Advertisement
ஸ்வீட்ஸ்

வாயில் வைத்தவுடன் கரையும் சுவையான அசோகா அல்வா செய்வது எப்படி ?

Advertisement

அல்வா என்றாலே பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் ஏன் அல்வா என்றால் நமக்கும் மட்டுமில்ல தமிழக உள்ள அனைவருக்கும் ஞபகமாக வருவது திருநெல்வேலி இருட்டு கடை அல்வா தான் அது அவ்வளவு சுவையாக இருக்கும். அதனால் இன்று அதே போல் வாயில் வைத்ததுமே கரைந்து போகும் அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்

இதையும் படியுங்கள் : வாயில் வைத்தவுடன் கரையும் ஆப்பிள் அல்வா செய்வது எப்படி ?

Advertisement

அசோகா அல்வா பற்றி தான் பார்க்க இருக்கிறோம். குழந்தைகளுக்கு வீட்டிலேயே இந்த அல்வா செய்து கொடுத்து பாருங்கள் மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும். அதனால் இன்று தித்திக்கும் சுவையில் அசோகா அல்வா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

அசோக அல்வா | Ashoka Halwa Recipe In Tamil

Print Recipe
ஆல்வா என்றாலே பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். வாயில் வைத்ததுமே கரைந்து போகும் அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகளுக்கு வீட்டிலேயே அல்வா செய்து கொடுத்து பாருங்கள் மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். நீங்களும் இந்த அசோகா அல்வா ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.
Course sweets
Cuisine Indian, TAMIL
Keyword Halwa, அல்வா
Advertisement
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 31 minutes
Servings 4 people

Equipment

  • 2 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 மிக்சி

Ingredients

தேவையான பொருட்கள்:

  • 100 கிராம் பாசிப்பருப்பு
  • 200 கிராம் சர்க்கரை
  • 2 டேபிள் ஸ்பூன் கோதுமைமாவு
  • 50 கிராம் நெய்
  • 10 முந்திரி பருப்பு
  • கேசரி கலர் சிறிதளவு

Instructions

செய்முறை:

  • முதலில் அடுப்பில் கடாயை வைத்து 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் முந்திரி பருப்பை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு சேர்த்து மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். பருப்பு நன்றாக வெந்ததும் நன்கு மசித்து மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து கோதுமை மாவு சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். பிறகு அதனுடன் மசித்து வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து, பாதி அளவு நெய் சேர்த்து கை விடாமல் கிளறவும்.
  • அல்வா பதத்திற்கு சுருண்டு வரும் பொழுது சர்க்கரை, கேசரி கலர் இரண்டையும் சேர்த்து கை விடாமல் கிளறவும்.
  • சர்க்கரை நன்கு கரைந்து பருப்போடு சேர்ந்து கெட்டியாகும் வரை நன்கு கிளறிவிடவும்.
  • பிறகு மீதமுள்ள நெய் மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு இரண்டையும் சேர்த்து நன்கு கிளறி அடுப்பை நிறுத்தவும்.

Nutrition

Carbohydrates: 27.7g | Protein: 3.9g | Fat: 9.1g | Cholesterol: -4mg | Sodium: 6.8mg | Potassium: 160mg | Fiber: 1g | Calcium: 47.1mg | Iron: 0.5mg
Advertisement
swetha

Recent Posts

காலை உணவுக்கு ருசியான ஓட்ஸ் பச்சைப்பட்டாணி அடை இப்படி செய்து பாருங்க!

காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக…

1 மணி நேரம் ago

செவ்வாய் கிழமையில் மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்து விடாதீர்கள்

வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்…

2 மணி நேரங்கள் ago

முட்டை இருந்தால் மட்டும் போதும் ருசியான முட்டை பணியாரம் செய்து விடலாம்! மாலை நேரத்திற்கு ஏற்ற பக்காவான ஸ்நாக்ஸ்!

அனைவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் தினமும் இரண்டு முட்டை கூட அசால்டாக சாப்பிடுவார்கள்…

3 மணி நேரங்கள் ago

சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை வாழைப்பழ கப் கேக் செஞ்சு பாருங்க, வாயில் வைத்தவுடன் கரையும்!

சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது…

5 மணி நேரங்கள் ago

சிம்பிளான அவரைக்காய் பொரியல் எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க!

டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய்…

5 மணி நேரங்கள் ago

2024 சித்திரை அமாவாசை வழிபாடு இரண்டு மடங்கு பலன்களை நமக்கு கொடுக்கும்!

தமிழ் மாதத்தில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. சூரிய பகவான்…

7 மணி நேரங்கள் ago