Advertisement
ஆன்மிகம்

தைப்பூசம் அன்று முருகனுக்கு இருக்க வேண்டிய விரதம் மற்றும் அதனால் நமக்கு என்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

Advertisement

பொதுவாக தை மாதம் என்பது கடவுளுக்கு மிகவும் உகந்த ஒரு மாதம் ஆக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் பௌர்ணமியும் பூச நட்சத்திரமும் கூடிவரும் எனவே இது மிகச் சிறந்த ஒரு மாதமாகும். தைப்பூச தினத்தன்று தான் இந்த உலகம் தோன்றியது என ஒரு ஐதீகம் உள்ளது. இந்த தைப்பூச தினம் ஆனது வியாழக்கிழமை வருவதால் முருகனுக்கு மட்டுமில்லாமல் சிவனுக்கும் குரு பகவானுக்கும் உகந்த ஒரு நாளாகவும் உள்ளது.எனவே தைப்பூசத்தன்று நாம் விரதம் இருந்து முருகனிடம் என்ன கேட்டாலும் அது கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

தைபூசம் எப்பொழுது வருகிறது

முருக பக்தர்கள் தைப்பூசத்திற்காக 48 நாட்கள் விரதம் இருந்து அந்த முருகனை தரிசிப்பார்கள். தை ஒன்றாம் தேதி பொங்கல் பண்டிகைக்கு அடுத்தபடியாக அனைவரும் எதிர்பார்ப்பது தைப்பூசத்திற்காகத்தான். முருகப்பெருமானுக்கு உகந்த தினங்கள் நிறைய இருந்தாலும் தைப்பூசமானது மிகவும் சிறந்த ஒரு நாளாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசம் வருவதால் அதிலும் வியாழக்கிழமை வருவதால் குரு பகவானுக்கு உகந்த நாளாகவும் உள்ளதால் இந்த வருட தைப்பூசம் மிகவும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.

Advertisement

ஜனவரி 25ம் தேதி காலை 9.14 மணி முதல் அடுத்த நாள் ஜனவரி 26ம் தேதி காலை 11.07 மணி வரை பூசம் நட்சத்திரம் உள்ளதால் 25ம் தேதியே தைப்பூசம் ஆக கொண்டாடப்படுகிறது. இந்த குறிப்பிட்ட நேரத்தில் பூசம் நட்சத்திரம் வருவதால் 25 ஆம் தேதி விசேஷமாக முருகனுக்கு உகந்த தைப்பூசம் பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் ஜனவரி 24ம் தேதி இரவு 10.44 மணி முதல் தைப்பூச தினமான 25ம் தேதி இரவு 11.56 மணி வரை பௌர்ணமி திதியும் வருகிறது‌. எனவே இது இன்னும் கூடுதல் சிறப்பாக உள்ளது.

தைப்பூசம் அன்று கடைபிடிக்க வேண்டிய விரத முறை
Advertisement

ஜனவரி 25ஆம் தேதி காலையிலிருந்து மாலை வரியில் பூசம் நட்சத்திரம் அதாவது தைப்பூசம் இருப்பதால் அன்று காலை முதல் மாலை வரை பால் மற்றும் பழம் மட்டும் சாப்பிட்டுவிட்டு அந்த முருகப்பெருமான நினைத்து உபவாசம் இருந்தால் நாம் நினைத்ததெல்லாம் நடக்கும். அதோடு காலை மாலை என

Advertisement
இரு வேலைகளிலும் முருகன் கோவிலுக்கு சென்ற முருகனை தரிசித்து வருவது இன்னும் சிறப்பானது. தைப்பூச தன்று முருகனை மட்டுமில்லாமல் முருகப்பெருமானின் வேலையும் சேர்த்து தரிசித்தால் நாம் நினைத்ததெல்லாம் முருகனிடம் வேண்டியதெல்லாம் கிடைக்கும்.

முருகப்பெருமானின் அன்னையான பார்வதி தேவி முருகப்பெருமானுக்கு வேலை வழங்கிய நாள் தைப்பூசம் தான் எனவே நம் முருகப்பெருமானோடு சேர்த்த வேலையும் வணங்குவது மிகவும் நல்லது. அந்த ஞானவேலை கொண்டே முருகப் பெருமான் அசுரர்களை வதம் செய்தார். எனவே நாம் முருகப் பெருமானின் வேலை வணங்குவதால் தீய சக்திகள் நம்மை அண்டாது என சொல்லப்படுகிறது.

ஒரு சில முருக பக்தர்கள் 48 நாட்கள் முருகனுக்கு விரதம் இருப்பார்கள். அப்படி 48 நாட்கள் விரதம் இருக்க முடியவில்லை என்றால் தைப்பூசம் அன்று காலை முதல் நாளை வரை முருகனையும் முருகப்பெருமானின் வேலையும் நினைத்து விரதம் இருக்கலாம். அப்படி நாம் விரதம் இருப்பதால் தீய சக்திகள் நம்மை அண்டாமல் நம்மிடம் செல்வமும் உயரும் அதே சமயத்தில் நோய் நொடிகளும் நம்மை அண்டாது. தைப்பூச தினத்தன்று முருகனை மட்டுமில்லாமல் சிவபெருமானையும் குரு பகவானையும் வழிபடுவது இன்னும் கூடுதல் சிறப்பாகும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

1 நிமிடம் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

4 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

4 மணி நேரங்கள் ago

கடன் பிரச்சனைகள் தீர செவ்வாய்க்கிழமை முருகனை வேண்டி இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

அனைவரும் ஏதோ ஒரு வகையில் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதாரண மனிதர்கள் வரை, ஞானியர்கள் வரை அனைவரும் கடன்…

4 மணி நேரங்கள் ago

ருசியான குடைமிளகாய் ஈரல் பெப்பர் வறுவல் இப்படி செய்து பாருங்கள், வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள்!

மட்டன் சிக்கன் பிடித்தவர்களுக்கு பெரும்பாலும் ஈரல் பிடிக்காது. ஆனால் ஈரல் பிடித்தவர்களுக்கு ஈரல் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று தோன்றும்…

5 மணி நேரங்கள் ago

இந்த கோடை வெயிலுக்கு இதமாக உங்கள் குழந்தைகளுக்கு குளு குளு நுங்கு கீர் செய்து கொடுங்கள் மிகவும் சுவையாக இருக்கும்!!

எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது…

6 மணி நேரங்கள் ago