பதப்படுத்தபட்ட உணவுகளை சாப்பிட்டால் உங்கள் ஆயுள் காலம் குறையும்!

- Advertisement -

பொதுவாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது என்று அனைவரும் கூறுவார்கள். இருந்தாலும் சில பொருட்களை அவசியம் பதப்படுத்தும் சூழ்நிலைகள் உருவாகிறது சில பொருட்களை பாதுகாப்பதற்காக பதப்படுத்த வேண்டி இருக்கும். சில பொருட்களின் சுவையே அதிகரிப்பதற்கு பதப்படுத்த வேண்டியிருக்கும். ஆனால் புதிதாக வெட்டப்படும் இறைச்சி, பால் சம்பந்தப்படட பொருள்கள் அல்லது வேகமாக கெட்டுப் போகக்கூடிய உணவுப் பொருட்களை பாதுகாப்பதற்காக பதப்படுத்துவது சரியான விஷயம். ஆனால் வியாபார நோக்கத்திற்காக சில பொருட்களை அதிக நேரம் பதப்படுத்தி வைக்கும் உணவுகளை நாம் சாப்பிடும் பொழுது தான் நாம் நம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக தீங்கு விளைவிக்கும்.

-விளம்பரம்-

இருந்தாலும் சில பாதப்படுத்தப்பட்ட உணவுகளை நான் சாப்பிட தவிர்ப்பது மிகவும் கடினமான விஷயமாக இந்த நவீன காலத்தில் உள்ளது. அப்படி பதப்படுத்தப்பட்ட உணவுகளை நாம் அதிகமாக சாப்பிடுவதன் விளைவாக நம் உடலில் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடு மூலம் உயிரிழக்கும் நிலை கூட ஏற்படும். ஆம் இந்த பதிவில் பதப்படுத்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ஏற்படும் தீமைகளை பற்றி இந்த உடல் நலம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்.

- Advertisement -

உடல் எடை அதிகரிக்க

பதப்படுத்தப்படும் உணவுகளில் கலோரி அதிகமாக இருக்கும். இப்படி அதிக கலோரிகள் உள்ள உணவை நீங்கள் அடிக்கடி சாப்பிட்டுக் கொண்டு இருந்தால் கண்டிப்பாக உங்களை உடல் எடை அதிகரிப்பதையும் உங்களால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வந்து விடும்.

இதையும் படியுங்கள் : அதிக கொழுப்பினால் நம் உடலில் என்னென்ன பாதிப்புகள் வரும் தெரியுமா ? உயிரே போக வாய்ப்பு உள்ளது.

வாழ் நாள் குறையும்

இப்படி அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது புற்று நோயை போன்ற உபாதைகளுக்கு வழி வகுக்கவில்லை என்றாலும். நீங்கள் வாழும் ஆயுள் காலம் வெகுவாக குறைந்து கொண்டே வரும் ஆகையால் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை இப்பொழுதே குறைத்துக் கொள்ளுங்கள்.

-விளம்பரம்-

இதய நோய்கள்

நாம் உடலுக்கு ஒரு நாளைக்கு சோடியம் என்பது சிறிய அளவில் தேவைப்படும் ஒரு பொருள். ஆனால் பதப்படுத்தப்பட்ட பொருள்களில் கலோரிகள் அதிகம் இருப்பது போல் சோடியம் அதிக அளவில் இருக்கும். இப்படி அதிக அளவு சோடியம் உள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடும் பொழுது நாம் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் உயர் ரத்த அழுத்தம், ஸ்ட்ரோக் போன்ற நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

பாக்டீரியா வளர்ச்சி

நம் குடல் பகுதி என்ன தான் ஆரோக்கியமாக இருந்தாலும் நமது உடலில் பல வகையான பாக்டீரியாக்கள் இருந்து கொண்டு தான் இருக்கும். நான் சாப்பிடும் உணவுப் பொருட்கள் பாக்டீரியாவின் கலவை மாற்றும் ஆற்றல் கொண்டதாக இருக்கும் பட்சத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் பைபர் இருக்கும். இந்த பைபர் நம் உடலில் இருக்கும் பாக்டீரியாவில் அதிக வளர்ச்சிக்கு காரணமாக கூட அமையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here