- Advertisement -
தண்டு கீரை கோடை மாதங்களில் மிகவும் பிரபலமானது, இந்த கீரையில் அதிக சத்துக்கள் உள்ளன. அதனால் வாரம் ஒருமுறை சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது. இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு வைத்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் கீரை பிடிக்காதவர்கள் கூட கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : சுவையான மணத்தக்காளி கீரை துவையல் செய்வது எப்படி ?
- Advertisement -
ஏன் அடுத்த முறையில் உங்களை இன்று போல் வைக்க சொல்லி கேட்பார்கள். அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இந்த தண்டுக்கீரை கூட்டு இருக்கும். அதனால் இன்று இந்த சுவையான தண்டுக்கீரை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.
தண்டுக் கீரை கூட்டு | Thandu Keerai Kootu Recipe In Tamil
இந்த கீரையில் அதிக சத்துக்கள் உள்ளன. அதனால் வாரம் ஒருமுறை சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது. இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு வைத்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் கீரை பிடிக்காதவர்கள் கூட கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். ஏன் அடுத்த முறையில் உங்களை இன்று போல் வைக்க சொல்லி கேட்பார்கள். அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இந்த தண்டுக்கீரை கூட்டு இருக்கும்.
Yield: 4 people
Equipment
- 1 வாணல்
தேவையான பொருட்கள்
- 200 கிராம் தண்டுக்கீரை நறுக்கியது
- ½ ஸ்பூன் கடுகு
- ¼ ஸ்பூன் பெருங்காயத்தூள்
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- 100 கிராம் துவரம் பருப்பு
- 1 ஸ்பூன் மிளகுத்தூள்
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- தேங்காய் துருவல் ஒரு கையளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் தடுக்கீரையை நார் நீக்கி நறுக்கிக்கொள்ளவும்.
- பிறகு துவரம் பருப்பு, மஞ்சள் தூள், பெருங்காய தூள், ஆகியவற்றை நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.
- பிறகு மற்றொரு பாத்திரத்தில் நறுக்கிய கீரை, மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்து அதனுடன் வேகவைத்த பருப்பு கலவையை சேர்த்து நன்கு கடைந்து தேங்காய் துருவல் சேர்த்து வேக விடவும்.
- பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து கீரையில் சேர்த்து இறக்கவும்.
Nutrition
Carbohydrates: 66.25g | Fat: 7.02g | Potassium: 13.56mg | Fiber: 6.7g