மதிய உணவுக்கு இனி உருளைக்கிழங்கு பொரியல் கூட்டு இப்படி செய்து பாருங்க!

bellary potato fry
- Advertisement -

உருளைக்கிழங்கு என்றால் யாருக்கு தான் பிடிக்காது? பிடிக்காத குழம்பு, சாதம் என்றாலும் உருளைக்கிழங்கு பொரியல் இருந்தால் பிடிக்காத உணவும் சாப்பிடுவாங்க. அந்தவகையில் பெல்லாரி முறையில் இது போன்று ஒரு முறை உருளைகிழங்கு பொரியல் செய்து வீட்டில்

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : உருளைக்கிழங்கு பகோடா இப்படி செய்து பாருங்க! மாலை நேரத்திற்கு ஏற்ற ஸ்நாக்ஸ்!

- Advertisement -

உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க எல்லோரும் மீண்டும், மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. பெல்லாரி பொரியல் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

bellary potato fry
Print
No ratings yet

பெல்லாரி பொரியல் | Bellary Potato Fry Recipe In Tamil

உருளைக்கிழங்கு என்றால் யாருக்கு தான் பிடிக்காது? பிடிக்காத குழம்பு, சாதம் என்றாலும் உருளைக்கிழங்கு பொரியல் இருந்தால் பிடிக்காத உணவும் சாப்பிடுவாங்க. அந்தவகையில் பெல்லாரி முறையில் இது போன்று ஒரு முறை உருளைகிழங்கு பொரியல் செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க எல்லோரும் மீண்டும், மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. பெல்லாரி பொரியல் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Total Time15 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: potato fry, உருளைக்கிழங்கு வறுவல்
Yield: 4 people
Calories: 150kcal

Equipment

  • Q கடாய்

தேவையான பொருட்கள்

அரைபாகற்கு:

  • 3 பச்சை மிளகாய்
  • 2 வர மிளகாய்
  • கருவேப்பிலை கொஞ்சம் நிறைய
  • 4 பல் பூண்டு
  • இஞ்சி கொஞ்சம்
  • 1 டீஸ்பூன் சோம்பு

வதக்குவதற்கு:

  • 4 உருளைக்கிழங்கு நறுக்கியது
  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • 1 டேபிள் ஸ்பூன் கான்ப்ளவர் மாவு
  • உப்பு கொஞ்சம்
  • 1 டீஸ்பூன் தனியா பொடி
  • ¼ டீஸ்பூன் கரம் மசாலா
  • 1 டீஸ்பூன் பெப்பர்

செய்முறை

  • முதலில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை நன்கு கோர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து நறுக்கிய உருளைக்கிழங்கை ஒரு பௌலில் போட்டு அத்துடன் கான்ப்ளவர் மாவு மற்றும் உப்பு சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுத்துக்கொள்ளவும்.
  • அதே வாணலில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் விட்டு அரைத்த மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  • பச்சை வாசனை போனதும் அத்துடன் தனியா பொடி, கரம் மசாலா, தேவைப்பட்டால் உப்பு சேர்த்து பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறி அதன் மேல் பெப்பர் பொடி சேர்த்து கலந்து பரிமாறவும்.

Nutrition

Serving: 450G | Calories: 150kcal | Protein: 10g | Saturated Fat: 0.5g | Cholesterol: 0.2mg | Potassium: 175mg | Sugar: 0.5g