Advertisement
சைவம்

காரசாரமான பன்னீர் குடைமிளகாய் பெப்பர் ஃப்ரை செய்வது எப்படி ?

Advertisement

இன்று நாம் மதிய உணவு உடன் அல்லது தயிர் சாதம், ரசம் சாதம், பால் சாதம் போன்ற உணவுகளுடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் பன்னீர் குடைமிளகாய் பெப்பர் ஃப்ரை பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இதுபோல் புதுவிதமாக இந்த பன்னீர் பெப்பர் ஃப்ரை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் இன்னும் வேண்டும்

இதையும் படியுங்கள் : சுவையான குடைமிளகாய் போண்டா செய்வது எப்படி ?

Advertisement

என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இந்த பன்னீர் குடைமிளகாய் பெப்பர் ஃப்ரை மிகவும் அட்டகாசமான சுவையில் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அடுத்த முறையும் இது போல் உங்களை செய்ய சொல்லி வற்புறுத்துவார்கள். அதனால் இன்று இந்த பன்னீர் குடைமிளகாய் பெப்பர் ஃப்ரை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

பன்னீர் குடைமிளகாய் பெப்பர் ப்ரை | Paneer Kudimilagai Pepper Fry

Print Recipe
இதுபோல் புதுவிதமாக இந்த பன்னீர் பெப்பர் ஃப்ரை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இந்த பன்னீர் குடைமிளகாய் பெப்பர் ஃப்ரை மிகவும் அட்டகாசமான சுவையில் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அடுத்த முறையும் இது போல் உங்களை செய்ய சொல்லி வற்புறுத்துவார்கள்.
Course dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Paneer Kudaimilagai, பன்னீர் குடைமிளகாய்
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings
Advertisement
4 people
Calories 194

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1 கப் பன்னீர் நறுக்கியது
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1 குடை மிளகாய் பொடியாக நறுக்கியது
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 3 பச்சை மிளகாய் கீறிது
  • 2 tsp மிளகு தூள்
  • 1  கொத்து கருவேப்பிலை
  • ½ tsp கடுகு
  • 1 tsp உளுந்தபருப்பு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் நாம் நறுக்கி வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்து பின் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
    Advertisement
  • பின் மீன்டும் கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி. பின் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு தாளித்து கொள்ளவும். பின் இதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
  • பின் இதனுடன் நாம் முதலில் வறுத்து வைத்திருக்கும் பன்னீர் துண்டுகள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு வதக்கி கொள்ளுங்கள். பின் இதனுடன் இரண்டு டீஸ்பூன் மிளகு தூள் சேர்த்து கிளறி விடவும்.
  • பின் நாம் சேர்த்த பன்னீர் நன்கு வதங்கியதும் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் குடைமிளகாயை சேர்த்து ஒரு இரண்டு நிமிடங்கள் வதக்கி கடாயை கிழே இறக்கி வைத்து விடுங்கள்.
  • பின் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் நாம் கீறிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி பன்னீருடன் சேர்த்து கொள்ளவும் அவ்வளவு தான் காரசாரமான சுவையில் பன்னீர் குடைமிளகாய் பெ்பர் ப்ரை இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 450gram | Calories: 194kcal | Carbohydrates: 42g | Protein: 38g | Fat: 0.8g | Saturated Fat: 0.01g | Cholesterol: 11mg | Sodium: 2mg | Potassium: 472mg | Fiber: 4g | Sugar: 2g | Calcium: 21mg | Iron: 1.7mg
Advertisement
Prem Kumar

Recent Posts

சப்போட்டா சாக்லேட் மில்க் ஷேக் இப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க

ஆப்பிள் ஆரஞ்சு கொய்யா பழம் மாதுளை வாழைப்பழம் சப்போட்டா பழம் அப்படின்னு ஏராளமான பழங்கள் இருந்தாலும் கூட ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு…

1 மணி நேரம் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் அடுத்தமுறை மட்டன் வாங்கினால் ஆந்திரா மட்டன் கிரேவி இப்படி செய்யுங்க!

அசைவ வகைகளிலே ஆரோக்கியம் என்பதால் அடிக்கடி செய்வது இந்த மட்டன் தான். பலரும் இந்த மட்டனுக்கு அடிமையாகவே இருக்கிறார்கள். அந்த…

2 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை என்று தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளி பொருட்களை வாங்கலாமா என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்

ஒவ்வொரு மாதத்திலும் திருதியை திதி வந்தாலும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய இந்த திதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அட்சய என்பதற்கு…

4 மணி நேரங்கள் ago

இனி காலை உணவாக மொறு மொறுவென்று இந்த பாலக் கீரை அடை தோசை செய்து பாருங்கள் இதன்‌ சுவையை விவரிக்க வார்த்தைகளே இருக்காது!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 05 மே 2024!

மேஷம் இது மிக அழாகான மற்றும் சிறப்பான நாளாகும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஆதரவு தருவதால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய…

8 மணி நேரங்கள் ago

குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட…

17 மணி நேரங்கள் ago