வாழைத்தண்டு வச்சு கூட்டு பொரியல் எல்லாமே செஞ்சிருப்பீங்க ஆனா வாழைத்தண்டு வடை ரொம்பவே வித்தியாசமானதா இருக்கும். அது எப்படி இருக்கும் அப்படின்னு யோசிக்கவே யோசிக்காதீங்க சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். வாழைப்பூ வடை சாப்பிட்டு இருப்பீங்க ஆனா வாழைத்தண்டு வடை கண்டிப்பா யாருமே சாப்பிட்டு இருக்க மாட்டீங்க ஒரு தடவை மட்டும் வாழைத்தண்டு வச்சு இதே செய்முறையில் வடை செஞ்சு பாருங்க. கண்டிப்பா உங்க வீட்ல இருக்கிற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் சுவையான இந்த ரெசிபியை கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க.
தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம் எல்லாத்துக்குமே சைடிஷ் ஆக வைத்து சாப்பிட அவ்ளோ சூப்பரா இருக்கும். ருசியான இந்த ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல இருக்குற எல்லாருக்கும் செஞ்சு கொடுங்க வாழைத்தண்டு சாப்பிடுவதால் உடம்புக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். இந்த ரெசிபியில் வாழைத்தண்டை நல்லா குட்டிக்குட்டியா சேர்க்கிறதால சாப்பிடும் போது வாழைத்தண்டு அங்கங்க கிடைக்கும் ரொம்பவே கிரிஸ்பியாகவும் இருக்கும்.
கடலைப்பருப்பு துவரம் பருப்பு சேர்த்து செய்யும்போது மசால்வடை மாதிரியும் நமக்கு கிடைக்கும். ஈவினிங் டைம்ல குழந்தைகளுக்கு டீ காபியோட இந்த ரெசிபியை செஞ்சு கொடுங்க இப்ப குழந்தைகள் எல்லாம் லீவுல வீட்ல இருக்கிறதால ஏதாவது சாப்பிடுவதற்கு கேட்டுக்கிட்டே இருப்பாங்க. அந்த மாதிரி கேட்டுகிட்டே இருக்கிற குழந்தைகளுக்கு இந்த ரெசிபியை கண்டிப்பா செஞ்சு கொடுத்து அசத்துங்க. சுவையான இந்த ரெசிபியை கண்டிப்பாக செஞ்ச உடனே எல்லாரும் காலி இப்ப வாங்க இந்த ருசியான வாழைத்தண்டு வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
வாழைத்தண்டு வடை | Banana Stem Vada Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் நறுக்கிய வாழைத்தண்டு
- 1 கப் கடலைப்பருப்பு
- 1/4 கப் துவரம்பருப்பு
- 2 பச்சை மிளகாய்
- 4 வர மிளகாய்
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 2 பெரிய வெங்காயம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 துண்டு இஞ்சி
- 10 பல் பூண்டு
- கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
- வாழைத்தண்டை பொடி பொடியாக நறுக்கி மோர் தண்ணீரில் சேர்த்து கழுவி நன்றாக நிழலில் காய வைத்து எடுக்கவும்.
- கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.
- அதனுடன் காய்ந்த மிளகாய் சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
- அரைத்ததை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் பச்சை மிளகாய், கருவேப்பிலை கொத்தமல்லி இலைகள் கரம் மசாலா இஞ்சி தட்டிய பூண்டு உப்பு அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- பிறகு வாழைத்தண்டை சேர்த்து நன்றாக கலந்து சூடான எண்ணெயில் தட்டி சேர்த்து பொரித்து எடுத்தால் சுவையான வாழைத்தண்டு வடை தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : இரவு டிபனுக்கு வாழைத்தண்டு ஊத்தாப்பம் இப்படியும் செய்யலாமே! எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க!!