Advertisement
காலை உணவு

காலை உணவாக ருசியான வாழைப்பூ புட்டு‌ இப்படி செய்து கொடுத்து பாருங்கள்! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவார்கள்!

Advertisement

பொதுவாக நாம் எப்போதும் காலை உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டியது உள்ளது நாம் இப்பொழுதுதான் காலையில் உணவாக இட்லி, தோசை மற்றும் வெண்பொங்கல் போன்ற டிபன் வகைகளை செய்து சாப்பிட்டு வருகிறோம். ஆனால் நம் முன்னோர்கள் பாரம்பரியமாக காலையில் உணவாக பழைய கஞ்சி, கூல் வகைகள், புட்டு வகைகள் என உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உணவு வகைகளை மட்டும் தான் உணவாக எடுத்து கொண்டனர். வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தினமும் ஒரே உணவை சாப்பிட்டு அலுத்து போய் இருக்கும். அந்த வகையில் காலை உணவு வித்தியாசமான வகையில் இருக்க இன்று நாம் வாழைப்பூ புட்டு பற்றி தான் பார்க்க இருக்கிறோம். வாழைப்பழம் மட்டுமல்ல, அதன் பூவும், தண்டும் கூட மருத்துவ குணம் கொண்டவை.

வாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை கொண்ட காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்ள மாட்டோம். வாழைப்பூ துவர்ப்பு சுவை கொண்டிருந்தாலும் அளவற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. எனவே மாதத்தில் இரண்டு மூன்று நாள்களாவது வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது! அற்புத மருத்துவக் குணங்களைக் கொண்ட வாழைப்பூவில், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாமிர சத்து முதலிய சத்துக்கள் நிறைந்துள்ளன. பெண்களின் கர்ப்பப்பை நலன் காக்க வாழைப்பூ மிகவும் நல்லது. வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், மலட்டுத்தன்மை நீங்கி குழந்தைப்பேறு கிடைக்கும். வழக்கமாக நாம் அரிசி மாவு, ராகி மாவு அல்லது கோதுமை மாவு வைத்து தான் புட்டு செய்வோம். இன்று நாம் வாழைப்பூ சேர்த்து ஆரோக்கியமான மற்றும் சத்தான சுவையான புட்டை எளிமையாகவும் , சுவையாகவும் எப்படி செய்வதென்று பார்க்கலாம். இது சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதும் கூட.

Advertisement

வாழைப்பூ புட்டு‌ | Vazhaipoo Puttu Recipe In Tamil

Print Recipe
பொதுவாக நாம் எப்போதும் காலை உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டியது உள்ளது நாம் இப்பொழுதுதான் காலையில் உணவாக இட்லி, தோசை மற்றும் வெண்பொங்கல் போன்ற டிபன் வகைகளை செய்து சாப்பிட்டு வருகிறோம். ஆனால் நம் முன்னோர்கள் பாரம்பரியமாக காலையில் உணவாக பழைய கஞ்சி, கூல் வகைகள், புட்டு
Advertisement
வகைகள் என உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உணவு வகைகளை மட்டும் தான் உணவாக எடுத்து கொண்டனர். வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தினமும் ஒரே உணவை சாப்பிட்டு அலுத்து போய் இருக்கும். அந்த வகையில் காலை உணவு வித்தியாசமான வகையில் இருக்க இன்று நாம் வாழைப்பூ புட்டு பற்றி தான் பார்க்க இருக்கிறோம். வாழைப்பழம் மட்டுமல்ல, அதன் பூவும், தண்டும் கூட மருத்துவ குணம் கொண்டவை. வாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை கொண்ட காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்ள
Advertisement
மாட்டோம். வாழைப்பூ துவர்ப்பு சுவை கொண்டிருந்தாலும் அளவற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. எனவே மாதத்தில் இரண்டு மூன்று நாள்களாவது வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது!
Course Breakfast
Cuisine Indian
Keyword Vazhaipoo Puttu
Prep Time 15 minutes
Cook Time 15 minutes
Total Time 30 minutes
Servings 2 People
Calories 105

