பீட்ரூட் ராகி தோசை சுலபமாக இப்படி செஞ்சு கொடுத்தா குழந்தைகள் 2 அதிகமாவே சாப்பிடுவாங்க!

- Advertisement -

அரிசி உணவை விட மற்ற தானியங்களால் செய்யப்படும் உணவுகள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியம் பலப்படும். எப்போதும் இட்லி, தோசை மாவு என்று செய்து அலுத்து போனவர்களுக்கு இது போல புதிதாக மற்றும் ஆரோக்கியமுள்ள பீட்ரூட் ராகி தோசை செய்து கொடுத்தால் அனைவரும் சாப்பிட்டு விடுவார்கள். நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் சிறுதானியங்களில் உள்ளன.

-விளம்பரம்-

சிறுதானியங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய இந்த கேழ்வரகு ரொம்பவே ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கிறது. அடிக்கடி சிறுதானியங்களை கொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் நன்கு வலுபெறும்.கேழ்வரகு சாப்பிட வேண்டும் என்றாலே பலருக்கும் பிடிக்காமல் போகலாம் . சுவையான ருசியில் பீட்ரூட் சேர்த்து பீட்ரூட் ராகி தோசை  இப்படி மட்டும் செஞ்சு பாருங்க, இந்த காலத்து குழந்தைகளுக்கும் ரொம்பவே பிடிக்கும். அடிக்கடி கேட்டு அடம் பிடிப்பாங்க.

- Advertisement -
Print
No ratings yet

பீட்ரூட் ராகி தோசை | Beetroot Ragi Dosa Recipe In Tamil

சிறுதானியங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய இந்த கேழ்வரகு ரொம்பவே ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கிறது. அடிக்கடி சிறுதானியங்களைகொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் நன்கு வலுபெறும்.கேழ்வரகு சாப்பிடவேண்டும் என்றாலே பலருக்கும் பிடிக்காமல் போகலாம் . சுவையான ருசியில் பீட்ரூட் சேர்த்துபீட்ரூட் ராகி தோசை  இப்படி மட்டும் செஞ்சுபாருங்க, இந்த காலத்து குழந்தைகளுக்கும் ரொம்பவே பிடிக்கும். அடிக்கடி கேட்டு அடம்பிடிப்பாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Beetroot Ragi Dosa
Yield: 4
Calories: 328kcal

Equipment

  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 1 கப் கேழ்வரகு மாவு
  • உப்பு தேவைக்கேற்ப
  • 1 கப் ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு
  • 1 கப் துருவிய பீட்ரூட்
  • 3  பச்சை மிளகாய்
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • ஆட்டியஉளுத்தம்பருப்பு மாவு, உப்பு, ராகி மாவு சேர்த்து கலந்து, 10 மணி நேரம் கழித்து தோசை மாவு பக்குவத்தில் கரைத்துக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அதில் பச்சை மிளகாய், பீட்ரூட் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வதக்கிய பீட்ரூட்டை மாவில் சேர்த்து கலக்கி, மெல்லிய தோசைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு, வெந்ததும் திருப்பி விட்டு மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும்.
  • சத்து மிகுந்த தோசை இது.

Nutrition

Serving: 100g | Calories: 328kcal | Carbohydrates: 72g | Protein: 7.3g | Fat: 1.3g | Fiber: 11.5g | Iron: 6.3mg