Home சைவம் ஆரோக்கியம் மிகுந்து ருசியான வாழைத்தண்டு சாம்பார் ஒரு தடவை மட்டும் இப்படி செஞ்சு பாருங்க!

ஆரோக்கியம் மிகுந்து ருசியான வாழைத்தண்டு சாம்பார் ஒரு தடவை மட்டும் இப்படி செஞ்சு பாருங்க!

வாழைத்தண்டு சாம்பார் ரொம்ப ரொம்ப ருசியாகவும் இருக்கும்.  சிறுநீரக பிரச்சினைக்கு உடனடியாக ஒரு தீர்வைத் தரும் சக்தி இந்த வாழைத்தண்டுக்கு உண்டு. வாரத்தில் ஒரு நாள்  இந்த வாழை தண்டை உணவோடு சேர்த்துக் கொள்ளலாம். பொரியல், கூட்டு என்று சாப்பிட போரடித்து விட்டால் இப்படி சாம்பார் வைத்துக் கொடுங்கள். சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும்., வாங்க வாழைத்தண்டு சாம்பார் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

-விளம்பரம்-
Print
No ratings yet

வாழைத்தண்டு சாம்பார் | Banana Stem Sambar Recipe In Tamil

வாழைத்தண்டு சாம்பார் ரொம்ப ரொம்ப ருசியாகவும் இருக்கும்.  சிறுநீரக பிரச்சினைக்கு உடனடியாக ஒரு தீர்வைத் தரும் சக்தி இந்த வாழைத்தண்டுக்கு உண்டு. வாரத்தில் ஒரு நாள்  இந்த வாழை தண்டை உணவோடு சேர்த்துக் கொள்ளலாம். பொரியல், கூட்டு என்று சாப்பிட போரடித்து விட்டால் இப்படி சாம்பார் வைத்துக் கொடுங்கள். சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும்., வாங்க வாழைத்தண்டு சாம்பார்எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Prep Time10 minutes
Active Time1 hour 10 minutes
Course: LUNCH
Cuisine: tamilnadu
Keyword: Banana Stem Sambar
Yield: 4
Calories: 89kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 துண்டு வாழைத்தண்டு
  • 10 சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 கப் துவரம் பருப்பு
  • 1/2 கப் புளித்தண்ணீர்
  • சாம்பார் பொடி தேவையான அளவு
  • 1/2 சிட்டிகை மஞ்சள் பொடி
  • உப்பு தேவையான அளவு
  • மல்லித் தழை சிறிது

தாளிக்க

  • 2 வரமிளகாய்
  • கடுகு சிறிது
  • சீரகம் சிறிது
  • உளுத்தம் பருப்பு சிறிது
  • கறிவேப்பிலை சிறிது

செய்முறை

  • வெங்காயத்தை தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். வாழைத் தண்டை விரும்பிய அளவில் நறுக்கி வைக்கவும். துவரம் பருப்பை வேகவைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கச் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கி நறுக்கிய வாழைத்தண்டைச் சேர்த்து வதக்கவும்.
  • வதங்கிய வாழைத் தண்டுடன் புளித்தண்ணீர் சாம்பார் பொடி மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து பச்சை வாசனை போகக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன் வேகவைத்த பருப்பைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். கொதித்ததும் மல்லித் தழை தூவி இறக்கவும். மணமணக்கும் வாழைத்தண்டு சாம்பார் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 89kcal | Carbohydrates: 22.8g | Protein: 1.1g | Fat: 0.3g | Sodium: 240mg | Potassium: 358mg | Fiber: 2.6g | Vitamin C: 8.7mg