Advertisement
காலை உணவு

ஆரோக்கியம் நிறைந்த தினை இனிப்பு பணியாரம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Advertisement

தோசை முதல் இட்லி மற்றும் சாம்பார் வரை தென்னிந்திய உணவு எல்லாமே ஆரோக்கியம் தான். தென்னிந்திய உணவு வகைகளில் பெரும்பாலான உணவுகள் எல்லா நேரத்திலும் பிடித்த தேர்வாக அமைகின்றன. ஒவ்வொரு உணவிலும் சில தனித்துவமான உணவுகள் உள்ளன. அத்தகைய ஒரு சுவையான தென்னிந்திய சிற்றுண்டி தான் குழி பணியாரம். டயட்டில் இருப்போர் காலை வேளையில் தானியங்களை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. பொதுவாக உடல் ஆரோக்கியத்திற்கு சிறுதானிய உணவுகளை நன்றாக சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். சிறுதானியங்கள் உடல் எடை குறைப்பிற்கும் உதவுகிறது. சிறுதானியங்களைக் கொண்டு நாம் ஏராளமான உணவுகளை செய்யலாம். சிறுதானிய இட்லி, சிறுதானிய தோசை, சிறுதானிய தயிர் சாதம், ஆகியவை மிகவும் பிரபலமாகும். அத்தகைய தானியங்களில் ஒன்று தான் தினை.

இந்த தினையைக் கொண்டு உப்புமா, பணியாரம், இட்லி என்று எது வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். இது செரிமானத்தை எளிதாக்குகிறது. இதுவரை அரிசி மாவைக் கொண்டு தான் பணியாரம் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் தானியங்களில் ஒன்றான தினையைக் கொண்டு பணியாரத்தை செய்து சுவைத்ததுண்டா? இல்லையெனில் ஒரு முறை‌ முயற்சி செய்யுங்கள். காலை முதல் மாலை வரை புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த டிபனை காலை உணவாக சாப்பிடலாம். மேலும் இந்த தினை குழிப்பணியாரமானது இனிப்பானது என்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். சிறுதானியங்களை குழந்தைகள் சாப்பிடுவதை தவிர்ப்பர். சுவையாக இருக்காது என்பர். அதனால் அவற்றை அவர்களுக்கு பிடித்த விதத்தில் இப்படி குழி பணியாரம் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

Advertisement

தினை இனிப்பு பணியாரம் | Thinai Sweet Paniyaram Recipe In Tamil

Print Recipe
பொதுவாக உடல் ஆரோக்கியத்திற்கு சிறுதானிய உணவுகளை நன்றாக சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். சிறுதானியங்கள் உடல் எடை குறைப்பிற்கும் உதவுகிறது. சிறுதானியங்களைக் கொண்டு நாம் ஏராளமான உணவுகளை செய்யலாம். சிறுதானிய இட்லி, சிறுதானிய தோசை,
Advertisement
சிறுதானிய தயிர் சாதம், ஆகியவை மிகவும் பிரபலமாகும். அத்தகைய தானியங்களில் ஒன்று தான் தினை. இந்த தினையைக் கொண்டு உப்புமா, பணியாரம், இட்லி என்று எது வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். இது செரிமானத்தை எளிதாக்குகிறது. இதுவரை அரிசி மாவைக் கொண்டு தான் பணியாரம் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் தானியங்களில் ஒன்றான தினையைக் கொண்டு பணியாரத்தை செய்து சுவைத்ததுண்டா? இல்லையெனில் ஒரு முறை‌ முயற்சி செய்யுங்கள்.
Course Breakfast, evening
Cuisine Indian
Keyword Thinai Sweet Paniyaram
Advertisement
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People
Calories 151

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 குழிபணியார கல்

Ingredients

  • 1 கப் தினை
  • 1 1/2 கப் நாட்டு சர்க்கரை
  • 2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம்
  • 1/4 டீஸ்பூன் உப்பு
  • 1/4 கப் நெய்

Instructions

  • முதலில் திணை அரிசியை நன்கு கழுவி ஒரு துணியில் காய வைத்து எடுத்து பின் ஒரு மிக்ஸி ஜாரில் தினை மற்றும் வெந்தயம் சேர்த்து நன்கு பொடித்து சலித்து எடுத்துக்கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து பாகு காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு பவுளில் தினை மாவு, சர்க்கரை பாகு, தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
  • ஒரு‌ பணியார சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் சேர்த்து பணியார மாவை ஊற்றவும். பணியாரம் இருபுறம் வெந்ததும் எடுத்து விடவும். அவ்வளவுதான் மிகவும் சுவையான, சத்தான திணை இனிப்பு பணியாரம் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 151kcal | Carbohydrates: 6.2g | Protein: 12.3g | Fat: 4.3g | Sodium: 4mg | Potassium: 250mg | Fiber: 6.7g | Sugar: 2.9g | Calcium: 31mg | Iron: 8.2mg

இதனையும் படியுங்கள் : காலை டிபனுக்கு சூப்பரான தினை பால் பொங்கல் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

Advertisement
Prem Kumar

Recent Posts

சப்பாத்திக்கு, பூரிக்கு இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா செஞ்சு கொடுங்க நாலஞ்சு அதிகமாக சாப்பிடு வாங்க!

ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும்,…

4 மணி நேரங்கள் ago

டிபனுக்கு வழக்கம் போல் இல்லாமல் தக்காளி மசாலா பூரி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பூரி இந்தியாவின் புகழ் பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும்…

5 மணி நேரங்கள் ago

திருச்செந்தூர் முருகனுக்கும் வைகாசி விசாகத்திற்கும் இருக்கும் தொடர்!

புதமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பலவிதமான விழாக்கள் இருந்தாலும் உலக மக்களை காத்தருள்வதற்காக முருகப்பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது.…

6 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் தித்திக்கும் சுவையில் கேரட் கீர் இப்படி செய்து பாருங்க!

கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த…

7 மணி நேரங்கள் ago

மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான முட்டை கோலா உருண்டை ஒரு தடவை இப்படி செய்து பாருங்க!

பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…

11 மணி நேரங்கள் ago

ஆட்டி படைக்கும் அக்னி நட்சத்திரம் இன்னும் 2 வாரம் ரொம்ப ஜாக்கிரதையாக இருங்கள்

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

11 மணி நேரங்கள் ago