சுக்கை காட்டிலும் பெரிய மருந்து இல்லை ! சுக்கின் மருத்துவ பயன்கள் !

- Advertisement -

நம் முன்னோர்கள் எதையும் நேரடியாக நம்மிடம் சொல்லிவிட்டு போகவில்லை. ஆனால் நம் வீட்டில் உபயோகப்படுத்தும் ஒவ்வொரு பொருட்களின் பின்னால் அவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கும் பொருள்களாக தான் இருக்கும். நாம் தான் அந்த பொருட்களின் மருத்துவ பயன்கள் பற்றி எல்லாம் தெரியாமல் சிறு சிறு பிரச்சனைகள் எல்லாம் மருத்துவமனைகளை நோக்கி ஓடிக் கொண்டு ரசாயனம் கலந்த மாத்திரைகளை சாப்பிடுகிறோம். அந்த வகையில் நம் வீட்டில் இருக்கும் அதீத மருத்துவ பயன்கள் கொண்டது தான் சுக்கு. இதை பற்றி தெளிவாக உங்களுக்கு எடுத்து கூறுகிறேன் பார்த்துக் கொள்ளுங்கள்.

-விளம்பரம்-

வாந்தி, குமட்டல் மற்றும் தொன்டை கட்டு

தொண்டை கட்டிக்கொண்டு கரகர என்ற குரலோடு பேசும்போது தொண்டையில் வலி ஏற்பட்டு கஷ்டப்படுகிறீர்களா? அப்போது சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து கொள்ளுங்கள். அரைத்த பேஸ்ட்டை
தொண்டையில் பூசினால் விரைவில் தொண்டை கட்டியது சரியாகிவிடும். சிலருக்கு பஸ், கார் போன்ற வாகனங்களில் பயணம் செய்யும் போது தொடர்ந்து வாந்தி, குமட்டல் வந்து கொண்டே இருக்கும் அவர்கள் சுக்குடன் சிறிது துளசி இலையை சேர்த்து வாயில் போட்டு மென்று தின்றால் இது போன்ற பிரச்சனைகள் தீர்ந்துவிடும்

- Advertisement -

சளி,பித்தம் குணமாக

உங்களுக்கு இருக்கும் கடுமையான சளி பிரச்சனைக்கு விரைவில் தீர்வு வேண்டுமா. அப்பொழுது சுக்கு, மிளகு, திப்பிலி, தனியா சித்திரத்தை இவை அனைத்தையும் சேர்த்து கசாயம் செய்து அந்த கசாயத்தை தினசரி இரண்டு வேலை பருகி வந்தால் மூன்றே நாட்களில் சளி குணமாகிவிடும். மேலும் சுக்கை பட்டு போல் பொடி செய்து எலுமிச்சை சாறுடன் சேர்த்து கலந்து குடித்து வந்தால் நம் உடலில் உள்ள பித்தம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் தீருவதற்கு உதவியாக இருக்கும்.

இதையும் படியுங்கள் : உடம்பில் உள்ள கழிவுகளை நீக்க எளிய வழி!

சுறுசுறுப்பாக , போதை தெளிய

அதிக அளவில் மது குடித்துவிட்டு போதையில் இருப்பவர்களை தெளிய வைப்பதற்கு சுக்குடன், தனியாவே சேர்த்து சிறிதளவு நீர் விட்டு மிக்ஸி ஜாரில் போட்டு மையாக அரைத்து அதை சாப்பிட்டால் குடி போதை தெளிந்து விடும். மேலும் உடம்பில் ஏற்படும் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக இருப்பதற்கு சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து சுக்குநீர் காட்சி குடித்து வந்தால் இதற்கு தீர்வாக இருக்கும்.

-விளம்பரம்-

மூலநோய், மலக்குடல் சுத்தமாக

சுக்கு மலக்குடல் உள்ள கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது ஆம் சிறிதளவு சுக்கு எடுத்து அதை சின்ன வெங்காயத்துடன் மிக்ஸியில் போட்டு அரைத்து சாப்பிட்டால் மலக்குடலில் உள்ள கிருமிகளை முற்றிலுமாக அழைத்து சுத்தப்படுத்திவிடும் மேலும் மூல நோய் தீருவதற்காக கொத்தமல்லி இட்டு கசாயம் செய்து அதனுடன் சுக்கும் சேர்த்து பருகி வந்தால் மூல நோய்க்கும் மருந்தாக பயன்படும்

இதையும் படியுங்கள் : பூண்டின் நன்மைகள் பற்றி தெரியுமா?

அலர்ஜி, மூட்டு வலி

உங்களுக்கு கை, கால், மூட்டு வலி பிரச்சனைகள் அதிகமாக இருக்கிறது என்றால் சுக்குடன் பாலை சேர்த்து மென்மையாக அரைத்து அதை கடாயில் போட்டு நன்கு கிளறிவிட்டு சூடாகி கொள்ளவும். பின்பு கடாயை இறக்கி சூடு ஆற விடவும் சிறிது சூடு இருக்கும்போதே அதை எடுத்து கை கால் மூட்டுகளில் வலி உள்ள பகுதிகளில் தேய்த்து கொள்ளுங்கள் இது சிறந்த மருந்தாக இருக்கும். அலர்ஜி ஏதேனும் வந்தால் சுக்குடன் சிறிதளவு வெந்தயம் சேர்த்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் போதும் விரைவில் அலர்ஜி குணமாகிவிடும்.

-விளம்பரம்-

தலைவலி, வாயு தொல்லை

தலைவலி பிரச்சனை உள்ளவர்கள் சொக்குடன் சிறிதளவு நீர் சேர்த்துக் கொண்டு அரைத்து பேஸ்ட் போல் தயார் செய்து அதை தலையில் பூசி வந்தால் தலைவலி குணமாகிவிடும் மேலும் வாயு தொல்லை நீங்குவதற்கு சிறிது அளவு சுக்கு கூட வெற்றிலையை சேர்த்து மென்று சாப்பிட்டால் வாயு தொல்லை சரியாகிவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here