Advertisement
சைவம்

ருசியான பட்டர் இறால் முட்டை மசாலா ஒரு தரம் இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

Advertisement

எனது நான் வெஜ் நிறைய இருந்தாலும் இப்போ கொஞ்ச நாளாவே எல்லாருக்கும் பிரான்ஸ் அப்படின்னு சொல்லப்படுற இறால் ரொம்பவே பிடிக்குது. இந்த இறால் வச்சு நம்ம எக்கச்சக்கமான உணவுகளை செய்ய முடியும். இறால் 65 ,இறால் குழம்பு, இறால் மசாலா, இறால் சில்லி, இறால் பெப்பர் ப்ரை, அப்படின்னு நம்ம நிறைய உணவுகளை இறால் வச்சு செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் கொஞ்சம் டிஃபரண்டா பட்டர் இறால் முட்டை மசாலா செஞ்சு சாப்பிட போறோம்.

இதுல நம்ம பட்டர் சேர்த்து செய்றதால டேஸ்ட் ரொம்பவே ரிச்சாவும் ஹோட்டலில் கிடைக்கிற மாதிரியும் சூப்பரான டேஸ்டான நமக்கு இருக்கும். எல்லாருமே கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க என் குழந்தைங்க கூட சாப்பிடுவாங்க. இறாலை பிடிக்காது அப்படின்னு சொல்றவங்க கூட இந்த பட்டர் இறால் முட்டை மசாலாவை விரும்பி சாப்பிடுவதை நீங்கள் பார்க்கலாம். இந்த மசாலாவை நம்ம சாதம் இட்லி தோசை சப்பாத்தின்னு எல்லாத்துக்கும் சேர்த்து சாப்பிடலாம்.

Advertisement

எல்லாத்துக்கும் ஒரு சூப்பரான சைடு டிஷ்ஷா அருமையான சுவையில் இருக்கும். ஒருவேளை உங்ககிட்ட ரொம்பவே கம்மியான இறால் தான் இருக்கு அப்படின்னா நீங்க அந்த சமயத்துல இறால் கூட முட்டை சேர்த்து இந்த முட்டை மசாலாவை செஞ்சு சாப்பிட்டு பாக்கலாம். உங்களுக்கு நிறையவும் கிடைக்கும் அதே சமயத்தில் டேஸ்ட்டும் ரொம்ப சூப்பரா இருக்கும். இப்ப வாங்க டிஃபரண்டான இந்த பட்டர் இறால் முட்டை மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

பட்டர் இறால் முட்டை மசாலா | Butter Prawn Egg Masala

Print Recipe
இந்த இறால் வச்சு நம்ம எக்கச்சக்கமான உணவுகளை செய்ய முடியும். இறால் 65 , இறால் குழம்பு, இறால் மசாலா, இறால் சில்லி, இறால் பெப்பர் ப்ரை, அப்படின்னு நம்ம நிறைய உணவுகளை இறால் வச்சு செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் கொஞ்சம்
Advertisement
டிஃபரண்டா பட்டர் இறால் முட்டை மசாலா செஞ்சு சாப்பிட போறோம். எல்லாத்துக்கும் ஒரு சூப்பரான சைடு டிஷ்ஷா அருமையான சுவையில் இருக்கும். ஒருவேளை உங்ககிட்ட ரொம்பவே கம்மியான இறால் தான் இருக்கு அப்படின்னா நீங்க அந்த சமயத்துல இறால் கூட முட்டை சேர்த்து இந்த முட்டை மசாலாவை செஞ்சு சாப்பிட்டு பாக்கலாம். உங்களுக்கு நிறையவும் கிடைக்கும் அதே சமயத்தில் டேஸ்ட்டும் ரொம்ப சூப்பரா இருக்கும்.
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Butter prawn Egg Masala
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 300

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/4 கிலோ இறால்
  • 1 கப் பட்டர்
  • 4 முட்டை
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 பிரியாணி இலை
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1 கொத்து கருவேப்பிலை

Instructions

  • முதலில் முட்டையை வேக வைத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். இறாலை மஞ்சள் தூள் போட்டு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய்  சேர்த்துசோம்பு கருவேப்பிலை பட்டை கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
  • பிறகு பெரிய வெங்காயத்தை நறுக்கி அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  • பிறகு மஞ்சள் தோல் மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்க வேண்டும்.
  • ஒரு கொதி வந்தவுடன் இறாலை சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.பிறகு எடுத்து வைத்துள்ள பட்டர் மற்றும் முட்டையில் கோடு போட்டு அதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
  • இப்பொழுது ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு இறக்கினால் சுவையான பட்டர் இறால் முட்டை மசாலா தயார்.
     

Nutrition

Serving: 300g | Calories: 300kcal | Carbohydrates: 245g | Protein: 21g | Cholesterol: 1mg | Sodium: 233mg | Potassium: 3.2mg | Vitamin A: 13IU | Calcium: 23.34mg

இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊற தலப்பாகட்டி இறால் பிரியாணி இது போன்று வீட்டிலயே செஞ்சி பாருங்க!

Advertisement
Ramya

Recent Posts

வீட்டில் இருக்கும் சகல பண பிரச்சனையை சரி செய்ய இந்த ஒரு பொருள் உங்கள் கையில் இருந்தால் போதும்!

சிலரது வீட்டிற்குள் எப்போதும் சண்டையும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும். மனித வாழ்க்கை என்றாலே பிரச்சனை இல்லாமல் இருக்க முடியாது, வாழ்க்கையில்…

33 நிமிடங்கள் ago

வெயிலுக்கு இதமா மாம்பழ குச்சி ஐஸ் இப்படி வீட்டிலே செய்து பாருங்க! மாம்பழ சீசன் வந்துவிட்டது!

இந்த கொளுத்தும் வெயில் காலத்தில் மாம்பழ குச்சி ஐஸ் செய்தால், அதன் வரவேற்பு தனி தனி தான்.. வாங்க அப்படி…

41 நிமிடங்கள் ago

அபார திறமையினால் வாழ்க்கையில் உச்சம் தொடும் இந்த சில ராசிகளில் பிறந்த பெண்கள்!!

பொதுவாக அனைவரும் வெற்றிபெறத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இது அனைவருக்கும் இலகுவாக நடந்துவிடுவது கிடையாது. பன்னிரெண்டு ராசிகளில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு…

3 மணி நேரங்கள் ago

10 நிமிடத்தில் சுவையான மற்றும் ஆரோக்கியமான துளசி பிரைட் ரைஸை வீட்டிலேயே செய்து பாருங்கள் ருசி மிகவும் அபாரமாக இருக்கும்!!

பிரைட் ரைஸ் பிரியர்கள் பிரியாணி பிரியர்களை விட அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர். பிரியாணிக்கு இணையான ஒரு டிஷ்…

4 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு இதமா மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா இப்படி செய்து பாருங்க!

வெயில் காலங்களில் நாம் தாகத்தை அடக்குவதற்காக பல குளிர்பானங்கள் குடிப்போம் அந்த வகையில் நாம் குடிக்கும் பானங்களில் ஜிகர்தண்டாவும் ஒன்றுதான்.…

5 மணி நேரங்கள் ago

ஒரு முறை இறாலுடன் கத்தரிக்காய் சேர்த்து மணக்க மணக்க இப்படி குழம்பு வைத்து பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!

அசைவ சாப்பாடு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. எல்லோருக்கும் பிடித்தது மீன், கோழி, நண்டு, இறால் போன்றவை தான். அதிலும் இறால்…

7 மணி நேரங்கள் ago