Home சைவம் அருமையான சுவையில் பீன்ஸ் கேரட் பருப்புக் கறி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

அருமையான சுவையில் பீன்ஸ் கேரட் பருப்புக் கறி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

கல்யாண வீடுகளில்,, வீட்டில் விருந்து எல்லா இடங்களிலும் பீன்ஸ் கேரட் பொரியல் இடம் பெரும். அதே பீன்ஸ் கேரட் பொரியல் சிறிது பருப்பு சேர்த்து பீன்ஸ் கேரட் பருப்புக் கறி செய்து சுவைத்து பாருங்களேன் அருமையாக இருக்கும்.

-விளம்பரம்-

பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் மற்றும் பரும்ப்பு சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு எளிய மற்றும் பயனுள்ள உலர் கறி செய்முறை. பருப்பு சாதம் அல்லது ரசம் சாதம் சேர்க்கைக்கு அல்லது சப்பாத்திக்கு கூட இது ஒரு சிறந்த தென்னிந்திய சைட் டிஷ் ஆகும். இந்த செய்முறையை வெங்காயம் இல்லாமலும் தயாரிக்கலாம் , இது எந்த பண்டிகை மற்றும் கொண்டாட்ட விருந்துக்கும் பரிமாறப்படலாம்.

பீன்ஸ் கேரட் பருப்புக் கறி தென் இந்தியா மற்றும் வட இந்திய பகுதிகளில் தயாரிக்கப்படுகிறது. பருப்பு மற்றும் சாம்பார் பொடி பீன்ஸ் கேரட் பருப்புக் கறிஅதன் சுவையை மேலும் அதிகரிக்கிறது. பீன்ஸ் கேரட் பருப்புக் கறி என்பது வீட்டிலேயே எளிய மசாலாக்களுடன் தயாரிக்கப்படும் விரைவான மற்றும் எளிதான ஆரோக்கியமான பருப்புக் கறிஆகும். பீன்ஸ் கேரட் பருப்புக் கறி மசாலாக்களை எளிமையாக வைத்திருப்பது, காய்கறிகளின் உண்மையான சுவையை வெளிப்படுத்துகிறது.

பீன்ஸ் கேரட் பருப்புக் கறி புல்காவுடன் பரிமாறவும் அல்லது சாதத்துடன் சேர்த்து பரிமாறவும் சரியான சுவையை சேர்க்கிறது.. இந்த பீன்ஸ் கேரட் பருப்புக் கறி, சாதம் மற்றும் ரசத்துடன் நன்றாக இருக்கும். வாங்க இந்த பீன்ஸ் கேரட் பருப்புக் கறி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

Print
4.75 from 4 votes

பீன்ஸ் கேரட் பருப்புக் கறி | Beans Carrot Dal Curry In Tamil

பீன்ஸ் கேரட் பருப்புக் கறி தென் இந்தியா மற்றும் வடஇந்திய பகுதிகளில் தயாரிக்கப்படுகிறது. பருப்பு மற்றும் சாம்பார் பொடி பீன்ஸ் கேரட்பருப்புக் கறிஅதன் சுவையை மேலும் அதிகரிக்கிறது. பீன்ஸ் கேரட் பருப்புக் கறி என்பதுவீட்டிலேயே எளிய மசாலாக்களுடன் தயாரிக்கப்படும் விரைவான மற்றும் எளிதான ஆரோக்கியமானபருப்புக் கறிஆகும். பீன்ஸ் கேரட் பருப்புக் கறி மசாலாக்களை எளிமையாக வைத்திருப்பது,காய்கறிகளின் உண்மையான சுவையை வெளிப்படுத்துகிறது
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH, Side Dish
Cuisine: tamil nadu
Keyword: Beans Carrot Dal Curry
Yield: 4
Calories: 131kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ பீன்ஸ்
  • 1 கேரட்
  • 1 கைப்பிடி துவரம் பருப்பு
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 காய்ந்த மிளகாய்
  • 2 தேக்கரண்டி எண்ணெய்
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • 1/2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
  • 1/2 தேக்கரண்டி சீரகம்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் பொடி
  • 2 தேக்கரண்டி சாம்பார் பொடி
  • உப்பு தேவைக்கேற்ப

செய்முறை

  • பீன்ஸுடன் உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். துவரம் பருப்பை மலர்ந்த பதத்தில் வேக வைக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • வேகவைத்த பருப்பில் உள்ள தண்ணீரைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.தாளித்தவற்றுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி குழைந்ததும் சாம்பார் பொடி, மஞ்சள் பொடி சேர்த்துப் பிரட்டவும்.
  • அதனுடன் வேக வைத்த பீன்ஸ் மற்றும் கேரட்டைச் சேர்த்து, பருப்பு தண்ணீரை ஊற்றி, சிறிது உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
  • காய்களுடன் உப்பு, காரம் சேர்ந்ததும் வேக வைத்த பருப்பைச் சேர்த்து சிறிது நேரம் பிரட்டி விடவும்.காய்கள் பருப்புடன் சேர்ந்து கெட்டியாகி கூட்டு பதம் வந்ததும் இறக்கவும்.
  • பக்க உணவாகப் பரிமாற, சுவையான பீன்ஸ் கேரட் பருப்புக் கறி தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 131kcal | Carbohydrates: 7g | Protein: 1.8g | Fat: 0.5g | Potassium: 405mg | Fiber: 405g | Calcium: 35mg | Iron: 2.2mg