பாகற்காய் உடலுக்கு நன்மை பயக்கும் மிகவும் ஆரோக்கியமான காய்கறி. இதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் புழு, பூச்சிகள் அனைத்தும் அழிந்துவிடும். பொதுவாக பாகற்காயை புளிக்குழம்பு அல்லது பொரியல் செய்து சாப்பிடுவோம். ஆனால் பாகற்காயைக் கொண்டு அற்புதமான மசாலா செய்யலாம். இந்த மசாலா சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். பாகற்காய் பலருக்கும் பிடிக்காத காயாக கருதப்படக் கூடிய ஒன்று. பாகற்காய் என்றாலே பெரும்பாலும் முகம் சுழிப்பவர்கள் தான் அதிகம். ஆனால் பாகற்காயில் மருத்துவ பலன்கள் அதிகம் உள்ளது. ஆனால் பாகற்காயின் உடலுக்கு தேவையான பல்வேறு நன்மைகள் ஒளிந்து இருக்கிறது.
உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பாகற்காயை சமையலில் சேர்ப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கிறது. உடலில் சர்க்கரையின் அளவை சமன் செய்கிறது. அதுமட்டுமன்றி, சிறுநீரகல், கல்லீரலை சுத்தம் செய்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். குடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. இந்த பாகற்காயின் கசப்பு சுவையின் காரணமாக பலரும் இந்த காயை ஒதுக்கி வைத்து விடுவர். குறிப்பாக குழந்தைகள் பாகற்காயை அறவே தொட மாட்டார்கள். ஆனால் ஒரு முறை பாகற்காயை இப்படி மசாலா வைத்து சாப்பிட்டு பாருங்கள் அதன் பிறகு யாரும் பாகற்காயை ஒதுக்க மாட்டார்கள். பாகற்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பாகற்காய் மசாலா குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் கசப்பு அதிகம் தெரியாமல் இருக்கும்.
பாகற்காய் மசாலா | Bitter Gourd Masala Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
- 1 வாணலி
தேவையான பொருட்கள்
- 2 பெரிய பாகற்காய்
- 1 கப் நறுக்கிய பெரிய வெங்காயம்
- 1/4 கப் தக்காளி விழுது
- 1/4 கப் கடலை மாவு
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து பாகற்காய் மற்றும் உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து கடலை மாவை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு பவுளில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது மற்றும் தக்காளி விழுது, கடலை மாவு, உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கலந்து கொள்ளவும். பின் இந்த மசாலாவை பாகற்காயின் நடுவில் வைக்கவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் மீதமுள்ள மசாலா தூள் மற்றும் பாகற்காய் சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் விட்டு 5 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து வதக்கவும்.
- பாகற்காயுடன் மசாலா ஒன்று சேர வெந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான பாகற்காய் மசாலா தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : பாகற்காய் பிடிக்காதவங்க கூட இந்த பாகற்காய் சிப்ஸ் விரும்பி சாப்பிடுவாங்க!