Advertisement
ஆன்மிகம்

அமாவாசை அன்று வீட்டின் முன் கோலம் போடக்கூடாது என்பது இதற்கு தானா? இறந்தவர்களை நாமே வீட்டுக்கு அழைக்கிறோமா?

Advertisement

பொதுவாக அமாவாசை என்பது பித்ரு காரியங்களுக்கான ஒரு முக்கியமான நாள். அன்று பித்ரு காரியம் மட்டுமே நாம் செய்ய வேண்டும். மங்கள காரியங்கள் எதுவாக இருந்தாலும் பித்ரு காரியத்திற்கு பிறகு செய்ய வேண்டும். நம் வீட்டில் இறந்து போன முன்னோர்களின் திதியை நம்மால் மொத்தமாக ஞாபகத்தில் வைத்துக் கொண்டு அவர்களுக்கு படைக்க முடியாது என்பதால் இந்த அமாவாசை அன்று அனைத்து முன்னோர்களையும் நினைத்து நாம் தர்ப்பணம் கொடுக்கின்றோம். அதனால் நம் வீட்டில் வேறு என்ன பண்டிகைகள் விசேஷங்கள் வந்தாலும் முதலில் பித்து கடனை முடித்த பிறகு தான் அந்த பண்டிகைகளையும் விசேஷங்களையும் நாம் கொண்டாட வேண்டும். அந்த நாள் அன்று நம் வீட்டில் கோலம் போடலாமா வேண்டாமா என்ற சந்தேகம் பலருக்கு இருக்கும் அதற்கான விளக்கத்தை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்

கோலம் தெய்வங்களுக்கு உண்டானது

வீட்டின் முன்பு கோலம் இடுவது என்பது மங்களமான ஒரு விஷயமாகும். வீட்டின் முன்பு நாம் கோலம் இடுவது தெய்வங்களை வரவேற்பதற்கான ஒரு தளம். எப்பொழுதுமே தெய்வங்கள் காலடியில் கமல பீடம் இருக்கும் அதில் தான் அனைத்து தெய்வங்களும் அமர்ந்திருப்பார்கள். நம் வீட்டின் முன்பு போடப்படும் கோலமும் அது மாதிரி தான். அது தெய்வங்கள் நம் வீட்டிற்குள் வருவதற்கான ஒரு மங்கள வரவேற்பு.

Advertisement

இது தான் உண்மை காரணம்
Advertisement

எனவே அமாவாசை அன்று நம் வீட்டின் முன் கோலம் இட்டால் அது தெய்வங்களுக்கான களம் என்று நினைத்துக் கொண்டு முன்னோர்கள் நம் வீட்டிற்குள் வராமல் சென்று விடுவார்கள். எனவே அமாவாசை அன்று

Advertisement
நம் முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு தர்ப்பணம் மட்டுமே கொடுக்க வேண்டும். கோலம் போடக்கூடாது. அப்படி கோலம் போட்டால் நாம் கொடுக்கும் தர்ப்பணங்களை நம் முன்னோர்கள் ஏற்றுக் கொள்ளாமல் போக நேரிடும். நம் வீட்டில் ஏதாவது பூஜை செய்வதாக இருந்தால் கூட முதலில் பித்ருகளுக்கு தர்ப்பணம் கொடுத்த பிறகே பூஜை செய்ய வேண்டும்.


நம் வீட்டின் முன்பு அமாவாசை அன்று கோலம் எதுவும் போடாமல் காவி மட்டும் வேண்டுமானால் பூசி விடலாம். ஆனால் அந்த காவியிலும் நாம் கோலம் போடக்கூடாது. அமாவாசை என்று எதற்காக நம் வீட்டின் முன்பு கோலம் போடக்கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து இருப்போம் நீங்களும் உங்கள் வீட்டில் அதேபோல் கோலம் போடாமல் பித்ரு கடனை முடித்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பித்ருக்களின் ஆசிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

Advertisement
Prem Kumar

Recent Posts

உங்களுக்கு அத்தோ மிகவும் பிடிக்குமா? அப்படியானால் வீட்டிலேயே ஒரு முறை இந்த அத்தோ செய்து பாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்!!

அத்தோ ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவு. அத்தோவில் ஏராளமான வகை உண்டு. இதை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொருட்கள்…

5 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ஃப்ரை செஞ்சு போர் அடிச்சுருச்சுன்னா இந்த தந்தூரி மீன் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

மீன் வாங்குனா மீன் வச்சு குழம்பு மீன் ஃப்ரை மீன் புட்டு இதெல்லாம் செஞ்சு சாப்பிடுவோம் ஆனா இன்னைக்கு நம்ம…

5 மணி நேரங்கள் ago

வீட்டிலயே நீங்களும் எளிமையாக கேக் செய்யலாம்! தித்திக்கும் சுவையில் கேழ்வரகு கேக் இப்படி செஞ்சி பாருங்க!

கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள். கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள்,…

5 மணி நேரங்கள் ago

ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!

பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும்…

7 மணி நேரங்கள் ago

திருஷ்டி கழிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

இந்த உலகில் யாராவது ஒருத்தர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவது வழக்கம். அனைவரும் அப்படி…

8 மணி நேரங்கள் ago

உடம்பில் ரத்தம் ஊறுவதை அதிகரிக்க இந்த ஒரு ஜூஸ் குடித்தாலே போதும்!

இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் பழவகைகள்  இருக்கிறது. மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள்…

8 மணி நேரங்கள் ago