Advertisement
ஆன்மிகம்

அட்சய திரிதியையின் சிறப்புகள்

Advertisement

சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திதியையே நாம் அட்சய திரிதியை ஆக கொண்டாடுகிறோம். அட்சய என்ற சொல்லுக்கு குறையாத என்பது பொருள். குறைவில்லாத செல்வம் மகிழ்ச்சி அனைத்தையும் தர வேண்டும் என்பதற்காகவே அந்த நாளில் நாம் மங்களகரமான பொருட்களையும் புதிதான சில பொருட்களையும் வாங்குகின்றோம். திரிதியை திதியும் ரோகினி நட்சத்திரமும் ஒன்றாக சேரக்கூடிய நாளைய நாம் அட்சய திரிதியை ஆக கொண்டாடுகிறோம்.

2024 அட்சய திரிதியை

இந்த வருடம் மே பத்தாம் தேதி லட்சுமி தேவிக்கும் சுக்கிரனுக்கும் உரிய மங்களகரமான வெள்ளிக்கிழமை அன்று அட்சய திரிதியை வருகிறது. எனவே ஆன்மீக ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் இந்த வருட அட்சய திருதியை மிகவும் சிறப்பானதாகவும் முக்கியமானதாகவும் கருதப்படுகிறது. இந்துக்கள் மட்டுமில்லாமல் அட்சய திருதியை சமணர்களும் மிக முக்கியமான புனிதமான நாளாக கருதுகின்றனர். புதிய பொருட்கள் வாங்குவது சுப காரியங்களை செய்ய தொடங்குவது என அனைத்திற்கும் இந்த நாள் மிகவும் சிறப்பான நாளாக உள்ளது. இந்த குறிப்பிட்ட நாளன்று துவங்கப்படும் அனைத்து செயல்பாடுகளும் வெற்றியை கொடுக்கும் என்பது ஐதீகம் இந்த நாள் அன்று வீட்டில் செல்வம் மட்டுமில்லாமல் ஆன்மீக பலம் பெருகவும் மந்திர ஜெபம் தியானம் யோகா போன்றவற்றை செய்வதும் சிறப்பானது.

Advertisement

அட்சய திருதியை சிறப்புகள்

தமிழ் மாதங்களில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாதத்தில் வருகின்ற மூன்றாவது வளர்பிறை திதியை அட்சய திரிதியையாக கொண்டாடுகிறோம். ஆங்கில மாதத்தின் படி ஏப்ரல் அல்லது மே மாதங்களில் வரும் இந்த நாளன்று சந்திரன் மற்றும் சூரியன் இருவரும் முழு சக்தியுடன் இருப்பதால் இந்த நாளை அகா தீஜ் என்று வட மாநிலங்களில் சொல்கின்றார்கள். இந்த நாளில் செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமி தேவியாரையும் பெருமாளையும் வணங்குவதால் பலவிதமான நன்மைகள் நமக்கு கிடைக்கும் பெரும்பாலுக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்வதும் இந்த நாளில் மிகவும் விசேஷமானது.

மங்கலமான முழுமையான நாள்

12 தமிழ் மாதங்களிலும் திரிதியை திதி வந்தாலும் சித்திரை மாதத்தில் மட்டும் இந்த அட்சய திருதியை நாம் கொண்டாடுவதற்கு பல்வேறு புராண காரணங்களும் கதைகளும் உள்ளது. பல்வேறு சிறப்பான விஷயங்கள் இந்த நாளில் நடைபெற்றதால் மங்களகரமான நாளாக இந்த நாள் கருதப்படுகிறது. அதனால் தான் அட்சய திரிதியை அன்று முழு நாளுமே மிகவும் நல்ல நாளாகவும் அனைத்து நேரங்களுமே நல்ல நேரமாகவும் முகூர்த்த நேரமாகவும் அமைந்துள்ளது எனவே அந்த நாளன்று நல்ல காரியத்தை செய்வதற்கு குறிப்பிட்ட நல்ல நேரத்தை பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது.

அட்சய திரிதியை கொண்டாட காரணங்கள்

திருமால் அவருடைய ஆறாவது அவதாரமான பரசுராம அவதாரத்தை இந்த சிறப்பான நாளில் தான் எடுத்தார்.

Advertisement

உணவு மற்றும் தானியங்களை வழங்கக்கூடிய தெய்வமான அன்னபூரணி தேவி இந்த நாளில் தான் அவதரித்ததாக சொல்லப்படுகிறது.

விநாயகப் பெருமான் வேதுவியாசர் சொல்ல சொல்ல தன்னுடைய ஒற்றைக்கொம்பை உடைத்து அட்சய திரிதியை அன்று தான் மகாபாரதம் எழுதினார்.

கிருஷ்ண பெருமாள் அவருடைய நண்பரான குசேலருக்கு அளவில்லாத செல்வங்களை அட்சய திரிதியை நாள் என்று தான் அள்ளிக் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

குபேரர் அருள் பெற்ற நாள்

கங்கை நதி அட்சய திருதியை அன்று

Advertisement
தான் பூமிக்கு வந்ததாக கூறப்படுவதாக நாம் இந்த நாளில் புனித நீராடுவது மிகவும் புண்ணியமானதாக கூறப்படுகிறது.

