- Prep
- 5 min
- Cook
- 7 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- LUNCH
அப்பள துவையலா அது என்ன அப்படின்னு எல்லாருக்கும் ஒரே டவுட்டா இருக்கும். நம்ம தேங்காய் துவையல் பருப்பு துவையல் மல்லி துவைகள் புதினா துவையல் அப்படின்னா நிறைய துவையல் செஞ்சு சாதத்துக்கும் இட்லி தோசை வைத்து சாப்பிட்டிருப்போம் ஆனால் கண்டிப்பா இந்த அப்பளத்துவையல் நம்ம இதுவரைக்கும் ஒரு தடவை கூட செஞ்சு சாப்பிட்டு இருக்க மாட்டோம். ஆனா ஒரு தடவை இந்த துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் நீங்களே உங்க வீட்ல அடிக்கடி செய்வீங்க.
அடுப்புல வச்சு வதக்க தேவையில்லை வேக வைக்க தேவையில்லை சட்டென்று 5 நிமிஷத்துல சூப்பரான இந்த துவையல் செஞ்சு சாதத்துல பிசைஞ்சு சாப்பிட்டா அதுக்கு சைடு தேவை இல்ல அந்த அளவுக்கு ஒரு சூப்பரான டேஸ்ட்ல நமக்கு கிடைக்கும். நல்லா காரசாரமா இருக்கக்கூடிய இந்த துவையல்ல கொஞ்சம் நெய் இல்லனா நல்லெண்ணெய் ஊத்தி சாப்டா இதோட டேஸ்ட் அடிச்சுக்க வேற எதாலையும் முடியாது அந்த அளவுக்கு ஒரு அருமையான அட்டகாசமான டேஸ்ட்ல இருக்கும்.
குழந்தைகள் இருந்தா பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க உங்க பக்கத்து வீட்ல கொஞ்சம் அப்படியே கொடுத்து பாருங்க அவங்களும் உங்களை பாராட்டிட்டு எப்படி செஞ்சீங்க அப்படின்னு கேட்பாங்க. இப்ப வாங்க இந்த அருமையான அப்பள துவையல் எப்படி அஞ்சு நிமிஷத்துல சீக்கிரத்துல செய்வதென்று பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் : புஸ் புஸ்னு ருசியான கேரளா ஸ்டைல் அப்பள பஜ்ஜி இப்படி செய்து தேங்காய் சட்னியுன் சாப்பிட்டு பாருங்க அருமையாக இருக்கும்!
Ingredients
Method
முதலில் அப்பளத்தை பொறித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் இஞ்சி புளி வெங்காயம் காய்ந்த மிளகாய் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்
பிறகு பொருத்த அப்பளத்தை நொறுக்கிய அதனுடன் சேர்த்து மறுபடியும் அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த அப்பளத் துவையலை சுடு சாதத்தில் வைத்து அதனுடன் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால்மிகவும் சுவையாக இருக்கும்.






