ருசியான சேலம் பீன்ஸ் சுக்கா இப்படி செய்து பாருங்க! கையேத்தி பவன் ஸ்டைல் உணவு!!

- Advertisement -

இந்த வாரம் உங்கள் வீட்டில் பீன்ஸ் சமைக்க திட்டமிட்டுள்ளீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒரு வித்தியாசமான சுவையில் பீன்ஸை சமைத்துக் கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் சேலம் ஸ்டைல் பீன்ஸ் சுக்காவை செய்து கொடுங்கள். சுக்கா தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு உணவு. குறிப்பாக தமிழகத்தில் இருக்கும் கிராமப்புற பகுதிகளில் இவை கிடைக்காத ஹோட்டல்கள் மற்றும் கையேந்தி உணவு கடைகளை நாம் காண்பதே மிகவும் அரிது.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : ருசியான முருங்கைக்காய் சுக்கா இப்படி செய்து! அசத்தலான சுவையில் இருக்கும்!

- Advertisement -

இதனின் சிறப்பு என்னவென்றால் இதை செய்வதற்கு வெகு நேரம் ஆகாது மேலும் கடினமான செய்முறையும் கிடையாது. இதை மிக எளிதாக சமைக்க தெரியாதவர்கள் கூட செய்து விடலாம். இதை செய்வதற்கு தேவையான மசாலாவை நாம் தயார் செய்து விட்டால் போதும் இதை வெகு எளிதாக செய்து விடலாம். இதை இட்லி, தோசை, என டிபன் வகைகளுக்கும் வைத்து சாப்பிடலாம். அப்படியில்லை என்றால் பிரியாணி, வெறும் சாதம் என சாப்பாட்டுக்கும் வைத்து சாப்பிடலாம்.

Print
No ratings yet

பீன்ஸ் சுக்கா | Beans Sukka Recipe in Tamil

இந்த வாரம் உங்கள் வீட்டில் பீன்ஸ் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒரு வித்தியாசமான சுவையில் பீன்ஸை சமைத்துக் கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் சேலம் ஸ்டைல் பீன்ஸ் சுக்காவை செய்து கொடுங்கள். சுக்கா தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு உணவு. குறிப்பாக தமிழகத்தில் இருக்கும் கிராமப்புற பகுதிகளில் இவை கிடைக்காத ஹோட்டல்கள் மற்றும் கையேந்தி உணவு கடைகளை நாம் காண்பதே மிகவும் அரிது. இதனின் சிறப்பு என்னவென்றால் இதை செய்வதற்கு வெகு நேரம் ஆகாது மேலும் கடினமான செய்முறையும் கிடையாது.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: Indian
Keyword: Sukka
Yield: 4 People
Calories: 131kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 6 கப் பீன்ஸ்
  • 1 கப் நறுக்கிய
  • உப்பு தேவையான
  • 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு

வறுத்து பொடி செய்ய

  • 2 பட்டை
  • 4 கிராம்பு
  • 4 ஏலக்காய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 3 வர மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள்
  • 2 டீஸ்பூன் மல்லி

வெங்காய பூண்டு பேஸ்ட் :

  • 4 பல் பூண்டு
  • 1/2 கப் நறுக்கிய வெங்காயம்
  • 1 கப் நறுக்கிய தக்காளி
  • 1 துண்டு இஞ்சி
  • 1/2 கப் கொத்தமல்லி

செய்முறை

வெங்காய பூண்டு பேஸ்ட் செய்ய :

  • முதலில் வெங்காய பூண்டு பேஸ்ட் செய்வதற்கு மேலே கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பட்டை, கிராம்பு, சீரகம், தனியா, கறிவேப்பிலை, ஏலக்காய், மிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
  • அவற்றை எடுத்து ஆறவைத்து பின் மிக்ஸியில் சேர்த்து பொடித்து கொள்ளவும்.
  • பின்னர் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து வெடித்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு பிரவுன் ஆகும் வரை வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் பொடி, வெங்காய பூண்டு தக்காளி பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின்னர் நறுக்கிய பீன்ஸ் சேர்த்து நன்கு கலந்து விடவும். பின் ஒரு மூடி போட்டு 10-15 நிமிடங்கள நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
  • பீன்ஸ் வதங்கியதும் வறுத்து பொடித்த பொடி மற்றும் உப்பு சேர்த்து கிளறி, சிறிது கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான, ருசியான பீன்ஸ் மசாலா தயார். இதனை சாதம், பரோட்டா, அல்லது சப்பாத்தி கூட பரிமாறலாம்.

Nutrition

Serving: 600g | Calories: 131kcal | Carbohydrates: 7g | Protein: 1.8g | Fat: 0.5g | Saturated Fat: 0.1g | Potassium: 405mg | Fiber: 2.7g | Vitamin C: 1.2mg | Calcium: 35mg | Iron: 2.2mg