Advertisement
ஸ்வீட்ஸ்

தித்திக்கும் சுவையில் பிரெட் அல்வா செய்வது எப்படி ?

Advertisement

எந்தவித நல்ல காரியங்களும் மற்றும் சுப நிகழ்ச்சிகளும் நடந்தாலும் இனிப்பில்லாமல் அந்த நிகழ்ச்சி நடக்காது. நாம் பொதுவாக இனிப்பு உணவுகளை நாம் கடைகளில் சென்று வாங்கி சாப்பிடுவோம். ஆனால் இனிப்பு சாப்பிடுவதற்கு கடைகளில் தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. நாம் நம் வீட்டிலேயே இனிப்பு உணவுகள் செய்து சாப்பிடலாம்

இதையும் படியுங்கள் : நாவில் பட்ட உடன் கரையும் வாழைப்பழ அல்வா செய்வது எப்படி ?

Advertisement

அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது தித்திக்கும் பிரெட் அல்வா. இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த பிரெட் அல்வாவை செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாம்பிடுவார்கள். அதனால் இன்று இந்த தித்திக்கும் சுவையுடன் பிரெட் அல்வா செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்

பிரெட் அல்வா | Bread Halwa Recipe in Tamil

Print Recipe
பொதுவாக இனிப்பு உணவுகளை நாம் கடைகளில் சென்று வாங்கி சாப்பிடுவோம். ஆனால் இனிப்பு சாப்பிடுவதற்கு கடைகளில் தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. நாம் நம் வீட்டிலேயே இனிப்பு உணவுகள் செய்து சாப்பிடலாம் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது தித்திக்கும் பிரெட் அல்வா. இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த பிரெட் அல்வாவை செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாம்பிடுவார்கள்.
Course sweets
Cuisine Indian, TAMIL
Keyword Halwa, அல்வா
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 4 People
Calories 81

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
    Advertisement

Ingredients

  • 4 துண்டு பிரெட்
  • 10 முந்திரி பருப்பு
  • 5 உலர் திராட்சை
  • எண்ணெய் தேவையான அளவு
  • 4 tbsp நெய்
  • ¼ கப் தண்ணீர்
  • ¾ கப் சர்க்கரை
  • 2 tbsp பால்கோவா
  • 4 tbsp பால்
  • ¼ tsp ஏலக்காய் தூள்

Instructions

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து நெய் உருகியதும் 10 முந்திரி பருப்பு மற்றும் ஐந்து உலர்ந்த திராட்சை சேர்த்து நன்றாக வறுத்து பின் தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
  • அதன் பின்பு நாம் எடுத்து கொண்ட நான்கு பிரெட்டை துண்டுகளை நறுக்கி கொள்ளவும். பின் ஒரு
    Advertisement
    கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய், இரண்டு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து நெய் சேர்க்கவும்.
  • பின் நெய் உருகி காய்ந்ததும், நாம் நறுக்கிய பிரெட் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரிதெடுங்கள். பின் மீண்டும் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் முக்கால் கப் அளவு சர்க்கரை மற்றும் கால் கப் தண்ணீர் சேர்க்கவும்.
  • பின் சர்க்கரை நன்கு கரைந்து கொதித்து வரும் பிறகு முதலில் நாம் பொரித்த பிரெட் துண்டுகளைச் சேர்த்துக் கிளறி விடவும். அதன் பின் இதனுடன் கால் கப் அளவு காய்ச்சிய குளிர வைத்த பால் சேர்த்து கிளறி விடவும்.
  • பின் ஒரு பவுளில் 3 டேபிள்ஸ்பூன் பால்கோவா உடன் 2 டேபிள்ஸ்பூன் சூடான பால் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். பின் கடாயில் இந்த கலவை மற்றும் கால் டீஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  • பின் பிரெட் அல்வா கடாயில் ஒட்டாமல் கெட்டியாக அல்வா பதத்திற்கு வந்தவுடன் நாம் முதலில் வறுத்த முந்திரி, உலர் திராட்சை சேர்த்து கிளறி விட்டு கொள்ளவும். அவ்வளவு தான் சுவையான பிரெட் அல்வா தயார்.

Nutrition

Serving: 500gram | Calories: 81kcal | Carbohydrates: 32g | Protein: 14g | Fat: 1g | Saturated Fat: 0.2g | Cholesterol: 12mg | Sodium: 3mg | Potassium: 147mg | Fiber: 1g | Sugar: 8g
Advertisement
Prem Kumar

Recent Posts

வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய…

2 மணி நேரங்கள் ago

அருமையான பிரயாணி சாப்பிட ருசியான மலபார் சிக்கன் பிரியாணி இப்படி வீட்டில் ஈஸியாக செய்து பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…

7 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…

10 மணி நேரங்கள் ago

சேமியா பொங்கல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க சேமியா பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க!

சேமியா உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் பொங்கல் செய்து கொடுத்தால் ரொம்பவே…

11 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு ருசியான டர்கிஷ் ப்ரெட் இப்படி செய்து கொடுங்க! டக்குனு காலை டிபன் ரெடி செஞ்சிடலாம்!!

டர்கிஷ் பிரட் டோஸ்ட் வழக்கமான டிபன் வகைகளில் இருந்து சற்றே வேறுபட்டது. இதனை மிகவும் சுலபமாக 10 முதல் 15…

11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 மே 2024!

மேஷம் இன்று வர்த்தகர்கள் வர்த்தகத்தில் இழப்புகளை சந்திக்க நேரிடும். பேரக் குழந்தைகள் உங்கள் மகிழ்ச்சிக்கு காரணமாக இருப்பார்கள். சிலருக்கு வேலை…

14 மணி நேரங்கள் ago