குபேரர் மகாலட்சுமி தேவியாரை வழிபட்டு செல்வத்தை அதிகமாக நிர்வகிக்கும் பொறுப்பை இந்த நாளன்று தான் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

அட்சய திருதியை நாள் என்று தான் கிருஷ்ணர் பாண்டவர்கள் வனவாசத்தில் உணவிற்காக சிரமப்பட்ட போது அவர்களுடைய பசியை போக்குவதற்காக அட்சய பாத்திரத்தை வழங்கினார் அட்சய பாத்திரம் என்பது குறைவில்லாத உணவை தொடர்ந்து வழங்கக்கூடிய தன்மையை கொண்டது.

அட்சய திரிதியை அன்று மகாலட்சுமி தேவியை வழிபடுவதற்கான காரணம்

பெருமாளையும் மகாலட்சுமி தேவியையும் வழிபடுவது செல்வம் மகிழ்ச்சியான வாழ்க்கை வளமான வாழ்க்கை அதிர்ஷ்டம் அனைத்தையும் கொடுக்கும் என்பது நம்பிக்கை இந்த நாளன்று நாம் எந்த ஒரு புதிய செயலை செய்தாலும் அது வளர்ந்து கொண்டே தான் இருக்கும் அதனால் தான் தங்கம் வெள்ளி போன்ற செல்வத்திற்கு அடையாளமான பொருட்களை நாம் அன்று வாங்குகிறோம் மேலும் புதிய வீடு புதிய நிலம் தான தர்மங்கள் வழங்குவது என அனைத்தும் அன்றைய தினம் செய்வது நம்மை உயர்த்தி கொண்டே இருக்கும் அதனால் தான் செல்வத்திற்குரிய அம்சமான மகாலட்சுமி தேவியாரை நாம் அன்று வழிபடுகிறோம். இந்த நாள் இன்று நாம் தானமாக கொடுக்கும் பொருளும் வாங்கும் பொருளும் நம்முடைய உயர்வுக்கு அடையாளமாக அமையும்.

இதனையும் படியுங்கள் : நீங்கள் வாங்கும் தங்க நகைகள் உங்களிடமே நிலைத்திருக்க இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

Advertisement
Prem Kumar

Recent Posts

டேஸ்டியான மற்றும் ஆரோக்கியமான வெஜிடபிள் அவல் கட்லெட் 10 நிமிடத்தில் வீட்டிலேயே ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!!

நம்மில் பலருக்கும் கட்லெட் மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் ரெசிபிகளில் ஒன்று. அந்தவகையில், ஆரோக்கியமான மற்றும் சத்து நிறைந்த ஒரு ரெசிபி…

1 நிமிடம் ago

தீராத துன்பங்கள் அனைத்தும் தீர்ந்து போவதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டிய முறை

ராம நாமத்தை மனதார உச்சரித்து முழுமனதோடு ஆஞ்சநேயரே வேண்டுபவர்களை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. ராமருடைய தீவிர பக்தரான ஆஞ்சநேயர் தைரியம்…

1 மணி நேரம் ago

எப்பவும் ஒரே மாதிரியா முட்டை குழம்பு வச்சு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி முட்டை ஆம்லெட் கறி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

இது என்னடா முட்டைக்கறி அப்படின்னு யோசிக்கிறீங்களா? இந்த முட்டை கறி செய்றதுக்கு நம்ம முட்டையை வேக வச்சு சேர்க்காம முட்டையை…

3 மணி நேரங்கள் ago

ருசியான கிராமத்து பிரண்டை ஊறுகாய் இப்படி செஞ்சி பாருங்க! மாங்காய் ஊறுகாய் போல சாப்பிட ருசியாக இருக்கும்!

ஊறுகாய் இல்லையென்றால் சிலருக்கு உணவே இறங்காது. அந்தளவுக்கு அதன் சுவைக்கு அடிமையாகியிருப்பார்கள். ஊறுகாய்க்கு தேவையான பொருட்கள் குறிப்பிட்ட பருவத்தில் கிடைக்காதவையாக…

4 மணி நேரங்கள் ago

சாக்லேட் மில்க் குளுகுளுன்னு இப்படி ஒரு தடவை செஞ்சு குடிச்சு பாருங்க!

சாக்லேட் லவ்வரா இருக்கிற எல்லாருக்குமே சாக்லேட் ஐஸ்கிரீம் சாக்லேட் கேக் சாக்லேட் ஐஸ்கிரீம் அப்படின்னு சாக்லேட் சம்மந்தமான எல்லாம் ரொம்ப…

6 மணி நேரங்கள் ago

ரிஷப ராசியில் சூரியன் மற்றும் குருவின் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெற போகும் சிலர் ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியன் மற்றும் குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரிஷப ராசியில் சேர்கிறார்கள். 2024 வது…

7 மணி நேரங்கள் ago