ஹோட்டலில் செய்வது போல சுவையான தக்காளி குருமா செய்வது எப்படி ?

thakkali
- Advertisement -

இன்று நாம் தக்காளி குருமா செய்வது எப்படி என்று இந்த தொகுப்பில் காணலாம். நீங்கள் திடீரென்று விருந்தினர்கள் யாராவது வருகிறார்கள் என்ற நிலை மற்றும் அவசரமாக குழம்பு ஒன்று வைக்க வேண்டும். இந்த மாதிரியான சூழ்நிலைகளில் வேகமாக செய்யக்கூடிய ஒன்று தான் இந்த தக்காளி குருமா. இந்த தக்காளி குருமாவை நீங்கள் சாதத்திலும், இட்லி, தோசை, பூரி இது போன்ற டிபன்களுக்கும் நீங்கள் எடுத்துக் கொண்டு நன்றாக சாப்பிடலாம். இப்போது தக்காளி குருமாவை எப்படி செய்யலாம், செய்வதற்கு தேவையான பொருட்கள், செய்யும் முறை இவை அனைத்தையும் தொடர்ந்து பார்க்கலாம்.

-விளம்பரம்-
Print
No ratings yet

Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: Breakfast, dinner, Main Course
Cuisine: Indian, இந்தியன்
Keyword: tomato kuruma, தக்காளி குருமா
Yield: 4
Calories: 62kcal

Equipment

  • 1 pressure cooker

தேவையான பொருட்கள்

  • ½ பெரிய வெங்கயம்
  • 4 தக்காளி
  • tbsp மஞ்சள்தூள்
  • 1 tbsp மிளகாய்த்தூள்
  • 1 tbsp உப்பு
  • 1 tbsp எண்ணெய்
  • 1 பிரியாணி இலை
  • 2 பட்டை
  • கடற்பாசி சிறுதளவு
  • ½ tbsp சோம்பு
  • ½ tbsp மல்லிதுள்
  • 5 கருவப்பிலை

தேங்காய் விழுது

  • 2 பெரிய வெங்காயம்
  • 1 tbsp இஞ்சி
  • 4 பூண்டு                          
  • 7 முந்தரிபருப்பு
  • 1 tbsp கசகசா
  • 1 tbsp சோம்பு
  • 2 பட்டை
  • 5 கிராம்பு
  • 1 கப் தேங்காய் துருவியது

செய்முறை

  • முதலில் குக்கரை அடுப்பில் வைத்து தாளிப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றிக் கொள்ளவும்.பின்பு 2 பீஸ் பட்டை, சிறிதளவு கடற்பாசி, அரை டீஸ்பூன் சோம்பு, ஒரு பிரியாணி இலை போட்டு நன்றாக தாளிக்கவும்.
  • பின்பு ஒரு பெரிய வெங்காயத்தில் பாதி அளவு வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் கருவேப்பிலை 4 இலைகளை போட்டு வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை நன்றாக வதக்கவும்.
  • பின்பு நான்கு தக்காளிகளை சின்ன சின்ன பீஸ்களாக நறுக்கி போட்டுக் கொள்ளவும் அதனுடன் 1/8 மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் மல்லித்தூள், 1 டீஸ்பூன் உப்பு, 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் போட்டு நன்றாக வதக்கவும்.
  • தக்காளி பச்சை வாடை போகும் வரை வேகவைத்து விட்டு, தேங்காய் விழுது ரெடி பண்ண ஆரம்பிக்க வேண்டும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் பெரிய வெங்காயம் 2 சின்ன வெங்காயமாக எடுத்து போடவும், 1 டீஸ்பூன் இஞ்சி, 3 பல் பூண்டு, 7 முந்திரி பருப்பு, 1 டீஸ்பூன் கசகசா, 1 டீஸ்பூன் சோம்பு, 2 பீஸ் பட்டை, 5 பீஸ் கிராம்பு, 1/2 கப் தேங்காய் இவற்றை சேர்த்து சிறிது அளவு தண்ணீர் ஊற்றி மையாக அரைத்து கொள்ளவும்.
  • இப்படி அரைத்துக் கொண்ட தேங்காய் விழுதை வெந்து கொண்டிருக்கும் தக்காளியுடன் போட்டு கிளறி விடவும் தேங்காயில் உள்ள பச்சை வாடை போகும் அளவிற்கு வேக வைக்கவும்.
  • அதன்பின்பு தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டு குக்கரை மூடி விட வேண்டும் பின்பு ஒரு விசில் வரும் வரை காத்திருந்து அடுப்பில் இருந்து இறக்கி விடவும் பொழுது சுவையான தக்காளி குருமா தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 4g | Calories: 62kcal | Fat: 33g | Sodium: 20mg
- Advertisement -

LEAVE A REPLY

Recipe Rating

Please enter your comment!
Please enter your name here