டீ கடை போண்டா இப்படி செய்து பாருங்க! மாலை நேரத்திற்கு ஏற்ற ஸ்நாக்ஸாக இருக்கும்!

- Advertisement -

டீ கடை உருளைக்கிழங்கு போண்டா என்றாலே அதற்கு தனி இடம் உண்டு. மாலை நேரங்களில் சிறு சிறு டீ கடைகளில் விற்கப்படும் உணவாகும். அந்த கடைகளில் சுட சுட அப்படியே பொரித்து எடுக்கும் பொழுதே நாவில் எச்சில் ஊரும். ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். அதற்கு தனி பிரியர்களே இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : ருசியான டீக்கடை கொத்தமல்லி வடை இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

- Advertisement -

அந்தவகையில் நம் வீட்டிலேயே டீ கடை சுவையில் எப்படி உருளைக்கிழங்கு போண்டா செய்வதென்று தான் இன்று பார்க்கப்போகிறோம். மாலை வேலையில் டீ, காபிடன் இந்த போண்டா செய்து சாப்பிட்டால் அருப்புதமாக இருக்கும். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

potato bonda
Print
No ratings yet

டீக்கடை உருளைக்கிழங்கு போண்டா | Potato Bonda Recipe In Tamil

டீ கடை உருளைக்கிழங்கு போண்டா என்றாலே அதற்கு தனி இடம் உண்டு. மாலை நேரங்களில் சிறு சிறு டீ கடைகளில் விற்கப்படும் உணவாகும். அந்த கடைகளில் சுட சுட அப்படியே பொரித்து எடுக்கும் பொழுதே நாவில் எச்சில் ஊரும். ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். அதற்கு தனி பிரியர்களே இருக்கிறார்கள். அந்தவகையில் நம் வீட்டிலேயே டீ கடை சுவையில் எப்படி உருளைக்கிழங்கு போண்டா செய்வதென்று தான் இன்று பார்க்கப்போகிறோம். மாலை வேலையில் டீ, காபிடன் இந்த போண்டா செய்து சாப்பிட்டால் அருப்புதமாக இருக்கும்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: evening, Snack
Cuisine: Indian, TAMIL
Keyword: potato bonda, உருளைக்கிழங்கு போண்டா
Yield: 4 people
Calories: 124kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் கடலை மாவு
  • 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • ¼ டீஸ்பூன் மிளகாய் தூள் காரத்திற்கிறேற்ப
  • உப்பு தேவையான அளவு
  • பேக்கிங் சோடா ஒரு பின்ச்
  • 2 டீஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பொடியாக நறுக்கியது
  • 5 பல் பூண்டு பொடியாக நறுக்கியது
  • 2 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • கருவேப்பிலை கொஞ்சம்
  • 2 உருளைக்கிழங்கு
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • ½ டீஸ்பூன் கறிமசாலா தூள்
  • ½ டீஸ்பூன் பெருங்காய பொடி

செய்முறை

  • முதலில் நாம் வைத்திருக்கும் உருளைக்கிழங்கை நன்கு கழுவி பின் பாத்திரத்தை அடுப்பில் வைத்து உருளைக்கிழங்கை வேக வைத்து நன்கு மசித்து வைத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பேக்கிங் சோடா, மாவிற்கு தேவையான அளவு உப்பு, சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு, மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதங்கியதும்.
  • பின் நாம் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கறிமசாலா தூள், தேவையான அளவு உப்பு, பெருங்காய பொடி, சேர்த்து நன்கு கலந்து அதனை ஆறவிடவும்.
  • ஒரு கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருளைக்கிழகை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கரைத்து வைத்துள்ள மாவில் போட்டு எடுத்து எண்ணத்தில் போட்டு பொரித்து எடுக்கவும்.

Nutrition

Serving: 350G | Calories: 124kcal | Carbohydrates: 24g | Protein: 21g | Fat: 0.1g | Potassium: 472mg | Sugar: 0.5g