Advertisement
சைவம்

இனி கத்தரிக்காய் கார குழம்பு இப்படி ட்ரை பண்ணி பாருங்க! ஒரு சட்டி குழம்பும் ஒரு வேளையில் காலியாகும்!

Advertisement

என்னதான் அசைவ உணவுகளைக் கொண்டு கிரேவி, குழம்பு மற்றும் வறுவல் என செய்து சாப்பிட்டாலும். அதற்கு இணையாக சைவ குழம்பு, கிரேவி, பொரியல் மற்றும் அவியல் என சைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள் அதிகம் உள்ளனர். அதிலும் இன்று நாம் அதிக நபர்கள் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு கார குழம்பு பற்றி தான் பார்க்க இருக்கிறோம் அதிலும் கத்தரிக்காய் கார குழம்பு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.

இதையும் படியுங்கள் : காரசாரமான வறுத்து அரைத்த கோழி குழம்பு செய்வது எப்படி ?

Advertisement

ஆகையால் இந்த கத்தரிக்காய் காரக்குழம்பு செய்வது பற்றி தான் பார்க்க போகிறோம். இதை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு மதியம் சுடான சோறுடன் சேர்த்து பரிமாறினால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு கார குழம்பாக இருக்கும் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த கத்தரிக்காய் கார குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

கத்தரிக்காய் கார குழம்பு | Brinjal Kara Kulambu Recipe in Tamil

Print Recipe
இன்று நாம் அதிக நபர்கள் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு கார குழம்பு பற்றி தான் பார்க்க இருக்கிறோம் அதிலும் கத்தரிக்காய் கார குழம்பு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. ஆகையால் இந்த கத்தரிக்காய் காரக்குழம்பு செய்வது பற்றி தான் பார்க்க போகிறோம். இதை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு மதியம் சுடான சோறுடன் சேர்த்து பரிமாறினால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு கார குழம்பாக இருக்கும் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும்.
Advertisement
Course LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Brinjal, கத்தரிக்காய்
Prep Time 20 minutes
Cook Time 30 minutes
Total Time 50 minutes
Servings 4 people
Calories 264

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 பவுள்

Ingredients

  • 6 கத்தரிக்காய் நறுக்கியதூ
  • 1 குழி கரண்டி எண்ணெய்
  • ¼ tsp கடுகு
  • ¼ tsp சீரகம்
  • ¼ tsp உளுந்த பருப்பு
  • ¼ tsp கடைலை பருப்பு
  • ½ tsp மஞ்சள் தூள்
  • 1 tsp மிளகாய் தூள்
  • 2 tsp மல்லி தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 50 கிராம் சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி நறுக்கியது
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 கைப்பிடி கொத்த மல்லி
  • ½ கப் புளி கரைசல்

Instructions

  • முதலில் கத்தரிக்காயை துண்டுகளாக நறுக்கி வைக்கவும், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • பின் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  • அதன் பின் வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கி மசிந்து வந்ததும். இதனுடன் நறுக்கிய கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்.
  • பின் கத்தரிக்காய் நன்கு வதங்காயதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், தேவையான உப்பு, கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு பிரட்டி விட்டு தண்ணீர் சிறிது ஊற்றி கொதிக்க விடவும்.
  • பின் மசாலா நன்கு வதங்கி வாசனை போகி குழம்பு நன்கு கொதித்து, கத்திரிக்காய் வெந்ததும், புளி கரைசல் சேர்த்து கிளறி, ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும்வரை கொதிக்கவிட்டு இறக்கி விடவும்.
  • நீங்கள் குழம்புடன் மசாலாதூள் வகைகள் சேர்க்கும் போது இதனுடன் தயிர் 2 டீஸ்பூன் சேர்த்து கத்தரிக்காய் கார குழம்பு செய்தால் இதன் சுவை தாறுமாறாக இருக்கும்.

Nutrition

Serving: 600gram | Calories: 264kcal | Carbohydrates: 7g | Protein: 17g | Fat: 1.8g | Saturated Fat: 0.6g | Cholesterol: 12mg | Sodium: 8mg | Potassium: 382mg | Fiber: 8g | Sugar: 0.5g | Vitamin A: 11IU | Vitamin C: 8mg | Iron: 3mg
Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

3 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

3 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

5 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

5 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

9 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

9 மணி நேரங்கள் ago