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 இட்லி பாத்திரம்
  • 1 வாணலி

Ingredients

  • 1 வாழைப்பூ
  • 1 கப் கடலை பருப்பு
  • 5 பல் பூண்டு
  • 6 வர ‌மிளகாய்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி, தயிர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்கவும்.
  • பின் ஒரு மிக்ஸி ஜாரில் வாழைப்பூவை தண்ணீர் வடித்து சேர்த்து அதனுடன் பூண்டு, வர மிளகாய், சோம்பு, உப்பு, ஊறவைத்த கடலை பருப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
  • பின் இட்லி பானையை அடுப்பில் வைத்து நாம் அரைத்து வைத்துள்ளதை இட்லி தட்டில் வைத்து பத்து நிமிடங்கள் வேகவிடவும்.
  • ஒரு வாணலியை‌ அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் ஏற்கனவே வேகவைத்த வாழைப்பூவை சேர்த்து வதக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான வாழைப்பூ புட்டு தயார்.

Nutrition

Serving: 450g | Calories: 105kcal | Carbohydrates: 27g | Protein: 4.3g | Fat: 1.7g | Sodium: 4mg | Potassium: 358mg | Fiber: 3.1g | Vitamin A: 2IU | Vitamin C: 17mg | Calcium: 5mg | Iron: 3.29mg

இதனையும்‌ படியுங்கள் : மழைக்கு இதமா சூடாக சாப்பிட ருசியான வாழைப்பூ கட்லெட் இது போன்று செய்து பார்க்காலாம்!

Advertisement
Prem Kumar

Recent Posts

சுவையான அத்திப்பழம் கீர் இனி சுலபமாக வீட்டிலயே செய்யலாம்! அவசியம் வீட்டில் ஒரு தரம் செய்து பாருங்க!

எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது…

11 மணி நேரங்கள் ago

மாலை நேரம் டீ & காபியுடன் ஸ்நாக்ஸாக சாப்பிட ஈஸி பிரெட் ரோல் ரெசிபி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

ரொம்பவே சுலபமா நம்ம வீட்ல இருக்கிற பிரெடை வைத்து ரொம்ப ரொம்ப ஈஸியா நம்ம செய்ய போறது தான் இந்த…

11 மணி நேரங்கள் ago

வீட்டில் இருக்கும் சகல பண பிரச்சனையை சரி செய்ய இந்த ஒரு பொருள் உங்கள் கையில் இருந்தால் போதும்!

சிலரது வீட்டிற்குள் எப்போதும் சண்டையும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும். மனித வாழ்க்கை என்றாலே பிரச்சனை இல்லாமல் இருக்க முடியாது, வாழ்க்கையில்…

12 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு இதமா மாம்பழ குச்சி ஐஸ் இப்படி வீட்டிலே செய்து பாருங்க! மாம்பழ சீசன் வந்துவிட்டது!

இந்த கொளுத்தும் வெயில் காலத்தில் மாம்பழ குச்சி ஐஸ் செய்தால், அதன் வரவேற்பு தனி தனி தான்.. வாங்க அப்படி…

12 மணி நேரங்கள் ago

அபார திறமையினால் வாழ்க்கையில் உச்சம் தொடும் இந்த சில ராசிகளில் பிறந்த பெண்கள்!!

பொதுவாக அனைவரும் வெற்றிபெறத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இது அனைவருக்கும் இலகுவாக நடந்துவிடுவது கிடையாது. பன்னிரெண்டு ராசிகளில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு…

14 மணி நேரங்கள் ago

10 நிமிடத்தில் சுவையான மற்றும் ஆரோக்கியமான துளசி பிரைட் ரைஸை வீட்டிலேயே செய்து பாருங்கள் ருசி மிகவும் அபாரமாக இருக்கும்!!

பிரைட் ரைஸ் பிரியர்கள் பிரியாணி பிரியர்களை விட அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர். பிரியாணிக்கு இணையான ஒரு டிஷ்…

15 மணி நேரங்கள் ago