Advertisement
சைவம்

ருசியான வெண்பொங்கல் இனி இப்படி செஞ்சி பாருங்க, டேஸ்டியான பொங்கல் நாவில் கரைந்தோடும்!!!

Advertisement

நாம் காலை உணவாக செய்யும் பல உணவுகளில் வெண் பொங்கலும் ஒன்று. வெண்பொங்கலுடன் சாம்பார் சட்னி வடை இவை அனைத்தும் சேர்த்து சாப்பிட்டால் சொர்க்கமாக இருக்கும் அந்த அளவிற்கு அதனுடைய ருசி சூப்பராக இருக்கும். நெய் ஊத்தி மிளகு சீரகம் அனைத்தும் சேர்த்து நல்ல ஒரு வாசனையுடன் செய்கின்ற இந்த பொங்கலுக்கு பல பேரு அடிமை என்றே சொல்லலாம்.

இந்த வெண் பொங்கல் நம் வீட்டில் மட்டும் இல்லாமல் கோவிலிலும் பிரசாதமாக கொடுப்பார்கள். கோவில் பிரசாத வெண்பொங்கலில் இன்னும் ருசி அதிகமாகவே இருக்கும். நம்மிடம் இட்லி தோசைக்கு மாவு இல்லை என்றால் சட்டென்று இந்த வெண்பொங்கலை செய்துவிடலாம் மிகவும் ஈஸியாக இந்த வெண் பொங்கலை நம்மால் செய்ய முடியும். நம் வீட்டிற்கு யாராவது விருந்தாளி சற்று என்று வந்தால் கூட இந்த வெண்பொங்கலை செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Advertisement

ஒரு சிலர் செய்கின்ற வெண்பொங்கல் அவர்களுக்கு ருசியாகவே இருக்காது கடைகளில் கிடைக்கின்ற வகையில் வெண்பொங்கல் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள் இப்பொழுது நாம் பார்க்கப் போகின்ற வெண்பொங்கல் கடைகளில் கிடைக்கும் அளவிற்கு அவ்வளவு ருசியாக இருக்கும். அனைத்தையும் அளவு பார்த்து சேர்த்தால் சுவை கூடுதலாகவே இருக்கும். இப்ப வாங்க ஹோட்டல்ல கிடைக்குற மாதிரி ஒரு சுவையான வெண்பொங்கல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

வெண்பொங்கல் | Venpongal Recipe In Tamil

Print Recipe
வெண் பொங்கல் நம் வீட்டில் மட்டும் இல்லாமல் கோவிலிலும் பிரசாதமாக கொடுப்பார்கள். கோவில் பிரசாதவெண்பொங்கலில் இன்னும் ருசி அதிகமாகவே இருக்கும். நம்மிடம் இட்லி தோசைக்கு மாவு இல்லைஎன்றால் சட்டென்று இந்த வெண்பொங்கலை செய்துவிடலாம் மிகவும்
Advertisement
ஈஸியாக இந்த வெண் பொங்கலைநம்மால் செய்ய முடியும். நம் வீட்டிற்கு யாராவது விருந்தாளி சற்று என்று வந்தால் கூடஇந்த வெண்பொங்கலை செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அனைத்தையும் அளவு பார்த்து சேர்த்தால் சுவை கூடுதலாகவே இருக்கும். இப்ப வாங்க ஹோட்டல்ல கிடைக்குற மாதிரி ஒரு சுவையான வெண்பொங்கல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword VENPONGAL
Advertisement
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 217

Equipment

  • 1 குக்கர்

Ingredients

  • 1 கப் பச்சரிசி
  • 1/2 கப் பாசிப்பருப்பு
  • 3 டேபிள் ஸ்பூன் நெய்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1 துண்டு இஞ்சி
  • 1 பச்சை மிளகாய்
  • 10 முந்திரி
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் பச்சரிசிகளையும் பாசிப்பருப்பையும் 15 நிமிடங்கள் நன்றாக ஊற வைக்க வேண்டும். 15 நிமிடங்களுக்கு பிறகுஅதனை நன்றாக கழுவி உப்பு சேர்த்து ஒரு குக்கரில் சேர்த்து ஐந்து டம்ளர் தண்ணீர் ஊற்றிநன்றாக வேக வைக்க வேண்டும்.
  • மூன்று விசில் விட்டு எடுத்தால் சாதம் நன்றாக குழைவாக வெந்து இருக்கும். ஒரு கடாயில் நெய் சேர்த்து அதில் மிளகு சீரகம் முந்திரிப் பருப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
  • இஞ்சியையும் பச்சை மிளகாய் பொடி பொடியாக நறுக்கி அதில் சேர்த்துக் கொள்ளவும். சாதம் குறைவாக வெந்தவுடன்அதை கரண்டியால் கொஞ்சம் மசித்து விட்டு விட வேண்டும்.
  • தாளித்து வைத்துள்ள கலவைகளை அதில் சேர்த்து நன்றாக கிளறினால் சுவையான வெண்பொங்கல் தயார். இதனுடன் தேங்காய் சட்னி சாம்பார் மற்றும் ஏதாவது ஒரு வடை சேர்த்து சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 217kcal | Carbohydrates: 36g | Sodium: 23mg | Potassium: 231mg | Fiber: 9g | Sugar: 2g

இதையும் படியுங்கள் : மதுரை ஸ்டைல் உருளைக்கிழங்கு பொடிமாஸ்‌ இப்படி ஒரு முறை வீட்டில் செய்து பாருங்கள்!

Advertisement
Ramya

Recent Posts

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

2 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

10 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

20 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

23 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 நாள் ago