- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
பொதுவாக கத்தரிக்காய் என்றால் யாருக்கும் பிடிக்காது ஆனால் ஒரு சிலருக்கு கத்தரிக்காய் என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவர்களுக்காக தான் இந்த ரெசிபி. இதுவரை கத்திரிக்காய் வைத்து காரக்குழம்பு, கத்திரிக்காய் புளி கூட்டு, கத்திரிக்காய் பொரியல் இதெல்லாம் செய்து சாப்பிட்டு இருப்போம் அவ்ளோ ருசியா இருக்கும். கத்திரிக்காய் பிடிக்காதவங்களுக்கு என்ன செய்து கொடுத்தாலும் விரும்பி சாப்பிடமாட்டார்கள்.
அவர்களுக்கு இந்த கத்திரிக்காய் பூண்டு வறுவல் செய்து கொடுங்கள் கண்டிப்பா விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ரெசிபியில் நாம் மசாலா பொருட்கள் எல்லாம் சேர்த்து செய்வதால் கமகமன்னு மணத்துடனும் ருசியான சுவையுடனும் இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை மிஸ் பண்ணிடாமல் ஒரு தடவை செய்து பாருங்கள். அதனை தயிர் சாதம், தக்காளி சாதம், ரசம் சாதம், பருப்பு சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே சைடு டிஷ்ஷா வைத்து சாப்பிடலாம்.
இந்த ரெசிபியை ஒரு தடவை செய்து பாருங்கள் அதுக்கப்புறம் நீங்களே அடிக்கடி செய்வீர்கள் அந்த அளவுக்கு நாக்கில் எச்சில் ஊறும். இந்த ரெசிபியை பத்து நிமிடங்களில் சூப்பராக செய்து முடித்திடலாம். உங்களுக்கு நேரம் குறைவாக இருக்கும் போது இந்த கத்திரிக்காய் பூண்டு வறுவலை சட்டுன்னு பத்து நிமிடங்களில் செய்து முடித்திடலாம். இப்போது சுவையான கத்திரிக்காய் பூண்டு வறுவல் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : கத்தரிக்காய் தட்டைப்பயிறு பொரியல்
Ingredients
Method
முதலில் கத்திரிக்காயை வட்ட வட்டமாக நறுக்கி தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு பவுளில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, மல்லி தூள், கரம் மசாலா தூள், அரிசி மாவு, இடித்த பூண்டு, எலுமிச்சை சாறு, எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் கத்திரிக்காய் சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
பின் ஒரு தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் இந்த கத்திரிக்காயை சேர்த்து இரண்டு பக்கமும் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான கத்திரிக்காய் பூண்டு வறுவல் தயார்.






