Advertisement
சைவம்

ஆரோக்கியம் நிறைந்த ருசியான சர்க்கரைவள்ளி கிழங்கு சப்பாத்தி செய்தால் இரண்டு சப்பாத்தி அதிகமாவே சாப்பிடுவாங்க!

Advertisement

தினமும் செய்யும் இட்லி, தோசை, பொங்கல், பூரி போன்ற உணவுகளை சாப்பிட்டு அலுத்து விட்டதா?அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான். நாம் தினமும் சாப்பிடும் உணவுகளை சற்று வித்தியாசமாக செய்து கொடுத்தாலே போதும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று நாம் வழக்கமாக செய்யும் சப்பாத்தியை கொஞ்சம் வித்தியாசமாக சர்க்கரை வள்ளி கிழங்கு சேர்த்து செய்ய உள்ளோம். இந்த சப்பாத்தி சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இதன் சுவை அருமையாகவும், அசத்தலாகவும் இருக்கும்.

சப்பாத்தி, இன்று பலராலும் விரும்பப்படும் உணவுகளில் ஒன்றாக உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் இந்த அற்புத உணவில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளடங்கியுள்ளன. சப்பாத்தி என்று எடுத்துக் கொண்டால் நமக்கு முதலில் சிந்தனைக்கு வருவது உடல் இடையே குறைப்பதற்கு சப்பாத்தி சிறந்த உணவாக இருக்கும் என்ற அனைவரும் கூறுவார்கள். மேலும் சப்பாத்தியை சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர்.

Advertisement

வட இந்தியாவில் உள்ள மக்கள் சாப்பிடும் முக்கிய உணவுப் பொருளாக இருப்பது இந்த சப்பாத்தி தான். மேலும், உடல் நலன் சார்ந்த பல பிரச்னைகளின் போதும் பரிந்துரைக்கப்படும் ஒரு உணவாகவும் இவை உள்ளன. நீங்கள் வெளியூர்களுக்கு செல்வதாக இருந்தால், தக்காளி தொக்கையும் இந்த சப்பாத்தியும் செய்து கூட எடுத்துக்கொண்டு போகலாம். இன்று மென்மையான சர்க்கரை வள்ளி கிழங்கு சப்பாத்தி எப்படி செய்வது என்ற சமையல் குறிப்பை இந்த தொகுப்பில் நாம் காணலாம்.

சர்க்கரைவள்ளி கிழங்கு சப்பாத்தி‌ | Sweet Potato Chapati Recipe In Tamil

Print Recipe
தினமும் செய்யும் இட்லி, தோசை, பொங்கல், பூரி போன்ற உணவுகளை சாப்பிட்டு அலுத்து விட்டதா?அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான். நாம் தினமும் சாப்பிடும் உணவுகளை சற்று வித்தியாசமாக செய்து கொடுத்தாலே போதும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று நாம் வழக்கமாக செய்யும் சப்பாத்தியை கொஞ்சம் வித்தியாசமாக சர்க்கரை வள்ளி கிழங்கு சேர்த்து செய்ய உள்ளோம். இந்த
Advertisement
சப்பாத்தி சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இதன் சுவை அருமையாகவும், அசத்தலாகவும் இருக்கும். நீங்கள் வெளியூர்களுக்கு செல்வதாக இருந்தால், தக்காளி தொக்கையும் இந்த சப்பாத்தியும் செய்து கூட எடுத்துக்கொண்டு போகலாம்.
Course Breakfast, dinner
Cuisine Indian
Keyword Sweet Potato Chapati
Prep Time 15 minutes
Cook Time 15 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 162

