ஆந்திரா வெண்டைக்காய் வேப்புடு இப்படி செஞ்சா கண்டிப்பா நீங்க சாப்பிடற சாப்பாடு பத்தவே பத்தாது!

- Advertisement -

இன்னைக்கு நம்ம ஆந்திரா ஸ்டைல புதுசா ஒரு சைவ உணவு பண்ண போறோம். இந்த சைவ உணவு என்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா ஆந்திராவுல இதுக்கு பேரு வெண்டைக்காய் வேப்புடு.  நம்ம ஊர்ல இது பேரு வெண்டைக்காய் பொரியல். ஆந்திரா ஸ்டைல்ல வெண்டைக்காய் பொரியல் எப்படி பண்றது .வெண்டைக்காய் ரொம்பவே சுவையான ஒரு காய் மட்டும் இல்லை அதே நல்ல நியாபக சக்தியை அதிகரிக்கும்.

-விளம்பரம்-

பொரியல் செய்யும்போது எல்லாருக்கும் வரும் ஒரே பிரச்சினை அதோட கொழ கொழப்பு தன்மை தான். அந்த கொழகொழப்பு தன்மை எல்லாம் இல்லாமல்  சுவையா இந்த வெண்டைக்காய் பொரியல் செய்ய போறோம் ஆந்திரா ஸ்டைல இந்த வெண்டைக்காய் பொரியல்.  சில குழந்தைகள் வெண்டைக்காய் சாப்பிட ரொம்பவே அடம்பிடிப்பாங்க அப்படி அவங்க அடம் பிடிக்கிறப்போ அவங்களுக்கு இந்த மாதிரி வித்தியாசமான சுவையில் வெண்டைக்காய் பொரியல் செய்து கொடுக்கும் போது ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளை காய்கறிகள் சாப்பிட வைக்கிறது பெரிய பிரச்சினை இப்படி செய்து கொடுக்கும் பொழுது அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க.

- Advertisement -

இந்த வெண்டைக்காய் சாப்பிடுவதற்கு இப்படி ருசியான வெண்டைக்காய் வேப்புடு எப்படி செய்யறது அப்படின்னு பாக்க இருக்கோம. நிறைய பேருக்கு வெண்டைக்காய் பொரியல் சாப்பிடணும்னு ஆசை இருக்கும் ஆனா அதோட கொழ கொழப்பு தன்மைக்காகவே சாப்பிடாம இருப்பாங்க. அப்படி கொழகொழப்பு தன்மைக்காக  சாப்பிடாமல் இருக்கிறவங்களுக்கு எல்லாம் இந்த வெண்டைக்காய் செய்து கொடுங்க. ரொம்பவே நல்லா விரும்பி சாப்பிடுவார்கள். அந்த கொழகொழப்பு தன்மை எல்லாம் இல்லாமல் ரொம்ப சுவையாவும் இருக்கும் . இந்த ஆந்திரா வெண்டைக்காய் வோப்புடு எப்படி செய்யலாமுனு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Print
2.50 from 2 votes

ஆந்திரா வெண்டைக்காய் வேப்புடு | Andhra Okra Fry Recipe In Tamil

வெண்டைக்காய் சாப்பிடுவதற்கு இப்படி ருசியான வெண்டைக்காய்வேப்புடு எப்படி செய்யறது அப்படின்னு பாக்க இருக்கோம. நிறைய பேருக்கு வெண்டைக்காய்பொரியல் சாப்பிடணும்னு ஆசை இருக்கும் ஆனா அதோட கொழ கொழப்பு தன்மைக்காகவே சாப்பிடாமஇருப்பாங்க. அப்படி கொழகொழப்பு தன்மைக்காக சாப்பிடாமல் இருக்கிறவங்களுக்கு எல்லாம் இந்த வெண்டைக்காய் செய்து கொடுங்க.ரொம்பவே நல்லா விரும்பி சாப்பிடுவார்கள். அந்த கொழகொழப்பு தன்மை எல்லாம் இல்லாமல் ரொம்பசுவையாவும் இருக்கும் . இந்த ஆந்திரா வெண்டைக்காய் வோப்புடு எப்படி செய்யலாமுனு தெரிஞ்சுக்கலாம்வாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Fry, LUNCH
Cuisine: andhra
Keyword: Andhra Ladies Finger Fry
Yield: 4
Calories: 78kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ வெண்டைக்காய்
  • 1 வெங்காயம்
  • 1 கப் வேர்க்கடலை
  • 4 காய்ந்த மிளகாய்
  • 2 பச்சைமிளகாய்
  • 5 பல் பூண்டு
  • 1/2 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1/2 ஸ்பூன் மல்லிதூள்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • 1/2 ஸ்பூன் கடுகு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் வெண்டைக்காயை கழுவி எடுத்துவிட்டு ஒரு இன்ச் அளவிற்கு நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து பொடித்து எடுத்துக்கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, சீரகம்,கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
  •  பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய்,பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின்பு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம் பொன்னிறமாக வதக்கிய பிறகு அதில் உப்பு , நறுக்கிவைத்துள்ள வெண்டைக்காய்களை சேர்த்து நன்றாக வதக்கி விடவும். எண்ணெய் சேர்க்க தேவையில்லை.
  •  வெண்டைக்காய் நன்றாக வதங்கிய பிறகு அதில் மிளகாய்தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  • ஐந்து நிமிடம் கலந்துவிட்ட பிறகு அதில் பொடித்து வைத்துள்ள வேர்க்கடலை பொடியை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு சூடாக பரிமாறினால் ருசியான ஆந்திரா வெண்டைக்காய் வேப்பிடு தயார். இது அனைத்துவகையான கலந்த சாதங்களுக்கும் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 400g | Calories: 78kcal | Carbohydrates: 3.6g | Protein: 7.5g | Fat: 0.2g | Sodium: 4.83mg | Potassium: 72.1mg | Fiber: 2.52g | Vitamin C: 9.1mg | Calcium: 46.2mg | Iron: 0.42mg

இதையும் படியுங்கள் : ருசியான வெண்டைக்காய் அவியல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க! இதன் ருசியே தனி தான்!