Advertisement
சைவம்

வெங்காயம் தக்காளி இல்லாமல் சூப்பர் வெஜ் குருமா 10 நிமிடத்தில் தயார்,குக்கரில் ஒரே 1 விசில் விட்டால் போதும்.!!!

Advertisement

வெங்காயம் தக்காளி இல்லயென்றாலோ, சமையாழில் சேர்க்க முரடியாத நாடுகளிலோ இந்த குருமா ரெசிபியை ஒருவாட்டி உங்க வீட்டில ட்ரை பண்ணி பாருங்க. வெங்காயம் தக்காளி சேர்க்காமல் குருமா சுவையாக இருக்குமா? என்ற எந்த சந்தேகமும் வேண்டாம். வாங்க இந்த சூப்பர் குருமா ரெசிபியை தெரிஞ்சுக்கலாம்.

வெறும் 15 நிமிடத்தில், ஹோட்டல் ஸ்டைலில் அட்டகாசமான குருமாவை ஒருமுறை இப்படி வச்சு பாருங்க! இதோட வாசம் பக்கத்து வீட்டு வரை வீசும். காய்கறிகள் சேர்த்த குருமாவை மிளகாய்த்தூள் சேர்த்து காரமாக வைத்து ஒருமுறை என்றால் வெறும் பச்சை மிளகாயை வைத்து வெள்ளை குருமா வைப்பது மற்றொரு முறை. இதனுடைய சுவை கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும்.

Advertisement

சில ஓட்டல்களில் இதனுடைய சுவையை அடித்துக் கொள்ள முடியவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு குருமா ரெசிபி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வெறும் 10 நிமிடத்திற்குள் இந்த குருமாவை தயார் செய்துவிடலாம்.

இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள வேண்டுமென்றால் கொஞ்சம் தண்ணீராக இந்த குருமாவை வைத்துக்கொள்ளலாம். சப்பாத்தி பூரிக்கு தொட்டுக் கொள்ள வேண்டுமென்றால் தண்ணீரை குறைவாக ஊற்றி, தேங்காய் விழுதை கெட்டியாக ஊற்றி கொஞ்சம் கிரேவி பக்குவத்தில் இந்த குருமாவை தயார் செய்து கொள்ளலாம்.அது அவரவர் விருப்பம் தான். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா இன்னைக்கு உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.வாங்க ரெசிபிக்கு போகலாம். வெறும் சில நிமிடத்தில், ஹோட்டல் ஸ்டைலில் அட்டகாசமான குருமாவை ஒருமுறை இப்படி வச்சு பாருங்க! இதோட வாசம் பக்கத்து வீட்டு வரை வீசும்.

வெஜ் குருமா | Veg Kuruma Recipe In Tamil

Print Recipe
வெங்காயம் தக்காளி இல்லயென்றாலோ, சமையாழில்சேர்க்க முரடியாத நாடுகளிலோ இந்த குருமா ரெசிபியை ஒருவாட்டி உங்க வீட்டில ட்ரை பண்ணிபாருங்க. வெங்காயம் தக்காளி சேர்க்காமல் குருமா சுவையாக இருக்குமா? என்ற எந்த சந்தேகமும்வேண்டாம். வாங்க இந்த சூப்பர் குருமா ரெசிபியை தெரிஞ்சுக்கலாம். . காய்கறிகள்சேர்த்த குருமாவை மிளகாய்த்தூள் சேர்த்து காரமாக வைத்து ஒருமுறை என்றால் வெறும் பச்சைமிளகாயை வைத்து வெள்ளை குருமா வைப்பது மற்றொரு முறை. இதனுடைய சுவை கொஞ்சம் வித்தியாசமாகத்தான்இருக்கும்.
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword VEG KURUMA
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Servings 4
Calories 0.285
Advertisement

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 3 ஸ்பூன் எண்ணெய்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 சிறிய இஞ்சித் துண்டு
  • 10 முந்திரி பருப்பு
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1 ஸ்பூன் கசகசா
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 2 பட்டை
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1 நட்சத்திர சோம்பு
  • 2 இலவங்கம்
  • சிறிய துண்டு கல்பாசி
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 கப் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
  • உப்பு தேவையான அளவு

