொடுக்கக் கூடாது என்பதால் நாம் மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு என்ன ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது என்று குழப்பமாக இருப்போம்.

Advertisement

ஆனால் இந்த முட்டை பணியாரத்தை நீங்கள் மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்னாக்ஸ் ஆக செய்து கொடுக்கலாம். மிகவும் ஆரோக்கியமான முறையில் இந்த ஸ்னாக்ஸ் அமையும். பொதுவாக குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை கொடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். அந்த வகையில் நாம் இந்த முட்டை பணியாரத்தை செய்து கொடுத்தால் ஆரோக்கியமானதாகவும் இருக்கும் அதே நேரத்தில் குழந்தைகள் வேண்டாம் என்று சொல்லாமலும் சாப்பிடுவார்கள். இந்த எளிமையான முட்டை பணியாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

முட்டை பணியாரம் | Egg Paniyaaram Recipe In Tamil

Print Recipe
Advertisement
உங்கள் வீட்டில் விருந்து வைத்தால் கூட இந்த முட்டை பணியாரத்தை முயற்சி செய்து பார்க்கலாம் வீட்டிற்குவருகிற விருந்தாளிகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த முட்டை பணியாரம் செய்வதற்கு நீண்டநேரம் எதுவும் ஆகாது சட்டென செய்து முடித்து விடலாம். ஒரு ஆம்லெட் போடுகின்ற நேரத்தில் நாம் ஏழு எட்டு முட்டை பணியாரங்கள் செய்து முடித்துவிடலாம் அந்த அளவிற்கு சட்டை என்றுசுலபமான முறையில் செய்யக்கூடிய ஒன்றுதான் இந்த முட்டை பணியாரம்.
Advertisement
ஆனால் சில குழந்தைகளுக்கு மைதா மாவில் செய்த பிரெட்டை வைத்துகொடுக்கக் கூடாது என்பதால் நாம் மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு என்ன ஸ்நாக்ஸ் செய்துகொடுப்பது என்று குழப்பமாக இருப்போம்.
Course snacks
Cuisine tamil nadu
Keyword egg paniyaram
Prep Time 5 minutes
Cook Time 9 minutes
Servings 4
Calories 61

Equipment

  • 1 குழிபணியார கல்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1 கப் இட்லி மாவு
  • 4 முட்டை
  • 8 சின்ன வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் சின்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய்பொடி பொடியாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
  •  
    ஒரு பாத்திரத்தில் முட்டைகளை போட்டு நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். அந்த முட்டைகளுடன் இட்லி மாவை கலந்துதேவையான அளவு உப்பு   சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு போட்டு தாளித்தவுடன் பச்சை மிளகாய் கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் அனைத்தையும் சேர்ந்து வதக்கி கொள்ளவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் அதையெல்லாம் முட்டை இட்லி மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • இப்போது பணியாரக்கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கலந்து வைத்துள்ள மாவை குழிக்குள் முக்கால் அளவிற்கு ஊற்றிக் கொள்ளவும். ஒரு பக்கம் வெந்தவுடன் மறுபக்கமும் திருப்பிப் போட்டு நன்றாக பொன்நிறமாகும் வரை வேக வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது சுட சுட சூப்பரான ஒரு முட்டை பணியாரம் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 61kcal | Carbohydrates: 7g | Protein: 1.2g | Potassium: 405mg | Calcium: 32mg | Iron: 1.2mg
Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

7 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

9 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

17 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

19 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago