- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
சைவ விருந்துல கண்டிப்பா அப்பளம் இருக்கும் அப்பளம் வச்சு சாப்பிட்டா தான் அந்த விருந்து முழுமை அடைஞ்ச மாதிரி இருக்கும். அந்த வகையில அப்பளம் வைத்து ஒரு குழம்பு செஞ்சா ரொம்பவே அருமையா இருக்கும். வீட்டில காய்கறிகள் இல்லாத சமயத்துல அப்பளம் இருந்தா போதும் சூப்பரான இந்த அப்பள குழம்பு ரெசிபி செஞ்சிடலாம். எல்லா காரசாரமா புளிப்பா குழம்பு வச்சு அதுல அப்பளத்தை வறுத்து கடைசியா போட்டு இறக்கி சுட சுட சாதத்துல போட்டு பிசைந்து சாப்பிடும் போது டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். வீட்ல காய்கறிகள் இல்லாத சமயத்துல இந்த மாதிரி ஒரு குழம்பு வச்சு பாருங்க டேஸ்ட் சூப்பரா இருக்கும்.
குழம்பு வைக்கும் போது கொஞ்சம் உப்பு கம்மியாவே போடுங்க. ஏன்னா அப்பளத்துல உப்பு இருக்கும் அதனால குழம்புக்கு உப்பு அதிகமாகி விடக்கூடாது. அதனால கொஞ்சம் பார்த்து உப்பு போட்டுக்கோங்க. சுவையான இந்த ரெசிபிக்கு ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடலாம் அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும். ஒரே ஒரு தடவை செஞ்சு பாத்தீங்கன்னா அதுக்கப்புறம் நான் வீட்ல காய்கறிகள் இல்ல அப்படின்னாலே இந்த குழம்பு தான் உங்களுக்கு ஞாபகத்துக்கு வரும். டேஸ்ட் அவ்வளவு சூப்பரா இருக்கும். இது கார குழம்பு வைக்கிற மாதிரி தான் இருக்கும் கார குழம்பு வச்சு அதுல அப்பளம் போட்டு லைட்டா பிரட்டி இறக்கிடனும்.
அப்பளம் போட்ட பின்னாடி ரொம்ப நேரம் குழம்பை அடுப்புல வைக்கக்கூடாது. தக்காளி நம்ம நறுக்கி போட்டு வதக்கியும் வைக்கலாம் இல்லனா தக்காளியை அரைச்சும் ஊத்தலாம். சின்ன வெங்காயம் பூண்டு எல்லாமே சேர்க்கறதால அவ்ளோ வாசனையாவும் டேஸ்ட்டாவும் சின்ன வெங்காயம் சேர்த்தாலே குழம்பு அவ்வளவு சூப்பரா இருக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் இதை செஞ்சு கொடுக்கலாம் கண்டிப்பா எந்த குறையும் சொல்லாம சாப்பிட்டு போவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான அப்பள குழம்பு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இட்லி தோசைக்கு ஏற்ற சுவையான அப்பள சட்னி இப்படி செய்து பாருங்க! 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
பிறகு சின்ன வெங்காயம், பூண்டு தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு குழம்பு மிளகாய் தூள் மிளகாய் தூள் உப்பு சேர்த்து பச்சை வாசனை போனதும் புளிக்கரைசலை சேர்க்கவும்.
நன்றாக கலந்து கொதிக்க வைக்கவும். நாட்டுச் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
எண்ணெயில் அப்பளத்தை பொரித்து எடுத்து குழம்பு வெந்ததும் சேர்த்து விட்டால் சுவையான அப்பளக் குழம்பு தயார்.






