- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 2
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
காலையில் நொடியில் சமைக்க வேண்டுமானால், நூடுல்ஸ் ரெசிபிதான் சரியானதாக இருக்கும் அதிலும் பேச்சுலர்கல் காலையில் தாமதமாக எலுவார்கள் அப்போது அவர்களுக்கு காலையில் சமைப்பதற்கு நூடுல்ஸ் சரியானதாக இருக்கும்.
அதுமட்டும் அல்லாமல் குழந்தைகளின் உணவு பட்டியலில் மிகவும் பிடித்த உணவாக முதலில் இருப்பது நூடுல்ஸ் தான். வீட்டில் அம்மா நூடுல்ஸ் செய்றாங்க என்று தெரிந்தால் போதும் குழந்தை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.அவ்வளவு பிடிக்கும் நூடுல்ஸ். இந்த நூடுல்ஸ்ஸை குழந்தைகளுக்கும் செய்து தாருங்கள்.
இதையும் படியுங்கள் : காரசாரமான சப்பாத்தி நூடுல்ஸ் செய்வது எப்படி ?
இங்கு பேச்சுலர்ஸ்க்கான மிகவும் எளிமையான மற்றும் வித்தியாசமான சுவைக் கொண்ட நூடுல்ஸ் ரெசிபியின் செய்முறையை கீழேகொடுத்துளோம் அதை படித்து அவற்றை முயற்சி செய்து காலையில் சமைத்து சாப்பிடுங்கள்.
English Overview : noodles is one of the most important dishes in india. noodles recipe or noodles seivathu eppadi or chapathi noodles in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.
Ingredients
Method
ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, தக்காளியை போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்,
அடுத்து அதில் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின்பு பச்சை பட்டாணி, கேரட் சேர்த்து, தீயை குறைவில் வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும்.
அதன் பின்பு அதில் நூடுல்ஸ் சேர்த்து, வேண்டுமானால் சிறிது தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, மூடி வைத்து தண்ணீர் வற்றும் வரை வேக வைக்க வேண்டும்.
தண்ணீரானது வற்றியதும், அதில் சோயா சாஸ் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான நூடுல்ஸ் ரெடி.