Instructions

  •  
    முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள்.அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பச்சை மிளகாய் – 2, தோல் உரித்த பூண்டு பல் – 10, சிறியஇஞ்சித் துண்டு – 1,
    Advertisement
    முந்திரி பருப்பு – 10, தேங்காய் துருவல் – 1/4 கப், கசகசா –1 ஸ்பூன், சோம்பு – 1 ஸ்பூன், இந்த எல்லா பொருட்களையும் சேர்த்து 2 லிருந்து 3 நிமிடங்கள்நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
     
  • வதக்கிய இந்த எல்லா பொருட்களையும் நன்றாக ஆறவைத்து மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி விழுதுபோல் அரைத்து தனியாக எடுத்துவைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும். அடுத்தபடியாக ஒரு குக்கரை அடுப்பில்வைத்து கொள்ளுங்கள்.
  • அதில் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் ஊற்றி எண்ணெய்காய்ந்ததும் பட்டை – 2, சோம்பு – ஒரு ஸ்பூன், நட்சத்திர சோம்பு – 1, இலவங்கம் – 3,கல்பாசி – சிறிய துண்டு, இந்த பொருட்களை சேர்த்து தாளித்து ஒரு கொத்து கறிவேப்பிலைபோட்டு வதக்கி விட்டு பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, உங்கள் விருப்பம்போல இன்னும் பச்சை பட்டாணி, நூல்கோல் போன்ற உங்களுக்கு பிடித்த எந்த காய்கறிகளை வேண்டுமென்றாலும்சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட வேண்டும். (காய்கறிகள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்பஅளவாக சேர்த்துக் கொள்ளுங்கள்.)
  • அதன் பின்பு மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், குழம்புமிளகாய் தூள் – இரண்டு ஸ்பூன், தேவையான அளவு உப்பு, போட்டு ஒரு நிமிடம் வதக்கி குருமாவுக்குதேவையான அளவு தண்ணீரை ஊற்றி, நன்றாக கலந்து விட்டு ஒரு கொதி வந்ததும் மிக்ஸியில் அரைத்துவைத்திருக்கும் தேங்காய் விழுதை சேர்த்து, மீண்டும் நன்றாக ஒருமுறை கலந்து விட்டு,குக்கரை மூடி மிதமான தீயில் ஒரே ஒரு விசில் வைத்தால் போதும்.
  • மணக்க மணக்க சூப்பர் குருமா தயார்.

Nutrition

Serving: 1g | Calories: 0.285kcal | Carbohydrates: 0.285g | Protein: 12.2g | Fat: 10.4g

இதையும் படியுங்கள் : மாலை நேரம் டீ, காபியுடன் சாப்பிட பாலக் கீரை நக்கட்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

சப்பாத்திக்கு, பூரிக்கு இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா செஞ்சு கொடுங்க நாலஞ்சு அதிகமாக சாப்பிடு வாங்க!

ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும்,…

8 மணி நேரங்கள் ago

டிபனுக்கு வழக்கம் போல் இல்லாமல் தக்காளி மசாலா பூரி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பூரி இந்தியாவின் புகழ் பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும்…

9 மணி நேரங்கள் ago

திருச்செந்தூர் முருகனுக்கும் வைகாசி விசாகத்திற்கும் இருக்கும் தொடர்!

புதமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பலவிதமான விழாக்கள் இருந்தாலும் உலக மக்களை காத்தருள்வதற்காக முருகப்பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது.…

11 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் தித்திக்கும் சுவையில் கேரட் கீர் இப்படி செய்து பாருங்க!

கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த…

12 மணி நேரங்கள் ago

மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான முட்டை கோலா உருண்டை ஒரு தடவை இப்படி செய்து பாருங்க!

பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…

15 மணி நேரங்கள் ago

ஆட்டி படைக்கும் அக்னி நட்சத்திரம் இன்னும் 2 வாரம் ரொம்ப ஜாக்கிரதையாக இருங்கள்

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

16 மணி நேரங்கள் ago