புற்றுநோயையை தடுக்கும் சக்தி, வீட்டில் நாம் சாதாரணமாக பயன்படுத்தும் மஞ்சளுக்கு உண்டு!

- Advertisement -

மஞ்சள்… மங்களகரமான ஒரு பொருள். அதேமாதிரி சமையலறையில உள்ள அஞ்சறைப் பெட்டியில மஞ்சளுக்கு முக்கியமான இடம் உண்டு. எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்கும்போதும் அங்க மஞ்சள் இருக்கும். அதே மாதிரி புதுசா ஒரு துணி வாங்குனாலும், நோட்டு புத்தகம் வாங்குனாலும் அதோட ஓரத்துல மஞ்சளை தடவி வைக்கிறது வழக்கம். வீட்டு வாசல்ல மஞ்சள் தண்ணி தெளிப்பாங்க. உடம்பு முழுக்க மஞ்சள் பூசி குளிக்கிற பழக்கமும் இருந்திச்சி. ஏன்… இந்தமாதிரி செஞ்சாங்கன்னா மஞ்சள் ஒரு கிருமிநாசினி. அதனாலதான் நம்ம முன்னோர் ஆரோக்கியமா இருந்தாங்க.

-விளம்பரம்-

வசீகரிக்கும் மஞ்சள்

மஞ்சள் பூசி குளிக்கிற பழக்கம் பெண்கள் மத்தியில இன்னும் இருக்கு. உடம்பு முழுக்க இல்லன்னாலும் பல பெண்கள் முகத்துல மஞ்சள் பூசிக் குளிக்கிறாங்க. உடல் பொன்னிறமாகுறதுக்கும் கெட்ட வாடை விலகுறதுக்கும் மஞ்சள் நல்லது. மஞ்சள் பூசுற பெண்களைப் பார்த்தா ஒரு வசீகரமான தோற்றம் இருக்கும். தலைவலி, நீர் கோத்தல், மூக்குல நீர் வடியுறது, வண்டுக்கடி இருந்தா அதையெல்லாம் சரிபண்றதோட புண் வராம பாதுகாக்கும். உடம்புல எந்த இடத்திலயாவது அடிபட்டா மஞ்சள் வைப்பாங்க. அந்தமாதிரி செய்யும்போது ரத்தக்காயம் புண்ணாகாது. அப்பிடியே புண்ணா மாறுனாலும் சீழ் பிடிக்காம பார்த்துக்கிடும்.

- Advertisement -

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

மஞ்சள்ல விரலி மஞ்சள்னு சொல்ற குச்சி மஞ்சளைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துறோம். சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய இந்த மஞ்சளை தீயில சுட்டு அதோட புகையை சுவாசிச்சா மூக்கடைப்பு தொல்லையில இருந்து விடுபடலாம். சளித்தொல்லையால அவதிப்படுறவங்க பாலோட மஞ்சள் சேர்த்துக் குடிக்கலாம். பூண்டு சேர்த்த வேக வச்ச பாலோட மஞ்சள்தூளும், மிளகுத்தூளும் சேர்த்து நல்லா கடைஞ்சி பனங்கல்கண்டு சேர்த்துக் குடிச்சா பலன் கிடைக்கும். மஞ்சள் கலந்த பாலை குடிக்கிறதால நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகுறதோட குடல், தோல் மட்டுமில்லாம மார்பகங்கள்ல புற்றுநோய் வராம பார்த்துக்கிடலாம்.

புற்றுநோய் குணமாக்கும்

புற்றுநோய் செல்களை தடுக்கக்கூடிய வல்லமை மஞ்சளுக்கு இருக்கு. கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கிட்டவங்களுக்கு வரக்கூடிய பக்கவிளைவுகளை மஞ்சள் குறைக்கும். குறிப்பா பச்சை மஞ்சள் ரொம்ப நல்லது. மஞ்சளை தனியா பயன்படுத்துறதைவிட மிளகு சேர்த்து பயன்படுத்துனா அதுல உள்ள குர்குமினை உடம்பு முழுசா உறிஞ்சிரும். அதேமாதிரி தேங்காய் சேர்த்துச் சாப்பிடுறதும் நல்லது. புற்றுநோயாளிகள்ல பலபேர் பசுமஞ்சளையும் தேங்காயையும் சேர்த்து அரைச்சி காலையில வெறும் வயித்துல குடிச்சி பலன் பெற்றிருக்காங்க.

மாதவிடாய்க்கோளாறு போக்கும்

சொறி, சிரங்கு வந்தா குப்பைமேனியோட மஞ்சள் சேர்த்து பூசி குளிக்கலாம். ரொம்ப எளிமையான மருத்துவம் இது. பெண்கள் மஞ்சளை சாப்பிட்டு வந்தா நீர்க்கட்டி வராம பார்த்துக்கிடலாம். தொடர்ந்து சாப்பிட்டு வந்தா மாதவிடாய்க்கோளாறு சரியாகுறதோட ஹார்மோன் பிரச்சினையும் சரியாயிரும். மஞ்சளையும், மிளகையும் அரைச்சி மோர்ல கலந்தும் குடிக்கலாம். ரத்தக்குழாய்ல அடைப்பு ஏற்படாம தடுக்கக்கூடிய சக்தியும் மஞ்சளுக்கு இருக்கு. அறுகம்புல்லோட விரலி மஞ்சளையும் சேர்த்து அரைச்சி வேனல் கட்டி, வியர்க்குரு உள்ள இடங்கள்ல தடவி குளிச்சிட்டு வந்தா அந்த பிரச்சினைகள் சரியாயிரும்.

-விளம்பரம்-

அளவுக்கு மீறினால் ஆபத்து

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறதோட உடம்புல வரக்கூடிய வீக்கத்தையும் குறைக்கும். ஆனா அளவுக்கு மீறுனா அது ஆபத்தை உண்டாக்கலாம். ஏன்னா உடம்புல உள்ள இரும்புச்சத்தை மஞ்சள் குறைச்சிரும். ஹீமோகுளோபின் உற்பத்தியாகணுன்னா இரும்புச்சத்து தேவை. அளவுக்கு அதிகமா மஞ்சள் சாப்பிட்டா அதை காலி பண்ணிரும். அதனால கவனமா இருக்கணும். அதேமாதிரி சிறுநீரக நோய்கள், சர்க்கரை நோய் உள்ளவங்க மஞ்சளை அளவுக்கு அதிகமா சேர்த்துக்கிட்டா அது பாதிப்பை உண்டாக்கலாம். ஏற்கெனவே நாம பலதடவை சொன்ன மாதிரி அளவுக்கு மீறுனா அமிர்தமும் நஞ்சுதான். மருந்தை மருந்தா அளவோட எடுத்துக்கிட்டா நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here