Advertisement
சைவம்

மொறு மொறுனு டீ கடை கஜடா இப்படி செய்து பாருங்க! அதன் ரகசியம் இது தான்!

Advertisement

மாலையில் ஒரு கப் தேநீருடன் சிற்றுண்டிகளை அனுபவிப்பதை விட சிறந்தது எதுவுமில்லை. நீங்கள் எப்பொழுதும் வித்தியாசமான மற்றும் எளிதாகத் தயாரிக்க விரும்புகிறீர்கள் என்றால், சுவையான கஜடாவை நீங்கள் முயற்சி செய்யலாம். பொதுவாக நாம் டீ கடைக்கு சென்றால் டீயுடன் சேர்த்து சாப்பிடக்கூடிய ஒரு சுவையான தின்பண்டம் கஜடா.

இதனையும் படியுங்கள் : டீ கடை போண்டா இப்படி செய்து பாருங்க! மாலை நேரத்திற்கு ஏற்ற ஸ்நாக்ஸாக இருக்கும்!

Advertisement

டீ-க்கடை ஸ்நாக்ஸுக்கும் தனி ரசிகர் கூட்டம் உண்டு. அதில் இனிப்பு சுவை கொண்ட கஜடா அலாதியான சுவை கொண்டது. இது மிகவும் சுவையாகவும் மொறு மொறுப்பாகவும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியதாக இருக்கும். இனிப்பு சுவை கொண்ட கஜடா அலாதியான சுவை கொண்டது. அப்படி நீங்களும் இதை விரும்பி சாப்பிடக்கூடியவர் எனில் நினைத்த போதெல்லாம் சாப்பிட வீட்டிலேயே செய்து டப்பாவில் வைத்துக்கொள்ளுங்கள்.

டீ கடை கஜடா | Tea Kadai Kajada Recipe in Tamil

Print Recipe
மாலையில் ஒரு கப் தேநீருடன் சிற்றுண்டிகளை அனுபவிப்பதை விட சிறந்தது எதுவுமில்லை. நீங்கள் எப்பொழுதும் வித்தியாசமான மற்றும் எளிதாகத் தயாரிக்க விரும்புகிறீர்கள் என்றால், சுவையான கஜடாவை நீங்கள் முயற்சி செய்யலாம். பொதுவாக நாம் டீ கடைக்கு சென்றால் டீயுடன் சேர்த்து சாப்பிடக்கூடிய ஒரு சுவையான தின்பண்டம் கஜடா. டீ-க்கடை ஸ்நாக்ஸுக்கும் தனி ரசிகர் கூட்டம் உண்டு. அதில் இனிப்பு சுவை கொண்ட கஜடா அலாதியான சுவை கொண்டது. இது மாலை நேரங்களில் டீயுடன் சேர்த்து சாப்பிடக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ். மிகவும் சுவையாகவும் மொறு மொறுப்பாகவும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியதாக இருக்கும்.
Course snacks
Cuisine Indian
Keyword kajada
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People
Calories 388

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 1 கப் மைதா
  • 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • 1 டேபிள் ஸ்பூன் ரவை
  • 1/4 கப் தயிர்
  • 1/2 கப் சர்க்கரை
  • 1/2 கப் பால்
  • 2 சிட்டிகை சமையல் சோடா
  • 1 டீஸ்பூன் நெய்
  • 1 சிட்டிகை உப்பு
  • எண்ணெய் தேவையானஅளவு

Instructions

  • ஒரு பாத்திரத்தில் மைதா, அரிசி மாவு, ரவை, சமையல் சோடா, உப்பு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
  • ஒரு மிக்ஸியில் சக்கரை, ஏலக்காய் இரண்டையும் சேர்த்து பவுடராக்கி கொள்ளவும். பிறகு எடுத்து வைத்திருக்கும் தயிரை சர்க்கரை தூளுடன் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  • பின்னர் சக்கரை தயிர் கலவையை மைதா மாவுடன் சேர்த்து நன்கு கலந்து பிசையவும்.
  • பிறகு கொஞ்சம் பால் தெளித்து பிசையவும், அத்துடன் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து ஒரு மூடி போட்டு மூடி 10 நிமிடம் வைக்கவும்.
  • பிறகு உங்கள் விருப்பத்திற்கேற்ப, பெரியதாகவோ, சின்னதாகவோ உருண்டையாக உருட்டி கொள்ளவும்.
  • பின்னர் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து உருண்டைகளை ஒவொன்றாக எண்ணையில் போட்டு திருப்பி விட்டு வறுக்கவும்.
  • நன்கு வெந்து பொன்னிறமானதும் நன்றாக உப்பி, எல்லா பக்கவும் அழகா வெடிச்சு வரும் பொழுது எண்ணையில் இருந்து எடுத்து விடவும்.
  • அவ்வளவுதான் அருமையான தோற்றத்தில் கஜடா தயார். முட்டை சேர்த்து செய்ததுபோல் உள்ளே சப்டா, வெளியில் மொறு மோறுப்பாக மிக சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 388kcal | Carbohydrates: 72.9g | Protein: 11.59g | Fat: 1.02g | Saturated Fat: 0.19g | Sodium: 2.27mg | Fiber: 2.79g
Advertisement
Prem Kumar

Recent Posts

ஒரு தடவை இந்த கேரட் சௌசௌ மசாலா குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…

55 நிமிடங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ப்ரை பண்ணாம ஒரு தடவை இந்த மாதிரி ஆனியன் மீன் ரோஸ்ட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க

மீன் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு மீன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க…

60 நிமிடங்கள் ago

முள்ளங்கி துவையல் இப்படி செஞ்சு பாருங்க. அது முள்ளங்கி தொகைகள் தான் அப்படின்னு கண்டுபிடிக்கவே முடியாது

முள்ளங்கில துவையலா அப்படின்னு எல்லாரும் ஷாக்காவிங்க ஆனா நிஜமா இந்த முள்ளங்கி துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அது என்ன…

1 மணி நேரம் ago

மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. மில்க் ஷேக்கில் பல வகைகள் உள்ளன. சாக்லேட் மில்க்…

2 மணி நேரங்கள் ago

பண வரவு அதிகரிக்க வீட்டில் வைக்க வேண்டிய ஐந்து பொருட்கள்

வீட்டில் செல்வம் செழிக்க வேண்டும் என்றால் நாம் கடுமையாக உழைக்க வேண்டும் ஆனால் என்னதான் கடுமையாக உழைத்தாலும் நம் வீட்டில்…

4 மணி நேரங்கள் ago

அடுத்தமுறை கோதுமை தோசை செய்ய நினைத்தால் இப்படி மிளகு கோதுமை தோசை ட்ரை பண்ணி பாருங்க!

கோதுமை தோசையை வேண்டாம் என்று சொல்கிறார்களா? அப்படின்னா இந்த பொருளை எல்லாம் சேர்த்து பாருங்க, சட்னி கூட தொட்டுக்க வேண்டாம்…

5 மணி நேரங்கள் ago