Advertisement
வீட்டு குறிப்பு

பழைய வெள்ளி புதுசு போல் மின்ன வேண்டுமா? சூப்பரான சில டிப்ஸ் இதோ!

Advertisement

என்னதான் நாம் தங்க நகைகளை அணிந்து கொண்டிருந்தாலும் தங்கத்தின் மேல் விருப்பம் உள்ளவர்களாக இருந்தாலும் வெள்ளி இருக்கும் மவுசு என்றுமே குறைந்தது கிடையாது. தங்கத்தில் எத்தனை நகைகள் போட்டிருந்தாலும் வெள்ளியில் காலில் கொலுசும் மெட்டியும் போடுவது அத்தனை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது. ஏன் வெள்ளியில் தான் கொலுசு மெட்டியும் போட வேண்டுமா? தங்கத்தில் போடக்கூடாதா? என்று கேட்பார்கள். காரணம் தங்கத்தை லட்சுமி தேவியாக பார்ப்பதால் தங்கத்தை காலில் அணிவது கிடையாது. வெள்ளி கொலுசுகளை காலில் அணியும் பொழுது அவை உடல் சூட்டை குறைக்கின்றன. மெட்டிகளை அணிவதால் அவை கர்ப்பப்பை நரம்புகளுக்கு ஒரு அழுத்தத்தை கொடுத்து கர்ப்பப்பை பிரச்சினைகளை சீராக்குகின்றன.

இத்தனை நன்மைகள் கொண்ட வெள்ளி அணிந்து வந்தால சில நாட்களில் எல்லாம் நிறம் மங்கி கறுத்து போய்விடும் காரணம் வெள்ளி காற்றோடு ஆக்ஸிஜனேற்றம் அடைவது தான். ஆகையால் இப்படி நிறம் மாறிய வெள்ளி கொலுசுகளை அல்லது வெள்ளி பாத்திரங்களை பூஜையறையில் பயன்படுத்தப்படும் வெள்ளி விளக்குகள் கலசங்கள் பூஜை பாத்திரங்கள் போன்றவை நிறம் மங்கி இருந்தாலும் பளிச்சென்று எப்படி மீண்டும் புதுசு போல் பொலிவோடு மின்ன வைப்பது என்பதை தெரிந்து கொள்ள இருக்கிறோம். மிக எளிமையாக வீட்டில் உள்ள பொருட்களை வைத்து வெள்ளியின் பழைய பொழிவை மீண்டும் கொண்டு வர இருக்கிறோம்.

Advertisement

1. பேக்கிங் சோடா மற்றும் அலுமினிய தாள்

இந்த முறை அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான ஒரு முறையாகும். இந்த முறையில் வெள்ளி பொருட்களை சுத்தப்படுத்தும் பொழுது அவை சில நிமிடங்களிலேயே புதிய நகைகள் போன்று பொலிவோடு காணப்படும். இந்த பேக்கிங் சோடா மற்றும் அலுமினிய தாளை பயன்படுத்தி நிறம் மங்கிய வெள்ளிகளை புது பொலிவுடன் கொண்டு வருவதற்கு 10 முதல் 30 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நீர் சூடானதும் இன்னொரு பாத்திரத்தில் அலுமினிய தாளை வைத்து அதில் சுடு தண்ணீரை ஊற்றி பேக்கிங் சோடாவை போட்டால் அது நுரைத்து வரும் அப்படி நுரைத்து வரும். அப்பொழுது நிறம் மங்கிய வெள்ளி பொருட்களை அதில் போட்டு இரண்டு முதல் மூன்று நிமிடம் ஊற வைத்து எடுத்து குளிர்ந்த நீரில் கழுவி விட்டு ஒரு நல்ல துணியை வைத்து துடைத்தால் நிறம் மாறிய வெள்ளி புதிதாக கடைகளில் வாங்கிய வெள்ளி போல் ஜொலிக்கும்.

2. எலுமிச்சை மற்றும் கல்உப்பு

இந்த எலுமிச்சை மற்றும் கல் உப்பும் அனைவரது வீடுகளிலும் பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும். இதில் ஒரு பாத்திரத்தில் எலுமிச்சையை சாறு பிழிந்து எடுத்து அதை கல் உப்பை சேர்த்து நன்றாக கரைந்ததும் கறுத்து மற்றும் நிறம் மாறிய வெள்ளியை

Advertisement
சேர்த்து ஒரு 15 நிமிடம் ஊற வைத்து எடுக்கவும். ஊறிய பின் எடுத்து தேய்த்து விட்டு அலசி பார்த்தால் பழைய கறுத்து போன வெள்ளியில் உள்ள அழுக்குகள் எல்லாம் கரைந்து போய் புதிது போல மினுமினுக்கும்.

3. துணி துவைக்கும் சோப்பு தூள்

ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீரை ஊற்றி அதில் சோப்பு தூள் கலந்து கொள்ள வேண்டும். அதில் வெள்ளி பாத்திரங்களை ஊற வைத்து 15 நிமிடம் கழித்து எடுத்து துடைத்தால் அதில் உள்ள அழக்கு கரைந்து வெள்ளி

Advertisement
பாத்திரங்கள் எல்லாம் பளிச்சென்று இருக்கும். வாங்கி பல வருடமான வெள்ளி பொருட்கள் கூட புத்தம் புது போல ஜொலிக்கும்.

4. கெட்சப்

கெட்சப்புகளை வெள்ளி பாத்திரங்களின் மீது தடவி ஒரு பத்து முதல் பதினைந்து நிமிடம்ஊற வைக்க வேண்டும். பிறகு நன்றாக தேய்த்து நீரில் கழுவினால் பொருட்கள் எல்லாம் புதிது போல பளபளப்பாக இருக்கும்.

5. வினிகர்

வினிகர், தண்ணீர், பேக்கிங் சோடா இது மூன்றும் சேர்த்து பாத்திரங்களை பள பளவென்று ஆக்குவதற்கு சிறந்தவையாக கருதப்படுகின்றன. இதற்கு ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் அரை கப் வினிகருடன் ரெண்டு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா போட்டு இரண்டு மணி நேரம் வெள்ளி பொருட்கள் அதில் உறவைத்து பிறகு கழுவி எடுத்தால் புதுசு போல மாறிவிடும்.

6. டூத் பேஸ்ட்

இன்னும் சுலபமாக வெள்ளிப் பாத்திரங்களை புதுசு போல் பொலிவுடன் மாற்றுவதற்கு சிறிது டூத் பேஸ்ட்டை எடுத்து வெள்ளி பாத்திரங்கள் அல்லது பொருட்கள் மீது வட்ட வடிவமாக தேய்த்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை ஊற விட்டு கழுவி எடுத்தோமானால் பாத்திரங்கள் பளிச்சென்று இருக்கும்.வெள்ளி பாத்திரங்களை அதிகமாக சுத்தம் செய்யும் போது வெள்ளியின் எடை குறைய ஆரம்பிக்கும். ஆகையால் வெள்ளி பொருட்கள் கறுத்து போகாமல் இருக்க காற்றுப்புகாத டப்பாககளில் போட்டு வைக்கலாம்.

இதனையும் படியுங்கள் : இந்த 10 பொருட்களை மறந்தும் கூட தானமாக அளித்து விடாதீர்கள்! உங்கள் வீட்டில் வறுமை கூட‌ ஏற்படலாம் !!!

Advertisement
Prem Kumar

Recent Posts

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

5 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

6 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

10 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

20 மணி நேரங்கள் ago