வெங்காயம் தக்காளி இல்லாம நம்ம எந்த ஒரு ரெசிபியுமே செய்ய முடியாதுன்னு நினைப்போம் ஆனா கண்டிப்பா கிடையாது. வெங்காயம் தக்காளி இல்லாம நம்ம நிறைய ரெசிபிஸ் செய்யலாம் அதுல பெரும்பாலும் எல்லாத்துக்கும் தெரிஞ்சதினால் மோர் குழம்பு. மோர் குழம்பு வைக்கிறதுக்கு கூட நமக்கு சின்ன வெங்காயம் தேவைப்படும் ஆனா எதுவுமே இல்லாத சமயத்துல சைடிஷ் இல்லனா மெயின் டிஷ்ஷாவே நீங்க இந்த சூப்பரான கொத்தமல்லி புளி கத்தரிக்காய் செய்யலாம். சாப்பிடுறதுக்கே அவ்ளோ ருசியா இருக்கும். கொத்தமல்லி உடம்புல இருக்கக்கூடிய தேவையில்லாத நச்சுக்களை வெளியேற்றி ரத்தத்தை சுத்தம் செய்யும். அந்த வகையில இந்த ரெசிபி செஞ்சு கொடுத்தீங்கன்னா கண்டிப்பா உடம்புக்கு ஆரோக்கியமானதா இருக்கும்.
கொத்தமல்லி ஏதாவது ஒரு டிஷ்ல போட்டா அத எடுத்து ஓரமா வச்சுட்டு தான் சாப்பிடுவோம் ஆனா இந்த ரெசிபில கொத்தமல்லிய அரைச்சு செய்றதால கண்டிப்பா கொத்தமல்லி ஓட சத்துக்கள் உடம்புல போய் சேரும். ரொம்ப ரொம்ப டேஸ்ட்டான இந்த ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல இருக்கறவங்களுக்கு செஞ்சு கொடுத்து அசத்துங்க. வெங்காயம் தக்காளி இல்ல ஆனா கத்திரிக்காய் இருக்கு அப்படின்னா இந்த ரெசிபியை சட்டுன்னு செஞ்சிடலாம். நல்லா சுட சுட இந்த ரெசிபி செஞ்சு சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிட அவ்வளவு ருசியா இருக்கும்.
பழைய சாதத்துக்கும் இந்த ரெசிபி ஒரு பெர்பெக்ட்டான காம்பினேஷனா இருக்கும். கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவை செஞ்சீங்கன்னா அடிக்கடி செய்வீங்க. இந்த டேஸ்டான கத்திரிக்காய் ரெசிபி செய்றதுக்கு நமக்கு ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் தான் தேவைப்படும். நிறைய பொருட்கள் தேவைப்படாது. சுவையான டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல இருக்கவங்களோட செஞ்சு சாப்பிட்டு என்ஜாய் பண்ணுங்க. வெங்காயம் தக்காளி இல்லையே கவலைப்படாதீங்க இன்னும் மழைக்காலத்துல வெளியில போய் வாங்க முடியலையே அப்படின்னு எதுவும் செய்யாமையும் இருக்காதீங்க.
இந்த சிம்பிளான ரெசிபியை செஞ்சு டேஸ்ட்டா சாப்பிடுங்க. கண்டிப்பா ஒரு தடவை செஞ்சுட்டீங்கன்னா அதுக்கு அப்புறம் வீட்ல இருக்குறவங்களே உங்கள அடிக்கடி செய்ய சொல்லி கேட்பாங்க. இது ரசம் சாதம் தயிர் சாதம் கலவை சாதம் லெமன் சாதத்துக்கும் சூப்பரா இருக்கும். புளிப்பு சுவை ரொம்ப பிடிக்கிறவங்களுக்கு கண்டிப்பா இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப ஃபேவரட்டா மாறிடும்.இப்ப வாங்க இந்த சுவையான கொத்தமல்லி புளி கத்தரிக்காய் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
கொத்தமல்லி புளி கத்தரிக்காய் | Brinjal Coriander Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1/4 கி கத்தரிக்காய்
- 1 கைப்பிடி கொத்தமல்லி தழை
- புளி பெரிய நெல்லிக்காய் அளவு
- 4 பச்சை மிளகாய்
- 4 பல் பூண்டு
- 1 துண்டு இஞ்சி
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்து நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு இஞ்சி கொத்தமல்லி இலைகள் புளி, சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து அதனையும் கத்திரிக்காயோடு சேர்த்து வதக்கவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து மூடி போட்டு 15 நிமிடம் நன்றாக வேக வைத்து இறக்கினால் சுவையான கொத்தமல்லி புளி கத்தரிக்காய் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசியான கத்தரிக்காய் மோர் குழம்பு சுட சுட சோறுடன் சாப்பிட பக்காவான ஒரு குழம்பு இது!