- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Breakfast, dinner
அவல் அப்படின்னு சொன்னாலே நம்ம எப்போது செய்வது அதில் சர்க்கரை தேங்காய் போட்டு சாப்பிடுவது தான் வழக்கம். ஆனால் நம்ம அவலில் விதவிதமான உணவுகள் செய்யலாம் அடுப்பில்லாமல் அவலில் செய்வது அப்படிங்கற ஒரு புது விஷயம் இப்போ ரொம்பவே அதிகமா டிரெண்டாயிட்டு இருக்க. அதுல சாதத்துக்கு அரிசிக்கு பதிலா இந்த அவலை தான் பயன்படுத்தி சாதமா சாப்டுட்டு இருக்காங்க.
அப்படி இந்த சுவையான அவலை வைத்து விதவிதமான உணவுகள் செய்திட்டு இருக்கும்போது நம்ம எல்லாருக்கும் புடிச்ச மாதிரி சூப்பரான இனிப்பு எப்படி பண்றது அப்படின்னு பார்க்க இருக்கும். இந்த சுவையான அவல் இனிப்பு ரொம்பவே டேஸ்டா இருக்கும். அவலில் இனிப்பு அப்படினா பாயாசம் தான் எல்லாரும் செய்வோம் ஆனால் இன்றைக்கு சர்க்கரை பொங்கல் செய்ய போறோம். அப்படியே அவல் சர்க்கரை பொங்கல்அரிசியில் செய்த மாதிரியே இருக்கும்.
எந்த ஒரு வித்தியாசமும் தெரியாது ஆனால் நீங்க அவலில் செய்தது போல வித்தியாசமும் இருக்காது. நீங்களாக அவல் அப்படின்னு வெளியில் சொன்னால் தான் அது அவங்களுக்கு தெரியும். ரொம்பவே ஈஸியா பத்தே நிமிஷத்துல செய்யக்கூடிய இந்த அவல் சர்க்கரை பொங்கல் எப்படி சுவையாகவும் டேஸ்டாவும் செய்யறது எல்லாருக்கும் எப்படி புடிச்ச மாதிரி கொடுக்கிறது என்று தெரிந்துகொள்ள இருக்கோம். இந்த அவல் சர்க்கரை பொங்கல் எல்லாருமே விருப்பப்பட்டு சாப்பிடுவாங்க. இதை நீங்க சாமி கும்பிட பிரசாதமாக கூட எடுத்துக்கலாம்.
இல்லைனா உப்புமா செய்திருப்போம் ஆனால் அவலில் அவல் சக்கரை பொங்கல், அவல் புளி சாதம், அவல் லெமன் சாதம் , அவல் தேங்காய் சாதம், அவல் பாயாசம் அப்படின்னு விதவிதமான உணவுகள் இந்த அவல் வச்சு பண்ணலாம் .இந்த சுவையான அவல் உணவு சாப்பிடுவதற்கு அவ்வளவு டேஸ்டா இருக்கும். கெட்டும் போகாது அவலை ஜஸ்ட் ஊற வச்சிட்டு நம்ம அழகா சாப்பாடு செஞ்சு கொடுத்திடலாம்.
நம்ம மேல அதிக விருப்பமுள்ளவர்களுக்கு இந்த மாதிரி அவல் ஐட்டங்களை செய்து கொடுக்கும்போது அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. அது மட்டும் இல்லாம எப்பவுமே சாதம் சாப்பிட்டுட்டு இருக்க குழந்தைகளுக்கு இந்த மாதிரி அவல்ல நீங்க உணவுகள் செய்து கொடுக்கும் போது ரொம்பவே ருசியா இருக்கும். ரொம்பவே புடிச்சும் சாப்பிடு வாங்க. இந்த சுவையான அவல் சர்க்கரை பொங்கல் எப்படி செய்யலாம்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
இதையும் படியுங்கள் : ருசியான வெண்பொங்கல் இனி இப்படி செஞ்சி பாருங்க, டேஸ்டியான பொங்கல் நாவில் கரைந்தோடும்!!!
Ingredients
Method
முதலில் கெட்டி அவலை கழுவி விட்டு பத்து நிமிடம் ஊற வைத்து வடிகட்டிஎடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி பருப்பை வறுத்து கொள்ள வேண்டும்.
இது அடுப்பில் ஒரு கடாயை வைத்து பாசிப்பருப்பு தண்ணீர் விட்டு வேக வைத்து எடுத்து கொள்ளவும். வெல்லத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து வடிகட்டி எடுத்து வைத்துள்ள வெல்லத்தில் வேகவைத்த பாசிப்பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு அதில் ஊற வைத்த அவல்,தேங்காய் துருவல் , வறுத்த முந்திரிப் பருப்பு சேர்த்துநன்றாக கலந்து விடவும்.
பிறகு இதில் மேலாக நெய் ஊற்றி கலந்து பரிமாறினால் சுவையான அவல் சர்க்கரை பொங்கல் தயார்






