Advertisement
சைவம்

டிபன் பாக்ஸில் கொடுத்து விட அருமையான பச்சை பட்டாணி தக்காளி சாதம் இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

தக்காளி பட்டாணி சாதம் ஒரு காரசாரமான, சுவையான சாதம்,  குறிப்பாக இது லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்றதாகும். தக்காளி பட்டாணி சாதம்,  தக்காளி புலாவ், தக்காளி பாத், தக்காளி பிரியாணி என பலவிதங்களில் அழைக்கப்படுகிறது.  தமிழ்நாட்டில் தக்காளி சாதம் என்று கூறுகிறோம். பொதுவாக தக்காளி சாதம் செய்வதற்கு பட்டாணி சேர்த்து செய்ய வேண்டும்.. எலும்புகளுக்கு அதிக சத்துகளை தரக்கூடிய தக்காளி, பட்டாணியில், அருமையான ருசியில்… குழந்தைகளுக்கு பிடித்த சாதத்தை செய்து அசத்துங்க.வெங்காயம், பட்டாணி, தக்காளி, மட்டும் போதும், விருப்பப் பட்டால்  பீன்ஸ், போன்ற காய்கறிகள் சேர்த்துக் கொள்ளலாம்.

அதிகமான மசாலா வாசம் இல்லாமல், லேசான மசாலா வாசத்தில் ஒரு தக்காளி சாதம் எப்படி செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிக மிக சுலபமான முறையில் உங்கள் வீட்டில் இருக்கும் அரிசியை வைத்து இந்த தக்காளி சாதத்தை செய்து கொள்ளலாம். ஆனால் அவரவர் வீட்டு அரிசிக்கு ஏற்ப தண்ணீரை ஊற்றிக் கொள்வதும், விசில் வைப்பதும் மட்டும் தான் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம்.

Advertisement

தமிழ்நாட்டில் பல விதமான  கலந்த சாதம் செய்யப்படுகிறது . குறிப்பாக தேங்காய் சாதம்,  புளி சாதம், எலுமிச்சை சாதம், கத்திரிக்காய் சாதம், கொத்தமல்லி சாதம், கருவேப்பிலை சாதம் ஆகியவை புகழ்பெற்றவை.  கலந்த சாதங்கள் பொதுவாக மிச்சமான சாதத்தை வீணாக்காமல் செய்யப்படுவது, அல்லது காலை நேரங்களில் விரைவாக செய்வதற்காக செய்யப்படுகிறது.  வாருங்கள் இந்த தக்காளி பட்டாணிசாதத்தை சுலாபமாக செய்து விடலாம்.

தக்காளி பட்டாணி சாதம் | Tomato Peas Rice Recipe In Tamil

Print Recipe
தக்காளி பட்டாணி சாதம் ஒரு காரசாரமான, சுவையான சாதம்,  குறிப்பாக இது லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்றதாகும். தக்காளிபட்டாணி சாதம்,  தக்காளி புலாவ், தக்காளி பாத்,தக்காளி பிரியாணி என பலவிதங்களில் அழைக்கப்படுகிறது.  மசாலா வாசம் இல்லாமல், லேசான மசாலா வாசத்தில் ஒரு தக்காளி சாதம் எப்படி செய்வது என்பதைப்பற்றித்தான் இந்த
Advertisement
பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிக மிக சுலபமான முறையில்உங்கள் வீட்டில் இருக்கும் அரிசியை வைத்து இந்த தக்காளி சாதத்தை செய்து கொள்ளலாம்.ஆனால் அவரவர் வீட்டு அரிசிக்கு ஏற்ப தண்ணீரை ஊற்றிக் கொள்வதும், விசில் வைப்பதும் மட்டும்தான் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம்.
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword தக்காளி பட்டாணி சாதம்
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 493
Advertisement

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 2 கப் அரிசி
  • 4 தக்காளி
  • 1 வெங்காயம்
  • 1/2 கப் பட்டாணி
  • 2 பச்சை மிளகாய்
  • 2 டீஸ்பூன்  இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் தக்காளி சாஸ்
  • உப்பு தேவையான அளவு
  • 2 கப் தண்ணீர்
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்

Instructions

  • முதலில் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் இஞ்சி, பூண்டை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின்பு மிக்சிஜாரில் நறுக்கிய இஞ்சி, பூண்டை போட்டு மையாக அரைத்து பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.
  • பிறகு அடுப்பில் குக்கரை வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கியபின், நறுக்கி வைத்த வெங்காயத்தைப் போட்டு சிவக்க வதக்கியதும், அதனுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு குலையும் வரை வதக்கி கொள்ளவும்.
  • மேலும் தக்காளி நன்கு வதங்கியதும், அதில் பேஸ்ட்டாக அரைத்த இஞ்சி பூண்டு கலவையை போட்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கரண்டியால் நன்கு வதக்கியபின், பட்டாணியை போட்டு சில நிமிடம் நன்கு கிளறி விடவும்.
  • பின்னர் கிளறி விட்ட பட்டாணியானது நிறம் மாறிய பின், அதில் தக்காளி சாஸ், ருசிக்கேற்ப உப்பு தூவிய பின் நன்கு சில நிமிடம் நன்கு வதக்கியதும், சுத்தம் செய்த அரிசியை போட்டு, மசாலா அரிசியில் நன்கு படும்படி கிளறி விடவும்.
  • கடைசியில் கிளறி விட்ட கலவையுடன், தேவையான அளவு தண்ணீர் ஊற்றியபின், மூடி வைத்து நன்கு வேக வைத்து 3 விசில் வந்ததும் இறக்கி வைத்து பரிமாறினால், ருசியான தக்காளி பட்டாணி சாதம்.
     

Nutrition

Serving: 250g | Calories: 493kcal | Carbohydrates: 69g | Protein: 4.9g | Fat: 25g | Sodium: 16mg | Potassium: 432mg | Calcium: 32mg | Iron: 4.1mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

3 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

14 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

20 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

23 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

23 மணி நேரங்கள் ago