டக்குனு 10 நிமிஷத்துல அட்டகாசமான ருசியில் வேர்க்கடலை காரக்குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

- Advertisement -

பாரம்பரிய சுவையில் பேபிகார்ன் வேர்க்கடலைக் காரக்குழம்பு ரொம்பவே வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். உடலுக்கு ஊட்டமளிக்கும் வேர்க்கடலையை சுவையான பேபிகார்னுடன் காரக்குழம்பு வச்சுதான் பாருங்களேன்…. இந்த சுவையான பேபிகார்ன் வேர்க்கடலைக் காரக்குழம்பு அடிமையாகி போனவர்களும் உண்டு. இப்படிப்பட்ட பேபிகார்ன் வேர்க்கடலைக் காரக்குழம்பு எப்படி வீட்டிலேயே ரொம்ப சுலபமாக அற்புதமான சுவையில் தயாரிப்பது என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு சார்ந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

-விளம்பரம்-

- Advertisement -
Print
No ratings yet

பேபிகார்ன் கடலைக் காரக்குழம்பு | BabyCorn Groundnut Gravy Recipe In Tamil

பாரம்பரிய சுவையில் பேபிகார்ன் வேர்க்கடலைக் காரக்குழம்பு ரொம்பவே வித்தியாசமாகவும், சுவையாகவும்இருக்கும். உடலுக்கு ஊட்டமளிக்கும் வேர்க்கடலையை சுவையான பேபிகார்னுடன் காரக்குழம்புவச்சுதான் பாருங்களேன்…. இந்த சுவையான பேபிகார்ன் வேர்க்கடலைக் காரக்குழம்பு அடிமையாகிபோனவர்களும் உண்டு. இப்படிப்பட்ட பேபிகார்ன் வேர்க்கடலைக் காரக்குழம்பு எப்படி வீட்டிலேயேரொம்ப சுலபமாக அற்புதமான சுவையில் தயாரிப்பது என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு சார்ந்தபதிவில் தெரிந்து கொள்வோம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: Gravy
Cuisine: tamilnadu
Keyword: Babycorn Groundnut Gravy
Yield: 4
Calories: 7.5kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 10 பேபி கார்ன்
  • 2 டேபிள்ஸ்பூன் வேர்க்கடலை
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 4 பல் பூண்டு
  • புளி எலுமிச்சைஅளவு
  • 2 பச்சைமிளகாய்
  • 2 டீஸ்பூன் சாம்பார்பொடி காரத்திற்கேற்ப
  • 1 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
  • உப்பு தேவையானஅளவு
  • கறிவேப்பிலை சிறிது
  • 1 கைப்பிடி கொத்தமல்லி தழை
  • 1 கப் அரிசி ஊறிய நீர்
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய்ப்பால்

செய்முறை

  • வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேங்காய்ப்பால் பவுடரை அரை கப் வெந்நீரில் கரைத்துக் கொள்ளவும் அல்லது தேங்காய் துருவல் இருந்தால் அதிலிருந்து கெட்டியான பால் அரை கப் எடுத்துக் கொள்ளவும்.
  • தக்காளியுடன் சாம்பார் துளை சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும். புளியை அரிசி ஊற வைத்த நீரில்போட்டு கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும். பேபி கார்னை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் எண்னெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும். பிறகு வேர்க்கடலை மற்றும் நறுக்கின பேபி கார்ன் நுண்டுகளை சேர்த்து வதக்கவும்.
  • அதன்பின்னர் அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதினை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். எல்லாவற்றையும் சேர்த்து வதக்கிய பின்னர் புளிக்கரைசலை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
  • குழம்பு கெட்டியாகிஎண்ணெய் மேலே மிதக்கும் போது தேங்காய்ப்பாலை ஊற்றி கிளறி விடவும். ஒரு கொதி கொதித்ததும் நறுக்கின கொத்தமல்லித்தழை தூவி இறக்கி விடவும். சுவையான பேபிகார்ன் வேர்க்கடலை காரக்குழம்பு

Nutrition

Serving: 100g | Calories: 7.5kcal | Carbohydrates: 7.5g | Protein: 6.5g | Fat: 13g | Fiber: 2.5g