மொறு மொறுனு பீட்ரூட் பக்கோடா இப்படி செய்து கொடுத்தால் போதும் பீட்ரூட் பிடிக்காதவர்களும் சாப்பிடுவார்கள்!

- Advertisement -

பீட்ரூட் வச்சு பக்கோடாவா அப்படின்னா எல்லாரும் ஆச்சரியப்படுவீங்க இல்லையா? ஆனா பீட்ரூட் வச்சு நம்ம சூப்பரான காரசாரமான பக்கோடா செய்ய முடியும். நம்ம அன்றாட உணவுல பீட்ரூட் அதிகமா சேர்த்துக்கிட்டோம் அப்படின்னா நம்ம உடம்புல ரத்தத்தோட அளவு அதிகரிக்கும் நம்ம ரத்தமும் நல்லா தூய்மையாகும். நம்ம உடம்புல ரத்தம் கம்மியா இருந்தா மருத்துவமனைக்கு போய் ரத்தம் ஏத்த தேவையில்லை அதுக்கு பதிலா பீட்ரூட்டை நம்ம அதிகமா சாப்பிட்டாலே போதும். பீட்ரூட் வச்சு நம்ம பீட்ரூட் ஜூஸ், பீட்ரூட் கூட்டு, பீட்ரூட் பொரியல், பீட்ரூட் பச்சடி, பீட்ரூட் சாதம் அப்படின்னு ஏராளமான உணவுகள் செய்யலாம்.

-விளம்பரம்-

ஆனா சில குழந்தைகளுக்கு பீட்ரூட்ட நம்ம அப்படியே குடுத்தா சாப்பிட பிடிக்காது சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிப்பாங்க. ஆனா எல்லாருக்குமே பக்கோடா ரொம்ப ரொம்ப பிடிக்கும். நல்லா காரசாரமா மொறு மொறுன்னு இருக்க பக்கோடாவை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க. அப்போ அவங்கள ஏமாத்தி நம்ம பீட்ரூட்ல பக்கோடா செஞ்சு கொடுத்தோம் அப்படின்னா அவங்களும் பீட்ரூட் சாப்பிட்ட மாதிரி இருக்கும். ஈவினிங் நேரத்துல குழந்தைங்க ஏதாவது ஸ்னாக்ஸ் கேட்டா ஆரோக்கியமான இந்த பீட்ரூட் பக்கோடா செஞ்சு கொடுங்க அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க.

- Advertisement -

அதோட அவங்க அடிக்கடி இந்த பீட்ரூட் பக்கோடா செஞ்சு தர சொல்லி சாப்பிட்டுகிட்டே இருப்பாங்க. அவங்களுக்கு ரொம்பவே பிடிச்சு போயிடும். பெரியவங்களுக்குமே பக்கோடா என்றால் ரொம்ப பிடிக்கும் அதனால வீட்ல இருக்கா பெரியவங்களுக்கும் இந்த மாதிரி பீட்ரூட் வச்சு பக்கோடா செஞ்சு கொடுத்தா அவங்களுக்கும் ரொம்பவே ஆரோக்கியமானதா இந்த பக்கோடா இருக்கும். நம்ம வெங்காய பக்கோடா காலிஃப்ளவர் பக்கோடா சிக்கன் பக்கோடா அப்படின்னு நிறைய பக்கோடா சாப்பிட்டுருப்போம் ஆனா இந்த பீட்ரூட் பக்கோடா கொஞ்சம் வித்தியாசமாகவும் அருமையாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இந்த சத்தான பீட்ரூட் பக்கோடா எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.

Print
5 from 1 vote

பீட்ரூட் பக்கோடா | Beetroot Pakoda Recipe In Tamil

சில குழந்தைகளுக்கு பீட்ரூட்ட நம்ம அப்படியே குடுத்தா சாப்பிட பிடிக்காது சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிப்பாங்க.ஆனா எல்லாருக்குமே பக்கோடா ரொம்ப ரொம்ப பிடிக்கும். நல்லா காரசாரமா மொறு மொறுன்னு இருக்கபக்கோடாவை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க. அப்போ அவங்கள ஏமாத்தி நம்ம பீட்ரூட்லபக்கோடா செஞ்சு கொடுத்தோம் அப்படின்னா அவங்களும் பீட்ரூட் சாப்பிட்ட மாதிரி இருக்கும்.ஈவினிங் நேரத்துல குழந்தைங்க ஏதாவது ஸ்னாக்ஸ் கேட்டா ஆரோக்கியமான இந்த பீட்ரூட் பக்கோடா செஞ்சு கொடுங்க அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Beet root Pakoda
Yield: 4
Calories: 28kcal

Equipment

 • 1 கடாய்

தேவையான பொருட்கள்

 • 2 பீட்ரூட்
 • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
 • 3 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
 • 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
 • 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு
 • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள்
 • 2 பெரிய வெங்காயம்
 • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
 • உப்பு தேவையான அளவு
 • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

 • முதலில் பீட்ரூட்டை கழுவி சுத்தம் செய்து துருவி வைத்துக் கொள்ளவும். துருவிய பீட்ரூட்டைஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் நறுக்கி கொத்தமல்லி இலைகள் இஞ்சி பூண்டு விழுது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
 • பிறகு அதில் அரிசி மாவு ,சோள மாவு ,கடலை மாவு , மிளகாய் தூள் அனைத்தும் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும்.
 • மிகவும் தண்ணீராகவும் இருக்கக் கூடாது கொஞ்சம் கெட்டியாகவே பிசைந்து கொள்ளவும்.
   
 • ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கலந்து வைத்துள்ள மாவிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை பொறித்தெடுக்கவும்.
 • இப்பொழுது சுடச்சுட கார சாரமான பீட்ரூட் பக்கோடா தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 28kcal | Carbohydrates: 3.3g | Protein: 3.1g | Sodium: 35mg | Potassium: 213mg