- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
இட்லி, தோசைக்கு எப்பொழுது ஒரே மாதிரி சாம்பார், சட்னி என்று வைத்து சாப்பிடாமல், இது போன்று கத்திரி மாங்காய் தொக்கு செய்து சாப்பிட்டு பாருங்க ரொம்ப சூப்பரா இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி இந்த தொக்கு செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Ingredients
Method
முதலில் மாங்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
அடுத்து அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். [ வெங்காயம் சிவக்க கூடாது.]
பிறகு அத்துடன் நறுக்கிய கத்திரிக்காய், தேவையான அளவு உப்பு சேர்த்து குறைவான தீயில் வதக்கவும். சிறிது நேரம் கழித்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேக வைக்கவும்.
கத்திரிக்காய் வெந்ததும் துருவிய மாங்காய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி மாங்காய் வெந்ததும் அதில் கொத்தமல்லி தலை தூவி இறக்கவும்.






