Advertisement
அசைவம்

ஹைதராபாத் ஸ்பெஷல் அப்பல்லோ சிக்கன் ரெசிபி இப்படி செய்து பாருங்கள்! இதன் ருசியே தனி ருசி தான்!

Advertisement

ஹைதராபாத் உணவுகள் அப்படின்னு சொன்னாலே அதுல முதல் இடமா படிக்கிற உணவு பிரியாணி தான். பிரியாணி ஆர்டர் பண்ணும் அப்டின்னு முடிவு பண்ணிட்டாங்க அப்படினா அவங்க  வாங்குறதுல முதலிடம் பிடித்த பிரியாணி ஹைதராபாத் பிரியாணி தான். அப்படி ஹைதராபாத் உணவுகளுக்குன்னு தனியாக ஒரு கூட்டமே இருக்கு. இதுல சைவ உணவுகள் அசைவ உணவுகளுக்கு அடிமையாக நிறைய பேர் இருக்கிறார்கள். 

அப்படியே ஹைதராபாத் உணவுகளுக்கு விருப்பப்படுற கூட்டத்துல பிரியாணி, ஆவக்காய் ஊறுகாய், கோங்குரா சட்னி ,பருப்பு நெய், அப்படின்னு அதிக அளவுக்கு உணவு பட்டியல் போய்க்கொண்டே இருக்கும். காரசாரமான உணவுகளுக்கு ஆந்திரா உணவுகள் முதலிடம் பிடிக்கின்றன. அப்படி சுவையான உணவுகளை தயார் செய்கிற ஹைதராபாத் உணவுகளில் இப்போ நம்ம சாப்பிட போறது ஹைதராபாத் பேமஸான அப்பல்லோ சிக்கன். இந்த ஹைதராபாத் சிக்கன் ரொம்ப சுவையாவும் ஈசியாவும் வீட்டிலேயே நம்ம எப்படி செய்யறது அப்படிங்கறது தெரிஞ்சுக்க இருக்கோம்.

Advertisement

இந்த ஹைதராபாத் சிக்கன் செய்வது ரொம்ப ரொம்ப சுலபம். இப்படி எல்லாருக்கும் பிடிச்சமான இந்த அப்பல்லோ சிக்கன நம்ம வீட்ல செய்து கொடுக்கும்போது வீட்ல இருக்குற குழந்தைகள் இருந்து வயசானவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும். இப்போ இந்த ஹைதராபாத் பேமஸ் அப்பல்லோ சிக்கன் எப்படி வீட்ல சுலபமா தயார் செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

ஹைதராபாத் அப்பல்லோ சிக்கன் | Hyderabad Apollo Chicken Recipe In Tamil

Print Recipe
ஹைதராபாத்உணவுகளுக்கு விருப்பப்படுற கூட்டத்துல பிரியாணி, ஆவக்காய் ஊறுகாய், கோங்குரா சட்னி,பருப்பு நெய், அப்படின்னு அதிக அளவுக்கு உணவு பட்டியல் போய்க்கொண்டே இருக்கும். காரசாரமானஉணவுகளுக்கு ஆந்திரா உணவுகள் முதலிடம் பிடிக்கின்றன. அப்படி சுவையான உணவுகளை தயார்செய்கிற ஹைதராபாத் உணவுகளில் இப்போ நம்ம சாப்பிட போறது ஹைதராபாத் பேமஸான அப்பல்லோ சிக்கன்.இந்த ஹைதராபாத் சிக்கன் ரொம்ப சுவையாவும் ஈசியாவும் வீட்டிலேயே நம்ம எப்படி செய்யறது அப்படிங்கறது தெரிஞ்சுக்க இருக்கோம்.
Course Side Dish, starters
Cuisine Hyderabad
Keyword Hyderabad Apollo chicken
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 99.93

