Home சைவம் இரவு டிபனுக்குமொறு மொறுனு கருப்பு உளுந்து பூரி இப்படி செஞ்சி பாருங்க! 2 பூரி அதிகமாவே...

இரவு டிபனுக்குமொறு மொறுனு கருப்பு உளுந்து பூரி இப்படி செஞ்சி பாருங்க! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!

பூரி அப்படின்னாலே நமக்கு ஞாபகம் வருது மைதா மாவும் ,கோதுமை மாவு தான். இன்னும் நம்ம சொல்லப்போனால் நிறைய மாவுகளை கலந்து பூரி எல்லாம் போட்டுட்டு இருக்காங்க.ஆனாலும் இப்போ நம்ம போட போற பூரி ரொம்பவே புதுவிதமான ஒரு பூரி. இந்த பூரிய எதுல பண்ண போறோம் அப்படின்னா கருப்பு உளுந்த சேர்த்து பண்ண போறோம்.

-விளம்பரம்-

இந்த கருப்பு உளுந்து உடலுக்கு ரொம்பவே நல்லது நம்ம தீட்டப்படுற வெள்ளை உளுந்து தான் இப்போ அதிகமா பயன்படுத்திட்டு இருக்கோம். இந்த கருப்பு உளுந்து ஊற வைத்து தோல் நீக்கி கழுவுறதுக்கு ரொம்பவே சோம்பேறித்தனம் பட்டு கிட்ட ஆனா அந்த கருப்பு உளுந்து ஓட தோலுல தான் அதிகமான சத்துக்கள் இருக்கு. அதனால இந்த கருப்பு உளுந்த எப்பவுமே நம்ம உணவுல சேர்த்துக்கணும். ஏதோ ஒரு வகையில் இந்த கருப்பு உளுந்து நம்ம உணவில் சேர்த்து கொண்டோம் அப்படின்னா நமக்கு  அதிக அளவு புரதச்சத்தும் , இரும்பு சத்து அதிகமாக கிடைக்கும்.

ரொம்ப ரொம்ப முக்கியம் இந்த கருப்பு உளுந்துல நம்ம உணவு செய்யறதுக்கு கஷ்டமா இருந்துச்சுன்னா அதுல இட்லி பொடி மாதிரி செய்து வச்சு நம்ம சாப்பிடுவது ரொம்பவே நல்லது. அப்படி ஏதாவது ஒரு வகைல அந்த கருப்பு உளுந்து நம்ம உணவில் சேர்த்துக்கணும். வாங்க இப்போது எப்படி அந்த கருப்பு உளுந்து பூரி செய்யலாமுனு பார்க்கலாம்.

Print
3 from 1 vote

கருப்பு உளுந்து பூரி | Black Urad dal Poori Recipe In Tamil

கருப்பு உளுந்துஉடலுக்கு ரொம்பவே நல்லது நம்ம தீட்டப்படுற வெள்ளை உளுந்து தான் இப்போ அதிகமா பயன்படுத்திட்டுஇருக்கோம். இந்த கருப்பு உளுந்து ஊற வைத்து தோல் நீக்கி கழுவுறதுக்கு ரொம்பவே சோம்பேறித்தனம்பட்டு கிட்ட ஆனா அந்த கருப்பு உளுந்து ஓட தோலுல தான் அதிகமான சத்துக்கள் இருக்கு. அதனாலஇந்த கருப்பு உளுந்த எப்பவுமே நம்ம உணவுல சேர்த்துக்கணும். ஏதோ ஒரு வகையில் இந்த கருப்புஉளுந்து நம்ம உணவில் சேர்த்து கொண்டோம் அப்படின்னா நமக்கு  அதிக அளவு புரதச்சத்தும் , இரும்பு சத்து அதிகமாககிடைக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Black Urad Poori
Yield: 4
Calories: 350kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் கோதுமை மாவு
  • 1 கப் உளுந்து
  • 2 பச்சைமிளகாய்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கருப்பு உளுந்தை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இந்த கருப்பு உளுந்து முழு உளுந்தாகஇருந்தால் முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும். உடைத்த கருப்பு உளுந்தாக இருந்தால்மூன்று மணி நேரம் ஊற வைத்தால் போதுமானது.
  • பிறகு கருப்பு உளுந்தை லேசாக கழுவி விட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.அதனுடன் பச்சைமிளகாய் , சீரகம், மிளகு, இஞ்சி பூண்டு விழுது தேவையான அளவு உப்பு சேர்த்து விழுதாகஅரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை சேர்த்து அரைத்து வைத்த கருப்பு உளுந்தை சேர்த்து சப்பாத்திமாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிதளவு சேர்த்து நன்றாகபிசைந்து கொள்ளவும்.
     
  • மாவை பிசைந்த பிறகு ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்து வைத்து விடவும்.பிறகு பூரி சுடுவதற்காகஅடுப்பில் ஒரு கடாயை வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.
  • எண்ணெய் காய்வதற்குள் பிசைந்து வைத்துள்ள கருப்பு உளுந்துபூரி மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரி இடும் கல்லில் வைத்து பூரிகளாக தேய்த்துஎடுத்துக் கொள்ளவும்.
  • தேய்த்து எடுத்து வைத்துள்ள பூரிகளை காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுத்தால்சுவையான ஆரோக்கியமிக்க கருப்பு உளுந்து பூரி தயார்.
  • இந்த கருப்பு உளுந்து பூரியை  சிக்கன் கிரேவியோடு சாப்பிட்டால்அருமையான ருசியில் இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 350kcal | Carbohydrates: 58.5g | Protein: 7g | Fat: 0.02g | Sodium: 3mg | Potassium: 55mg | Fiber: 3g | Calcium: 20mg