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 குக்கர்
  • 1 தோசை கல்

Ingredients

  • 4 சர்க்கரைவள்ளி கிழங்கு
  • 1 கப் கோதுமை மாவு
  • 1/4 கப் வேர்க்கடலை
  • 1 டீஸ்பூன் வெள்ளை எள்
  • 1/2 கப் நாட்டு சர்க்கரை
  • 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1/2 டீஸ்பூன் உப்பு
  • நெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் சர்க்கரைவள்ளி கிழங்கை வேக வைத்து, அதன் தோலை நீக்கி விட்டு நன்கு மசித்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வேர்க்கடலை சேர்த்து வறுத்து அதனை பொடித்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு பவுளில் மசித்த சர்க்கரை வள்ளி கிழங்கு, வேர்க்கடலை பவுடர், எள்ளு, நாட்டு சர்க்கரை, ஏலக்காய் தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின் ஒரு பவுளில் கோதுமை மாவை சேர்த்து சிறிதளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  • பின் இதனை சிறிய உருண்டைகளாக உருட்டி அதனை சப்பாத்தி போல் தேய்த்து அதன் நடுவில் சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு கலவையை வைத்து மூடி மறுபடியும் தேய்த்து கொள்ளவும்.‌
  • பின் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் சப்பாத்தியை சேர்த்து இரண்டு பக்கமும் சுட்டு எடுக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான சக்கரவள்ளி கிழங்கு சப்பாத்தி தயார். இதனை அப்படியே சாப்பிடலாம்.

Nutrition

Serving: 400g | Calories: 162kcal | Carbohydrates: 3.7g | Protein: 6.3g | Fat: 2.6g | Sodium: 33mg | Potassium: 157mg | Fiber: 3.9g | Sugar: 7.2g | Vitamin A: 79IU | Vitamin C: 40mg | Calcium: 14mg | Iron: 9.3mg

இதனையும் படியுங்கள் : மணக்க மணக்க சர்க்கரை வள்ளி கிழங்கு சாம்பார் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மீண்டும் மீண்டும் செய்ய தோன்றும்!

Advertisement
Prem Kumar

Recent Posts

வீடே மணக்க மணக்க ருசியான ஆலு மேத்தி கிரேவி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

இன்று இரவு உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி, பூரிக்கு வித்தியாசமான சுவையுடைய சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக்…

5 மணி நேரங்கள் ago

பிரட் இல்லாமலே பிரட் அல்வா செய்யலாம் எப்படி தெரியுமா ? இதோ இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

அல்வா என்றாலே அனைவரின் நாவிலும் நீர் சுரக்கத்தான் செய்யும். அப்படி இருக்க  ப்ரட் அல்வாவை அதன் வாசனையிலேயே மனம் நிறைய…

9 மணி நேரங்கள் ago

காலிஃப்ளவர் முட்டை ப்ரை எப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க!

எப்பவும் சாதத்துக்கு ஒரே மாதிரியான பொரியல் செஞ்சு சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சா அப்போ உங்களுக்கு தான் இந்த காலிஃப்ளவர் முட்டை…

9 மணி நேரங்கள் ago

டேஸ்டியான மற்றும் ஆரோக்கியமான வெஜிடபிள் அவல் கட்லெட் 10 நிமிடத்தில் வீட்டிலேயே ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!!

நம்மில் பலருக்கும் கட்லெட் மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் ரெசிபிகளில் ஒன்று. அந்தவகையில், ஆரோக்கியமான மற்றும் சத்து நிறைந்த ஒரு ரெசிபி…

9 மணி நேரங்கள் ago

தீராத துன்பங்கள் அனைத்தும் தீர்ந்து போவதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டிய முறை

ராம நாமத்தை மனதார உச்சரித்து முழுமனதோடு ஆஞ்சநேயரே வேண்டுபவர்களை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. ராமருடைய தீவிர பக்தரான ஆஞ்சநேயர் தைரியம்…

10 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா முட்டை குழம்பு வச்சு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி முட்டை ஆம்லெட் கறி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

இது என்னடா முட்டைக்கறி அப்படின்னு யோசிக்கிறீங்களா? இந்த முட்டை கறி செய்றதுக்கு நம்ம முட்டையை வேக வச்சு சேர்க்காம முட்டையை…

12 மணி நேரங்கள் ago