- Advertisement -
கையேந்தி பாவங்களில் அடை தோசை மிகவும் சுவையாக இருக்கும். மொறு மொறுனு இருக்கும். அதே போல் வீட்டிலே நம்பளும் செய்து சாப்பிடலாம். அது எப்படி செய்வது என்று தான் இன்று பார்க்க போகிறோம்.
இந்த அடை தோசை மிகவும் ஆரோக்கியமானது குழந்தைகளுக்கு வாரத்தில் ஒரு முறை செய்து கொடுத்தால் உடலுக்கு மிகவும் நல்லது.
- Advertisement -
இந்த அடை தோசையுடன் இஞ்சி சட்னி செய்து சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். குழந்தைகளுக்கு தரும் போது வெள்ளம், சேர்த்து கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க.
-விளம்பரம்-
இந்த அடை தோசை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. அட்டகாசமாக இருக்கும்.
அடை தோசை | Adai Dosai Recipe In Tamil
கையேந்தி பாவங்களில் அடை தோசை மிகவும் சுவையாக இருக்கும். மொறு மொறுனு இருக்கும். அதே போல் வீட்டிலே நம்பளும் செய்து சாப்பிடலாம். அது எப்படி செய்வது என்று தான் இன்று பார்க்க போகிறோம்.இந்த அடை தோசை மிகவும் ஆரோக்கியமானது குழந்தைகளுக்கு வாரத்தில் ஒரு முறை செய்து கொடுத்தால் உடலுக்கு மிகவும் நல்லது. இந்த அடை தோசையுடன் இஞ்சி சட்னி செய்து சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். குழந்தைகளுக்கு தரும் போது வெள்ளம், சேர்த்து கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க.இந்த அடை தோசை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. அட்டகாசமாக இருக்கும்.
Yield: 4 people
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்:
- 1¼ கப் இட்லி அரிசி
- ¼ கப் துவரம் பருப்பு
- ¼ கப் பாசிப்பருப்பு
- ¼ கப் கடலை
- 3 டேபிள் ஸ்பூன் உளுந்து
- வரமிளகாய் காரத்திற்கேற்ப
- 10 பல் பூண்டு
- 1¼ டீஸ்பூன் சோம்பு
- உப்பு தேவையான அளவு
- ¼ டீஸ்பூன் பெருங்காய பொடி
- 30 சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது
- ½ கப் முருங்கை கீரை நறுக்கியது
- ½ கப் தேங்காய் துருவல்
- எண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை
செய்முறை:
- முதலில் இட்லி அரிசி, கழுவி 4 மணி நேரம் ஊறவைக்கவேண்டும். பிறகு மற்றொரு பௌலில் துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, கடலை பருப்பு, உளுந்து, காய்ந்த மிளகாய், சேர்த்து 1 மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
- அடுத்து மிக்சி, அல்லது கிரைண்டரில் பூண்டு,சோம்பு, மற்றும் பருப்புடன் ஊறவைத்த வரமிளகாய் மட்டும் சேர்த்து வலு வலுனு அரைத்துக்கொள்ளவும். பிறகு அதில் ஊறவைத்த அரிசி சேர்த்து ரவை பதத்திற்கு அரைத்து, பிறகு அதில் கடைசியாக ஊறவைத்த பருப்புகளை சேர்த்து அரைத்துக்கொள்ளவும். நைசாக அரைக்காமல் கொஞ்சம் கொர கொரனு அரைத்துக்கொள்ளவும்.
- பிறகு அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காய பொடி, சேர்த்து ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும்.
- பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீரை, தேங்காய் துருவல், சேர்த்து கலந்து விடவும். முக்கியமாக மாவு ரொம்ப கெட்டியாகவும் இருக்கக்கூடாது, தண்ணீராகவும் இருக்க கூடாது.
- அடுத்து தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தண்ணீர் தெளித்து துடைத்து விட்டு மாவை எடுத்து ஊற்றி கரண்டியால் தட்டி விடவும். பிறகு அதில் சுற்றிலும் எண்ணெய் விட்டு மொறுகளா சிவந்ததும் திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
- இப்பொழுது சுவையான அடை தோசை தயார்.