- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- andhra, Indian
- Course
- Side Dish
வெண்டைக்காய் என்றாலே வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ஐய்யய வழவழ கொழகொழன்னு என்று மூஞ்சியை தூக்குவார்கள். ஆனால் வெண்டைக்காயில் உள்ள நன்மைகள் ஏராளம். வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய் நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும். வெண்டைக்காயின் நன்மைகளின் சில தான். இன்னும் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். ஒரே மாதிரியான வெண்டைக்காய் பொரியல், சாம்பார் என்ற உணவை சாப்பிட்டு அலுத்துக் விடுகிறோம்.
நம் வாழ்வில் எப்படி மசாலா தேவைப்படுகிறதோ, அதே போல சுவையிலும் மசாலா தேவை. நீங்கள் அனைவரும் வெண்டைக்காய் வறுவல் சாப்பிட்டிருப்பீர்கள். அதனால் ஆந்திரா ஸ்டைலில் ஒரு முறை இந்த வெண்டைக்காய் வெல்லுல்லி காரம் ஒருமுறை செய்து பாருங்கள். பொதுவாக ஆந்திரா உணவுகள் என்றாலே மிகவும் பிரபலமான ஒன்று. ஏனென்றால் அங்கு சமைக்கப்படும் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும்.
எல்லோரும் விரும்பி சாப்பிட கூடிய வகையில் இருக்கும். அந்த வகையில் ஆந்திரா ஸ்டைலில் வெண்டைக்காய் வைத்து இது போன்று ரெசிபி செய்து பாருங்கள். வீட்டில் உள்ளவர்களெல்லாம் அசந்து போய்டுவார்கள். அப்புறம் இந்த வெண்டைக்காய் மாசாலாவும் காலியாகிவிடும், சோறும் காலியாகி விடும். இப்போது சுவையான வெண்டைக்காயை கொண்டு வெண்டைக்காய் வெல்லுல்லி காரம் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : கிராமத்து வெண்டைக்காய் காரக் குழம்பு
Ingredients
Method
முதலில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து அதனுடன் வெங்காயம், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும். பின் நாம் வறுத்து வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து நன்கு வதக்கி கொத்தமல்லி தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான வெண்டைக்காய் வெல்லுல்லி காரம் தயார்.






