- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamilnadu
- Course
- Kootu
பொதுவாகவே நம்முடைய உணவு பட்டியலில் இந்த வாழைப்பூவை மறந்து விட்டோம். ஆனால், வாரத்தில் ஒருமுறையாவது கட்டாயமாக வாழைப்பூவை நம்முடைய சமையலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அது ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. வாழைப்பூவை முந்தைய நாளே வாங்கி சுத்தம் செய்த வைத்துவிட்டால், வெறும் பத்தே நிமிடத்தில் சூப்பரான இந்த வாழைப்பூ கூட்டு செய்துவிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க!!!!
Ingredients
Method
வாழைப்பூவைநரம்பை நீக்கி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும். நறுக்கிய பீவை மோரில் போட்டு வைப்பதால் அவை கருத்துவிடாமல் இருக்கும். பூண்டு, சீரகம், சோம்பு, தேங்காய் துருவலை விழுதாக அரைத்து கொள்ளவும்.
ஒருபாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து கருவேப்பிலை தாளித்து, பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்துவதக்கவும்.
நன்குவதங்கியதும் வாழைப்பூ, பருப்பு சேர்த்து இந்த கலவையுடன், தேங்காய் விழுது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும்.சுவையான வாழைப்பூ கூட்டு தயார்.






