காலை டிபனுக்கு கொஞ்சம் வித்தியாசமா ருசியான பீட்ரூட் ஆப்பம் செஞ்சி பாருங்கள்!

அப்பம் அல்லது "ஆப்பம்" என்று அழைக்கப்படும் இப்பண்டம் இந்தியா மற்றும் இலங்கையில் பிரபலமான ஒரு தோசை வகையை சார்ந்த தென்னிந்தியா உணவாகும். இது அரிசி மாவில், தேங்காய் பால் கலந்து செய்யப்படுகின்றது. தென்னிந்தியாவில் இட்லி, தோசை, ஆப்பம் போன்றவை பிரபலமான காலை உணவுகளாக உள்ளன. அதிலும் குறி

By Prem Kumar · 1/11/2023

அப்பம் அல்லது “ஆப்பம்” என்று அழைக்கப்படும் இப்பண்டம் இந்தியா மற்றும் இலங்கையில் பிரபலமான ஒரு தோசை வகையை சார்ந்த தென்னிந்தியா உணவாகும். இது அரிசி மாவில், தேங்காய் பால் கலந்து செய்யப்படுகின்றது. தென்னிந்தியாவில் இட்லி, தோசை, ஆப்பம் போன்றவை பிரபலமான காலை உணவுகளாக உள்ளன. அதிலும் குறிப்பாக ஆப்பம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாக உள்ளது.

இதற்கு காரணமாக இதன் மிருதுவான தன்மையை குறிப்பிடலாம். வழக்கமான இட்லி, தோசையை விட ஆப்பம் என்றால் கொஞ்சம் ஸ்பெஷல் தான். அதுவும் நல்ல கூடை போன்ற வடிவத்துடன் பஞ்சு போல மிருதுவான ஆப்பம் செய்வதெல்லாம் ஒரு தனி கலை தான். ஆப்பம் மொத்தம் நான்கு வகையில் தயாரிக்கப்படுகிறது. அவை பாலாப்பம், வெள்ளையாப்பம், முட்டையாப்பம், இனிப்பு அப்பம் என நான்கு வகைகளில் தயாரிக்கபடுகிறது. வழக்கமாக ஆப்பத்தை பச்சரிசியை வைத்து தான் செய்து சாப்பிட்டு இருப்போம்.

இன்று நாம் பார்க்க போகும் ரெசிபியில் பீட்ரூட் சேர்த்து சத்தான பீட்ரூட் ஆப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். பீட்ரூட் சேர்த்து செய்வதால் இது உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது. மேலும் பீட்ரூட்டில் பல்வேறு வகையான ஊட்டசத்துக்கள் நிறைந்து காணப்படுவதால், நமது ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. பீட்ரூட் ஆப்பத்தை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Recipes AMP · Quick view
View full