- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
தமிழ்நாட்டில் பல விதமான கலவை சாதம் செய்யப்படுகிறது. குறிப்பாக தேங்காய் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், கத்திரிக்காய் சாதம், கொத்தமல்லி சாதம், கருவேப்பிலை சாதம், தக்காளி பிரியாணி, மட்டன் பிரியாணி ஆகியவை புகழ்பெற்றவை. அதில் நாம் இன்று பார்க்க இருப்பது வித்தியாசமான பேபி உருளைக்கிழங்கு பிரியாணி. இதுவரை பேபி உருளைக்கிழங்கு வைத்து குழம்பு, வறுவல் தான் செய்வதை கேள்விபட்டிருப்போம்.
ஆனால் உருளைக்கிழங்கைக் கொண்டு பிரியாணி செய்யலாம் என்று கேள்விப்பட்டதுண்டா? ஆம், பேபி உருளைக்கிழங்கைக் கொண்டு அருமையான சுவையில் பிரியாணி செய்யலாம். இந்த பிரியாணி நிச்சயம் அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும் என்பதால் இப்படியான பிரியாணி ரெசிபிக்களை தெரிந்து வைத்துக் கொண்டால், அவ்வப்போது வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்து, அவர்களை அசத்தலாம்.
இந்த பேபி உருளைக்கிழங்கு பிரியாணி செய்வது மிகவும் சுலபம். வீட்டில் காய்கறிகள் இல்லாத சமயத்தில் இந்த பிரியாணியை செய்து சாப்பிடலாம். முக்கியமாக இது பேச்சுலர்களுக்கான ரெசிபி என்றே கூறலாம். எனவே இந்த வாரம் அசைவ பிரியாணி செய்ய முயற்சிப்பதற்கு பதிலாக, பேபி உருளைக்கிழங்கைக் கொண்டு இந்த பிரியாணியை முயற்சி செய்யுங்கள். இப்போது சுவையான பேபி உருளைக்கிழங்கு பிரியாணி எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : செட்டிநாடு பேபி உருளைக்கிழங்கு வறுவல்
Ingredients
Method
முதலில் உருளைக்கிழங்கை ஒரு குக்கரில் சேர்த்து இரண்டு விசில் விட்டு வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
பின் இதன் தோலை உரித்து விட்டு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து, ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இதனை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, கல் பாசி சேர்த்து அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் கொத்தமல்லி, புதினா, மிளகாய் தூள், பிரியாணி மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன்பிறகு தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் தயிர் சேர்த்து வதக்கவும். பின் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
பின் ஒரு கொதி வந்ததும் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து அதனுடன் வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான பேபி உருளைக்கிழங்கு பிரியாணி தயார்.