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/2 கிலோ சிக்கன்
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1/2 ஸ்பூன் மல்லிதூள்
  • 1/2 ஸ்பூன் சீரகதூள்
  • 1/2 ஸ்பூன் கரமசாலா தூள்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 ஸ்பூன் மைதா மாவு
  • 1 ஸ்பூன் சோளமாவு
  • 1 முட்டை
  • 2 பச்சைமிளகாய்
  • 5 பல் பூண்டு
  • 1 வெங்காயம்
  • 1 ஸ்பூன் தயிர்
  • 1 ஸ்பூன் சீனி
  • கொத்தமல்லி சிறிதளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் சிக்கனை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவேண்டும். இந்த சிக்கனில் உள்ள எலும்புகளை நீக்கி விட்டு வெறும் சதைப்பகுதியை மட்டும்நீளவாக்கில் நறுக்கி பயன்படுத்துவதற்காக எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு
    Advertisement
    பாத்திரத்தில் சுத்தம் செய்து வைத்துள்ள எலும்பு இல்லாத சிக்கனை சேர்த்துக் கொள்ள வேண்டும்.அதில் மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.பிறகுகரம் மசாலா, உப்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக பிசறி கொள்ள வேண்டும்.
  • பிறகு அதில் மைதா மாவு, சோள மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.ஒரு முட்டையை எடுத்து நன்றாகஅடித்துக் கொள்ள வேண்டும் அதை கலந்து வைத்துள்ள சிக்கனில் சேர்த்து நன்றாக கலந்து தனியாகஎடுத்து வைக்கவும்.
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து  பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்சேர்த்து மசாலாவில் கலந்து ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை எண்ணெயில் போட்டு இருபுறமும்நல்ல சிவந்து வருமாறு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.இவ்வாறு அனைத்து சிக்கன் துண்டுகளையும்பொறுத்தெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்துநன்றாக வதக்கிக் கொள்ளவும்.பின்பு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்துவதக்கவும்.
  •  
     வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில் மஞ்சள்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சீரகத்தூள், சிறிதளவு உப்பு சேர்க்க நன்றாக கலந்துவிடவும்.பிறகு அதில் எடுத்து வைத்துள்ள தயிர், சீனியை சேர்த்து நன்றாக கலந்து விட்டுபின்பு அதில் பொரித்தெடுத்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறி விடவும்.
  • சிக்கன் மசாலாக்களுடன்நன்றாக கலந்து வருமாறு கிளறிவிட்டு இறக்கி மேலே கொத்தமல்லி தலை தூவி பரிமாறினால் ருசியானஹைதராபாத் அப்பல்லோ சிக்கன் தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 99.93kcal | Carbohydrates: 13.91g | Protein: 3.49g | Sodium: 54.88mg | Potassium: 77.95mg | Fiber: 1.27g | Vitamin C: 606mg | Calcium: 24.71mg | Iron: 0.21mg
Advertisement
Prem Kumar

Recent Posts

கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…

5 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு வெஜிடபிள் பாசிப் பயறு இட்லி அடுத்தமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி…

5 மணி நேரங்கள் ago

ஜவ்வாது பற்றி நமக்கு தெரியாத சில பலன்கள்

இப்பொழுதெல்லாம் தினமும் நாம் என்ன உடை உடுத்தினாலும் அது செயற்கை வாசனை திரவியங்களின் வாசனை மட்டுமே இருக்கும் ஆனால் அந்த…

6 மணி நேரங்கள் ago

சூப்பரான ஹெல்தியான தேங்காய் உருண்டை இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

90ஸ் கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் அப்படின்னு சொன்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் கடைகளில கிடைக்கிற தேங்காய் மிட்டாய் வாங்கி நம்ம…

8 மணி நேரங்கள் ago

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

9 மணி நேரங்கள் ago

பலாக்காய் கிடைத்தால் ஒரு முறை ருசியான இந்த பலாக்காய் பட்டாணி வறுவல் செய்து பாருங்கள் ருசியில் இதை அடித்துக்கவே முடியாது!!

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக…

11 மணி நேரங்கள் ago