- Advertisement -
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான குழம்பு அதற்கு தொட்டுக்கொள்ள ஏதாவது காய்கறி பொரியல் இவ்வாறு தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். அதிலும் பெரும்பாலான வீடுகளில் செய்யக்கூடிய காய்கறி வகைகள் கேரட், பீன்ஸ், அவரைக்காய், பீட்ரூட், போன்றவைதான். இதில் அவரைக்காயை கொண்டு நாம் அதிகம் செய்யக்கூடியது பொரியல், அல்லது குழம்பும் தான் வைத்து செய்கிறோம்.
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ஏற்ற சுவையான முள்ளங்கி பொரியல் கூட்டு செய்வது எப்படி ?
- Advertisement -
ஆனால் அவரைக்காயை சிறு பருப்புடன் சேர்த்து செய்யும் சுவையான இந்த கூட்டை ஒரு முறையாவதும் உங்கள் வீட்டில் செய்து சாப்பிட்டு பாருங்கள். அவ்வளவு அருப்புதமான சுவையில் இருக்கும். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டிருக்க செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்.
அவரைக்காய் கூட்டு | Avaraikkai Koottu Recipe In Tamil
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான குழம்பு அதற்கு தொட்டுக்கொள்ள ஏதாவது காய்கறி பொரியல் இவ்வாறு தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். அதிலும் பெரும்பாலான வீடுகளில் செய்யக்கூடிய காய்கறி வகைகள் கேரட், பீன்ஸ், அவரைக்காய், பீட்ரூட், போன்றவைதான். இதில் அவரைக்காயை கொண்டு நாம் அதிகம் செய்யக்கூடியது பொரியல், அல்லது குழம்பும் தான் வைத்து செய்கிறோம். ஆனால் அவரைக்காயை சிறு பருப்புடன் சேர்த்து செய்யும் சுவையான இந்த கூட்டை ஒரு முறையாவதும் உங்கள் வீட்டில் செய்து சாப்பிட்டு பாருங்கள். அவ்வளவு அருப்புதமான சுவையில் இருக்கும். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டிருக்க செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்.
Yield: 5 people
Equipment
- 1 மிக்ஸி
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் அவரைக்காய் நறுக்கியது
- ¼ கப் பாசிப்பருப்பு
- 2 டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு பொடி செய்ய
- ½ டேபிள் ஸ்பூன் மிளகு
- ½ டேபிள் ஸ்பூன் சீரகம்
- கறிவேப்பிலை சிறிதளவு
- 1 காய்ந்த மிளகாய்
- 1 சிட்டிகை மஞ்சள் தூள்
- உளுத்தம் பருப்பு தாளிக்க
- பெருங்காயத்தூள் சிறிதளவு
- எண்ணெய் தாளிக்க தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் அவரைக்காய், பாசிப்பருப்பு, இரண்டையும் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
- பிறகு கடாயில் உளுத்தம் பருப்பு, மிளகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், ஆகியவற்றை சிவக்க வறுத்து இறக்கி, சீரகம் சேர்த்து மிக்சியில் பொடித்துக் கொள்ளவும்.
- வேக வைத்த காயுடன் இந்தப் பொடி மற்றும் உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.
- கடைசியாக எண்ணெயில் உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து காயுடன் சேர்க்கவும்.
- இப்பொழுது சுவையான அவரைக்காய் கூட்டு ரெடி.
Nutrition
Carbohydrates: 8.2g | Protein: 6.1g | Fat: 3g | Saturated Fat: 0.4g | Fiber: 6g | Sugar: 0.1g